இளையராஜா பாடியதால் இயற்கை பாவம் இருந்தது .
"தாய்மூகாம்பிகை" திரைப்படத்தில் ஒலித்தது தான் "ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ என்கின்ற பாடலை கேட்டு ,உண்மையில் கண் கலங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த பாடல். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், இளையராஜாவின் இசையும் அவருடைய குரலும் தான் என்றால் அது சற்றும் மிகையல்ல.
"ராஜாவின் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது. தாய் மூகாம்பிகை படத்தில் உள்ள ஜனனி ஜனனி என்கிற பக்தி பாடலை வேறு யாரு வேண்டுமானாலும் பாடியிருக்கலாம், அது அருமையாக தான் இருந்து இருக்கும். ஆனால் ராஜா பாடியதால் தான் அதில் ஒரு விதமான இயற்கை பாவம் இருந்தது ,என்று அதை பற்றி கவிஞர் வாலி பேசுகையில், கூறினார்.
0
Leave a Reply