பயனற்ற ஏவுகணை பாகங்கள், செயலிழந்த செயற்கைக்கோள் என விண்வெளியில்8,000 டன்குப்பை கழிவுகளாக உள் ளன. வேகமாகச் சுழலும் இவை பூமிக்கும், பூமியிலிருந்து அனுப்பும் விண் கலன்களுக்கும் ஆபத்தாக முடியும். அதனால், இவற்றை அகற்ற விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்..
மெத்தில் மெர்குரி ( Methyl mercury ) மிக மோசமான நச்சுப்பொருள்.நிலக்கரியை எரிக்கும் போது இது வெளிப்படும். அதே போல் தொழிற்சாலை கழிவுகளிலும் இருக்கும். அவற்றை சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் கொட்டு வதால் அங்கு வாழும் மீன்களின் உடல்களில் நுழைகிறது. இந்த மீன்களை மனிதர்கள் உட்கொண்டால், அவர்களு டைய உடலிலும் இந்த நச்சு சேர்ந்து விடும்.இது நரம்பு மண்டலத்துக் கும் ஆபத்தானது. எனவே இந்தக் கழிவை அகற்றுவதற் கான சிறந்த வழியை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். தற்போது ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த மக்வாரிபல்கலை ( Macquarie university ) ஆய்வாளர்கள் ஜீப்ரா மீன்க னையும் சில பூச்சிகளையும் கொண்டு, இந்தக் கழிவுகளை நீக்கலாம் என்று கண்டறிந் துள்ளனர். அதாவது, முதலில்மீன்கள், பூச்சிகளின் டிஎன் ஏவில் ஈ.கோலை (E. coli) பாக்டீரியாவின் மரபணுக்க ளைச் செலுத்துவர் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட மரபணுக்களைஉடைய மீன்கள், நீர்நிலை களில் உள்ள மெத்தில் மெர் குரியை உட்கொண்டு அதைச் சாதாரண பாதரச வாயுவாக மாற்றிவிடும்.இந்த வாயு மெத்தில் மெர் குரியை விடக் குறைவான ஆபத்தையே ஏற்படுத்தும். இந்தப் பாதரசம் மீன்களின் உடலில் தாங்காது என்பதால், மீன்களுக்கும் பெரிய அள வில் பாதிப்பில்லை. இந்த மீன்களை உரிய நீர் நிலை களில் நேரடியாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வருவ தற்கு முன்பாக. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.அவற்றில் வெற்றி பெற் றால் மட்டுமே இவற்றை நாம் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம்மிக உயரிய,'தகிராண்ட் கமாண்டர் ஆப்த ஆர்டர் ஆப்த ஸ்டார் அண்ட் கீ ஆப் தஇந்தியன் ஓஷன்' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு வழங்குவதாக, நேற்று அறிவித்தார். இந்தியா, மொரீஷியஸ் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஆற்றிய பெரும் பங்குக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் மோடி.மேலும்,இந்த விருதைப் பெறும் ஐந்தாவது உலகத் தலைவராகவும் அவர் விளங்குகிறார். இதன்வாயிலாக, பிரதமர் மோடி,21வதுசர்வதேச கவுரவ விருதைப் பெறஉள்ளார்.சிறப்பு நிகழ்வாக, வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கும், ஒ.சி.ஐ., வெளிநாட்டு இந்தியர் என்றஅட்டையை, அதிபர் கோகுல் அவருடைய மனைவி விருந்தா கோகுலுக்கு பிரதமர் மோடிவழங்கினார். இதைத் தவிர, சமீபத்தில் நடந்த மஹா கும்பமேளாவை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய பித்தளை மற்றும் செம்பால் செய்யப்பட்ட குடுவையை வழங்கினார். பீஹாரின் புகழ்பெற்ற, அதிக சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருளான மக்கானாவையும் வழங்கினார்.குஜராத்தில் தயாரிக்கப்பட்டகைவினை வேலைப்பாடுகள் அடங்கிய சடேலி பெட்டியில், வாரணாசியில் தயாரிக்கப்பட்ட பனாரஸ் பட்டுச் சேலையை, அதிபரின் மனைவிக்கு பிரதமர் மோடிபரிசாக வழங்கினார்.
