பிளாக்அவுட்' டைம் என்றால் என்ன?
பூமியை நோக்கி வரும் விண் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழையும்போது,சிலநிமிடங்களுக்குக்கட்டுப்பாடு
அறையுடனான தொடர்பை இழக்கின்றன. இந்த சில நிமிடங்கள் தான் 'பிளாக் அவுட் டைம்' என அழைக்கப்படுகிறது.இது பொதுவான நடை முறைதான் என்றாலும், முக்கிய விண்வெளி விபத்துகள் இந்தச் சில நிமிடங்களில்தான் நடந்துள்ளன.
அதற்குக் காரணம், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் விண்கலத் தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் நிபுணர்கள் குழுவால் விண்வெளி வீரர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க முடியாது. அதே போல விண்வெளி வீரர்களும் பூமியில் இருக்கும் குழுவுக்கு அவசரத் தகவல்களை அனுப்ப முடியாது.
2003ல் இந்திய வம்சாவளி வீராங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு பேர் பயணித்த கொலம்பியா விண்கலம், பிளாக் அவுட் டைம் எனப்படும் இந்தச் சில நிமிடங்களில்தான் விபத்தைச் சந்தித்தது.அந்த விண்கலத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பஞ்சாபின் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், "ஒரு விண்கலம், வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் போது, அதீத வேகம் மற்றும் காற்றின் மூலக்கூறுகளுடனான உராய்வு விசை காரணமாக 1900 முதல் 2000 டிகிரி செல்சியஸ் அதீத வெப்ப நிலையை எதிர்கொள்ளும். 1000 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை என்றாலே, விண்கலத்தைச் சுற்றி ஒரு பிளாஸ்மா ஷீத் உருவாகிவிடும்.இதன் காரணமாகவே, பூமிக்கும் விண்கலத்துக்குமான ரேடியோ தொடர்பு துண்டிக்கப்படுகிறது," என்றார்.
0
Leave a Reply