உலகமே எதிர்பார்த்த சுனிதா வில்லியம்ஸ் பூமியில் பத்திரமாக கால்பதித்தார்
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையான நாசா ஆராய்ச்சி பணிகளுக்காக விண் வெளி வீரர்கள் அல்லது வீராங்கனையர் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு அங்கு தங்கியிருந்து பணியாற்றுவர்.அமெரிக்காவின் 'போயிங் தனியார் ' நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வரும் வகையில் 'ஸ்டார்லைனர்' என்ற விண்கலத்தை வடிவமைத்தது.இதன் முதல் பயணம் கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி இந்திய வம்சாவளி யான நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் பயணம் செய்தனர்.
ஐ.எஸ்.எஸ்., எனப்படும் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருந்து ஸ்டார்லைனர் வாயிலாக மீண்டும் பூமிக்கு திரும்புவதுதான் திட்டம். ஆனால் பல தொழில்நுட்பக் கோளாறுகளால் அந்த விண்கலத்தில் பயணிப்பது ஆபத்தானது என்பதால் இருவரையும் விட்டுவிட்டு விண்கலம் மட்டும் பூமிக்கு திரும்பியது.இதற்கிடையே, கடந்தாண்டு செப்., 28ல், மற்றொரு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான, தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் வாயிலாக, * அமெரிக்கவீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ்சென்றனர். இந்தக் குழு, 'க்ரூ - 9' எனப்படும், விண்வெளியில் ஆய்வு செய்யும் ஒன்பதாவது பணிக் குழுவாகும். இந்தக் குழுவில், விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இணைந்து கொண்டனர்.
எதிர்பாராமல் விண் வெளியில் சிக்கியதால், இவர்கள் இருவருடைய உடல்நிலை தொடர்பாக பல அச்சங்கள் எழுந்தன. இதையடுத்து, இவர்களை அழைத்து வருவதற்கு பல முயற்சிகள் நடந்தன. ஆனால், வெற்றிபெறவில்லை. , ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தின் 'பால்கன் - 9' ராக் கெட் வாயிலாக, 'டிராகன்' என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம் சமீபத்தில் நான்கு வீரர்களுடன், ஐ.எஸ்.எஸ்.,க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் திரும்ப முடிவு செய்யப்பட்டது. இதன்படி, விண் வெளியில் 286 நாட்கள் இருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச்வில்மோர் மற்றும், 171 நாட்கள் இருந்த, நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் நேற்று முன்தினம், ஐ.எஸ்.எஸ்.,சில் இருந்து புறப்பட்டனர்.டிராகன் விண்கலம், மணிக்கு, 28 ஆயிரம் கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி பயணம் செய்தது. வளிமண்டலத்துக்கு திரும்பும்போது, காற்றுடன் ஏற்பட்ட உராய்வால், அந்த விண்கலத்தின் புற பகுதியின் வெப்பநிலை, 1,600 டிகிரி செல்ஷியசாக இருந்தது. இதுபோன்ற வெப்பநிலையை எதிர் கொள்ளும்வகையில், விண்கலத்தின் வெளிப்பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதீத உஷ்ணத்தால், வெள்ளை நிறத்தில் இருந்த விண்கலம், கடலில் விழுந்தபோது, பழுப்பு நிறமாக மாறியிருந்தது. அதே நேரத்தில் அதன் உள்ளே இருந்த வர்களுக்கு, உஷ்ணத்தின் பாதிப்பு ஏற்படவில்லை. பூமியை நெருங்க நெருங்க, விண்கலத்தை நிலைப்படுத்துவதற்காக, முதலில் இரண்டு, 'ட்ரோக்' எனப்படும், தலைகீழாக செயல்படும் நங்கூரம் போன்ற பாரா சூட்டுகள் பயன்படுத் தப்பட்டன. இது விண்கலத்தை நிலைப்படுத்தி, வேகத்தை குறைக்க உதவியது.அதைத் தொடர்ந்து, மேலும் நான்கு பாராசூட்டுகள் பிரிந்து, விண்கலத்தின் வேகத்தை குறைத்தன. இதைத் தொடர்ந்து, அட்லாண்டிக் கடலில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பயணித்த டிராகன் விண்கலம், திடீ ரென ஏழு நிமிடங்கள் பூமியுடனான தொடர்பை இழந்தது. பூமியில் இருந்து 70 முதல் 40 கி.மீ., உயரத்திலும், மணிக்கு சுமார் 27,000 கி.மீ., வேகத்திலும் பயணித்தபோது, விண்கலத்தைச் சுற்றி 1,927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. நேற்று அதிகாலை 3:15 மணிக்கு, அந்த விண்கலத்துடனான பூமி யின் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. சுமார், ஏழு நிமிடங்களுக்கு டிராகன் விண்கலத்தில் என்ன நடக்கிறது. அது எங்கு உள்ளது என நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. அதிகாலை 3:20 மணிக்கு, நாசாவின், 'டபிள்யூ.பி.,57' எனும் கண்காணிப்பு விமானத்தின் கேமராக்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த டிராகன் விண்கலத்தைப் படம் பிடித்தன. அடுத்த சில நிமிடங்களில் டிராகன் விண்கலத்துடனான தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பெயர், பிளாக்அவுட் டைம்' என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அருகே அட்லாண்டிக் கடலில் லாவகமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக தயாராக இருந்த மீட்பு கப்பலில் அது ஏற்றப்பட்டது. அதில் இருந்து முதலில் நிக் ஹேக், அவரைத் தொடர்ந்து கோர்புனோவ், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பத்திரமாக வெளியேறினர்.மொத்தம், 17 மணி நேரம், விண்கலத்தில் ஒரே நிலையில் அமர்ந்து வந்த சுனிதா வில்லியம்ஸ், சிரித்த முகத்துடன், கைகளை உயர்த்தி, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
0
Leave a Reply