கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இரவில் வெயிலின் புழுக்கம் இருப்பதை உணர முடியும்.எனவே இரவில் தூக்கமில்லாமல் பலரும் தவித்து வருகிறோம். நீங்கள் தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும்.தளர்வான, பருத்தி உடைகளை அணிந்து தூங்குவது சிறந்தது. அதேசமயம் தூங்குவதற்கு முன் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் '9013151515' என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம்
இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க, இன்னொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது திராட்சையின் விதைதான். இதை சாப்பிட்ட 48 மணி நேரத்திலேயே கேன்சர் செல்களை ,அழிக்கும் சக்தி இதற்குண்டு என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது
இந்திய அரசு அவசரகால எண்களை வெளியிட்டுள்ளது: கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: 102. சாலை விபத்து: 1073. மருத்துவ ஆலோசனை: 104. மற்றவருக்கான ஆம்புலன்ஸ்: 108.
கோயம்புத்தூர், புருக்ஃபீல்டு மாலில் 2 (Brookfield Mall) நடந்ததாக கூறப்படும் சம்பவம்:ஒரு பெண்ணிடம்'பெர்ஃப்யூம் மணம் பார்க்கலாமா?'என்று கேட்டு, வாசனை காட்டியதும் மயக்கமடைந்து உடமைகள் திருடப்பட்டதாக தகவல்.மால்கள், பார்க்கிங் பகுதிகளில் குறைந்த விலையில் பெர்ஃப்யூம் விற்பனை என்ற பெயரில் மயக்க மருந்து கலந்த திரவத்தை பயன்படுத்துவதாக எச்சரிக்கை.எனவே பெண்கள் அனைவரும்:அறிமுகமில்லாதவர்கள் கொடுக்கும் எந்த வாசனை திரவத்தையும் முகர வேண்டாம்.தனிமையான இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகமான நபர்களை கண்டால் உடனே. பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.எச்சரிக்கையாக இருப்பதே பாதுகாப்பு!
நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் அறிவிலோ அழகிலோ அந்தஸ்திலோ படிப்பிலோ பணத்திலோ இல்லை...மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் இருக்கிறது...உனக்கு மேலே உள்ளவனை பாத்து ஏங்காதே...உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே...உன்னை யாருடனும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு..தற்பெருமை பேசுபவரிடம் தரத்தை எதிர்பார்க்காதே...' பழகியவரிடம் பணத்தை எதிர்பார்க்காதே...பணக்காரர்களிடம் பாசத்தை எதிர்பார்க்காதே...உறவினர்களிடம் உண்மையை எதிர்பார்க்காதே... உலகத்திடம் எதையுமே நிரந்தரமாக எதிர்பார்க்காதே...'யாரயும் பழிவாங்க நினைக்காதே .கடந்து செல்ல கற்றுக்கொள்...'
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வழக்கத்தை விட 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்பம் நிலவும் எனப் புதிய ஆய்வில் எச்சரிக்கை.மேலும் கூடுதலாக 20 முதல் 40 இரவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பத்துடன் காணப்படும் என்றும், கனமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் 10 முதல் 30 நாட்கள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் CEEW அமைப்பு கணிப்பு.தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் மற்ற பகுதிகளை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிப்பு.
2 லட்சத்திற்கு மேல் - தங்கம் வாங்கினால் -PAN கார்டு கட்டாயம். ₹10 லட்சத்திற்கு மேல் – PAN Aadhaar வருமான சான்று அனைத்தும் கட்டாயம். தங்கம் விலையில் - 3% GST கட்டாயம் செலுத்த வேண்டும். மேக்கிங் சார்ஜில் - நகை தயாரிப்பு கட்டணத்தில் 5% GST கட்டாயம்.
உங்கள் கேஸ் வழங்குநரின்(Indane,HP,Bharat) இணையதளத்திற்குச் சென்று,'LinkAadhaar' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு,OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம்.
உடலை குளிர்விக்கும் உணவுகள்: தண்ணீர் நிறைந்த பழங்கள் - தர்பூசணி,வெள்ளரி,முலாம்பழம். குளிர்பானங்கள் - மோர்,இளநீர்,நெல்லிக்காய் ஜூஸ். சத்தான காய்கறிகள் - புதினா,முருங்கைக்கீரை, வெண்டைக்காய். குளுர்ச்சி தரும் உணவுகள் - தயிர் சாதம்,கஞ்சி,பானகம். முக்கிய குறிப்புகள்:அதிக தண்ணீர் குடிக்கவும்.வெயிலில் அதிக நேரம் தவிர்க்கவும்.குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடவும்.