மத்திய அரசு நான்கு முக்கிய பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில், மாற்றங்களை செய்துள்ளது. பிறப்பு சான்றிதழ்2023 அக்டோபர், 1க்கு பின் பிறந்தவர்களுக்கான பிறந்த தேதிக்கு, நகராட்சி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் மட்டுமே சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.அதற்கு முன் பிறந்தவர்கள், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம். பள்ளி மாற்றுச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் உள்ளிட்ட மற்ற ஆவணங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். வண்ண அடையாளம்பாஸ்போர்ட்டின் வகைகளை எளிதில் அறியும் வகையில், இனி குடிமக்களுக்கு எப்போதும் போல நீல நிறத்தில் வழங்கப்படும். அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், துாதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்திலான பாஸ் போர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.முகவரி இதுவரை, பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்ட முகவரி, பாஸ்போர்ட் வைத்திருப்போரின் பாதுகாப்பு கருதி இனி அச்சிடப்படாது. அதற்கு பதில், குடியுரிமை அதிகாரிகள் மட்டும், 'ஸ்கேன்' செய்து அறியும் வகையில், 'பார்கோடு' வடிவில் அச்சிடப்படும். பெற்றோர் பெயர்இதுவரை, பாஸ் போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டு வந்த பெற்றோர் பெயர் இனி அச்சிடப்படாது.அதாவது, ஒற்றை பெற்றோர், பிரிந்து சென்ற பெற்றோரின் குழந்தைகளின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், இந்த முறை பின்பற்றப்பட உள்ளது.நாட்டில் தற்போது. 422 பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் உள்ளன. அவற்றை அடுத்த ஐந்தாண்டுகளில், 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்காக, அஞ்சல் துறையுடன் வெளியுறவு அமைச்சகம் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைடர்மேன் கதாநாயகனான ஸ்பைடர் மேன் தன்னுடைய கைகளில் இருந்து ஒரு விதமான பசையை உருவாக்குவார். அதைக் கொண்டு தன்னுடைய மொத்த உடலையும் இழுத்து, ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பறந்து சென்று மக்களைக் காப்பாற்றுவார்.அவர் கையில் இருக்கின்ற பசை அந்தஅளவு உறுதியானதாக இருக்கும். அப்படியான ஒன்றைத்தான் விஞ்ஞானிகள் உருவாக்கி இருக் கிறார்கள்.ஆனால் அவர்கள் சிலந்தியின் வலையைப் பயன்படுத்தவில்லை. மாறாக அதைவிட மிகச்சுலபமாக கிடைக்கின்ற பட்டுப்புழுக்களின் பசையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்பட்டுப்புழுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பசையில் சிலவிதமான வேதிப்பொருட்களை கலந்து பரிசோதித்தனர்.ஒரு சிறிய ஊசியின் வழியே இந்தப் பசையை செலுத்தினால் ஆரம்பத்தில் இது திரவமாக இருக்கும். மிகக்குறுகிய நேரத்தில் கெட்டியாக மாறிவிடும். மாறிய பிறகு இந்தப் பசை நூலின் எடையை விட 80 மடங்கு அதிக எடை உள்ள பொருளைச் சுமக்கும் அளவு பலம் பெற்று விடும்.இந்தப் புதிய கண்டு பிடிப்பு அறிவியல் ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை தசை பொறியியல். ஒட்டும் திரவங்களின் தயாரிப்பு முதலியவற்றில் பயன்படுத்த முடி யும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 'ஒட்டிய கடற் பகுதியில் (Ghost shark)வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரு புதிய வகை கெளிறு மீன் (Cat fish) கண்டறியப்பட்டுள்ளது. இது 7.58 செ.மீ. நீளமுள்ளது.
