திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை அக்டோபர் மாதத்திற்குள் முழு அளவில் பணிகள் முடிவடையும்.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் வகையில் திருமங்கலம் - ராஜ பாளையம் வரை 71.6 கி.மீ.தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது.இந்த வழித்தடத்தில் ரோடுகள் அமைக்கும் பணி பெரும்பாலும் முடி வடைந்துள்ள நிலையில், மேம்பாலங்கள் அமைக் கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
அழகாபுரியில் இருந்து இருந்து ராஜபாளையம் வரை 95 சதவீத அளவிற்கு ரோடுகள் அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில் எஸ்.ராமலிங்கபுரம், ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே மேம்பால பணிகள் துவங்கரயில்வே துறையின் அனுமதி பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.அதற்குரிய அனுமதியையும் பெற்று விரைவில் மேம்பால பணிகள் துவங்கப்படும்.அக்டோபர் மாதத்திற்குள் முழு அளவில் பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
0
Leave a Reply