பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய , 'த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப்த இந்தியன் ஓஷன்' என்ற விருது அறிவிப்பு.
மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம்மிக உயரிய,'தகிராண்ட் கமாண்டர் ஆப்த ஆர்டர் ஆப்த ஸ்டார் அண்ட் கீ ஆப் தஇந்தியன் ஓஷன்' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு வழங்குவதாக, நேற்று அறிவித்தார். இந்தியா, மொரீஷியஸ் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஆற்றிய பெரும் பங்குக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் மோடி.மேலும்,இந்த விருதைப் பெறும் ஐந்தாவது உலகத் தலைவராகவும் அவர் விளங்குகிறார். இதன்வாயிலாக, பிரதமர் மோடி,21வதுசர்வதேச கவுரவ விருதைப் பெறஉள்ளார்.சிறப்பு நிகழ்வாக, வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கும், ஒ.சி.ஐ., வெளிநாட்டு இந்தியர் என்றஅட்டையை, அதிபர் கோகுல் அவருடைய மனைவி விருந்தா கோகுலுக்கு பிரதமர் மோடிவழங்கினார். இதைத் தவிர, சமீபத்தில் நடந்த மஹா கும்பமேளாவை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய பித்தளை மற்றும் செம்பால் செய்யப்பட்ட குடுவையை வழங்கினார். பீஹாரின் புகழ்பெற்ற, அதிக சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருளான மக்கானாவையும் வழங்கினார்.குஜராத்தில் தயாரிக்கப்பட்டகைவினை வேலைப்பாடுகள் அடங்கிய சடேலி பெட்டியில், வாரணாசியில் தயாரிக்கப்பட்ட பனாரஸ் பட்டுச் சேலையை, அதிபரின் மனைவிக்கு பிரதமர் மோடிபரிசாக வழங்கினார்.
0
Leave a Reply