எலிகள்உள்ளிட்டகொறித்துண்ணிகளுக்கு மோப்ப சக்தி மிக அதிகம். எலிப்பொறிக ளிலே உணவு வைக்கும் போது, அதை தன்னுடைய மோப்பத்தினாலே கண்டு கொண்டு எலிகள் மாட் டிக் கொள்ளும். இவற் றிற்கு எப்படி இவ்வளவு தீவிரமான மோப்ப சக்தி இருக்கிறது என்று நீண்ட காலமாக விஞ்ஞானிகள்ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்காவின்நியூயார்க்கைச் சேர்ந்த பபல்லோ பல்கலை மேற் கொண்ட ஆய்வில் எலிகள் மனிதர்களால் கேட்க முடியாத அல்ட்ராசோனிக் ஒலிகளை உருவாக்குவது தெரிய வந்துள்ளது.இதற்கு முன்புவரை அவை இந்த ஒலிகளை உருவாக்குவது தங்களுக் குள்ளே தகவல்தொடர்புசெய்வதற்குத்தான் என்று நம்பப்பட்டு வந்தது.குறிப்பாக இனப்பெருக்கம் செய்கின்ற எலிகள் தங்களது இணையைக் கவர்வதற்கு இந்த ஒலியைப் பயன்படுத்துகின்றன என்று அறியப்பட்டு வந்தது.ஆனால், சமீபத்திய ஆய்வில் இந்த ஒலிகளுக்கு மேலும் ஒரு பயன் இருப் பது தெரியவந்துள்ளது. எலிகள் இந்த ஒலியைஏற்படுத்துவதன் வாயிலாக தன்னைச் சுற்றி இருக்கின்ற காற்றில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.இந்த அதிர்வுகள் இன்னும் கூர்மையாக வாசத்தை அறிந்துகொள்ள உதவுகின்றன. எலிகளின் மோப்ப சக்தி இவ்வளவு பலமாக இருப்பதற்கு இந்த ஒலிகளும் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
256 குண்டுகளை தனியாக செயலிழக்கச் செய்த நரேந்திர சவுத்ரி, சோதனையின் போது வீரமரணம் அடைந்தார்.உண்ணாமல், குடிக்காமல்50 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்லும் திறன் கொண்டவர், அவரது துணிச்சலுக்கு சல்யூட் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி .
இயற்கை ஆச்சரியமானது.ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழும் உயிர்கள் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றன. ஒரு சில உயிரினங்கள் குறிப்பிட்ட சில தாவரங்களை மட்டுமே நம்பியுள்ளன. ஒருவேளை அந்தத் தாவரம் அழிந்துவிட் டால் அதைச் சார்ந்துள்ள அந்த உயிரினமும் அழிந்துவிடும். அப்படிப்பட்ட ஓர் உயிரினம் தான். இஸ்ரேல் நாட்டில் உள்ள பட்டாம்பூச்சி இனமானடொமேர்ஸ் நெசிமேசஸ் (Tomares nesimachus). லார்ஜ் ப்ரூடட் மில்க்வெட்ச் (largefruited milkvetch) எனும் ஒரு குறிப்பிட்ட தாவரத்தைச் சார்ந்தே வாழ்கிறது. இதில் தான் தன் முட்டைகளை இடுகிறது. இந்தத் தாவரம் அருகிவிட்டது. அதனால், பட்டாம்பூச்சியின் எண்ணிக்கையும் மிக வேகமாகச் சரிந்து வருகிறது.இஸ்ரேலில் உள்ள கேகேஎல் ஜேஎன்எப் எனும் அமைப்பினர், அந்த நாட்டின் இயற்கை ஆர்வலர்களுடன் சேர்ந்து, அழிந்து வரும் இந்தத் தாவரத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக இந்தத் தாவரத்தின் 60 விதைகளைச் சேகரித்து பாதுகாக்கப்பட்ட சூழலில் வளர்த்து வருகின்றனர். நன்றாக வளர்ந்ததும் காட்டில் நடுவர். இதன் வாயிலாக அரு கிவரும் தாவரம், பட்டாம்பூச்சி இனம் இரண்டையும் காப்பாற்ற முடியும்.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் வகையில் திருமங்கலம் - ராஜ பாளையம் வரை 71.6 கி.மீ.தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது.இந்த வழித்தடத்தில் ரோடுகள் அமைக்கும் பணி பெரும்பாலும் முடி வடைந்துள்ள நிலையில், மேம்பாலங்கள் அமைக் கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அழகாபுரியில் இருந்து இருந்து ராஜபாளையம் வரை 95 சதவீத அளவிற்கு ரோடுகள் அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில் எஸ்.ராமலிங்கபுரம், ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கரயில்வே துறையின் அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.அதற்குரிய அனுமதியையும் பெற்று விரைவில் மேம்பால பணிகள் துவங்கப்படும்.அக்டோபர் மாதத்திற்குள் முழு அளவில் பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.