25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நலம் வாழ

Mar 06, 2024

கோவக்காய்விதை, பழம் மற்றும் இலைகள்  அனைத்தும் தொற்றுக்களை குணப்படுத்தும்

கோவக்காயில்தியாமைன் என்ற ஊட்டச்சத்து, கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்த உதவுகிறது. கோவக்காயில் உள்ள தியாமைன் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் புகுந்து அதிக சக்தியை வழங்குகிறது. இந்த ஊட்டச்சத்து ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. இது மரபணு கோளாறுகளையும் சரிசெய்கிறது. கோவக்காய்விதை, பழம் மற்றும் இலைகள் என அனைத்தையும் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மற்றும் தொழுநோய்க்கு உபயோகிக்கலாம். இந்த நோய்களுக்கு இது இயற்கை மருத்துவம். பல்வேறு மருந்துகள் இருக்கும்போதும் இதுவும் உதவுகிறது. இது பாக்டீரியாக தொற்றுக்களுக்கு ஆன்டிபயோடிக்காகவும் பயன்படுகிறது

Mar 04, 2024

நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

மூளை வளர்ச்சி மற்றும் ஞபாக சக்தியை அதிகரிக்கிறது.ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.சரும பிரச்சினைகளை நீக்கி முகப்பொலிவுக்கு உதவுகிறது. அல்சர் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

Mar 01, 2024

கடற்பாசி

கடல் பாசி எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து தேய்மானத்தைக் குறைக்கும். கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருக்கும். கடல் பாசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம்சிலவகைகடற்பாசிகளை கொண்டு புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய் மூட்டு வலி இரும்பு சத்து குறைபாடு உள்ளவர். மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவைகளை தடுக்கப்படும் கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறதுகேல்பஸ் போன்ற கடற்பாசி இனங்கள்,மீன்வளம் மற்றும் தேவையான நாற்றாங்கால் வாழ்விடத்தை வழங்குகின்றன. இதனால் உணவு மூலங்களை பாதுகாக்கின்றன. மிதக்கும் பாசிகள் போன்ற பிற இனங்கள் கரியமிலத்தைக் (கார்பனைச்). கைப்பற்றுவதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. 

Feb 29, 2024

பிரியாணி இலை

காரசாரமான கறிகளிலும், உணவுகளிலும் ருசி மற்றும் சுவையை  அதிகரிக்க பிரியாணி இலையை (பிரிஞ்சி இலை)பலரும் சேர்க்கிறார்கள் மசாலாப் பொருட்களின் பொக்கிஷமாக பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய இருந்துவருசிறது. இதுவே இந்திய உணவுகள் நறுமணமாக மற்றும் சுவையாக இருக்க காரணம் அப்படிப்பட்ட நறுமண மசாலா பொருட்களில் ஒன்று தான் பிரியாணி இலை தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் நல்ல நறுமணத்திற்காகஇந்தியசமையலில்பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதுசாம்பிராணி புகை போடும் பொழுது பிரிஞ்சி இலையையும் போட்டு புகை போட எதிர்மறை ஆற்றல் போய் விடும் .

Feb 26, 2024

வயிற்று கோளாறு சரிசெய்யும்.கசாயம்;

இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல்'சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு சரிசெய்யும்.கசாயம்; சீரகம்., கொத்துமல்லி விதை... சோம்பு... மிளகு...பட்டை. கிராம்பு... ஓமம் தலா அரை ஸ்பூன் வீதம் எடுத்து இரவே 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து... மூடி வைத்து... காலையில் வெறும் வயிற்றில்-5 நாளைக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன10 நோய்களும் ஆயுளுக்கும் வரவே வராது...வாரம் இரண்டுமுறை இதை குடிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்...

Feb 25, 2024

சிறுநீரக கற்கள் போக நரம்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும் கோவக்காய்

சிறுநீரக கற்கள் என்பது கால்சியம் அல்லது மற்ற மினரல்கள் சிறுநீரக பாதையில் கற்களாக உருப்பெறுவது. உணவில் குறிப்பிட்ட அளவைவிட உப்பு அதிகரித்தால் அது சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்துகிறது. கோவக்காயில் உள்ள கால்சியம் கீரை போன்ற உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீரக கற்களை போக்க உதவுகிறது.தர்ப்பூசணியைப்போல், கரையக்கூடிய பி2 வைட்டமின் சத்து இதில் உள்ளது. இந்த வைட்டமின் உங்கள் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் நரம்பு மண்டலம் வலுவடைய உதவுகிறது. கோவக்காய் வலிப்பு, அல்சைமர், சிவிரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. காப்பர் டனல் சின்ரோம் என்ற கோளாறை வைட்டமின் பி6வுடன் சேர்ந்து சரிசெய்ய கோவக்காய் உதவுகிறது.

Feb 23, 2024

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான தூக்கம் 

இன்றைய கால கட்டத்தில் வேலைப்பளு, மொபைல் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரவு தூக்கத்தை வெறுப்பதுடன், குறைவான  நேரமே தூங்குகின்றனர்.தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது .குறைவான தூக்கம் மன அழுத்தத்தை உண்டாக்குவதுடன், நினைவாற்றலை பலவீனப்படுத்துகிறது., உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் இது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே நினைவாற்றல் மேம்பாடு மற்றும் மூளைத் திறன் அதிகரிக்க. நாள்தோறும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும்.

Feb 22, 2024

உடல் பருமனை அலர்ஜியை கட்டுப்படுத்த உதவும் கோவக்காய்

கோவக்காயில் உடல் பருமனுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது கொழுப்பு செல்களாக ப்ரீஅடிபோசைட்டிஸ் மாறுவதை தடுக்கிறது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை குறிக்கிறது. இது இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.கோவக்காயில் அதிகளவில் செப்போனின், அல்கலாய்ட்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் கிளைக்கோசைட்கள் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள், உடலை அலர்ஜி மற்றும் அனஃபிலாக்டிக் பிரச்னைகளில் இருந்து உடலை காக்கிறது.

Feb 19, 2024

உடலின் கழிவுகளை நீக்க நெல்லிச்சாறு

உடலில் உள்ள கழிவுகளை நீக்க நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது.இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.இதில் உள்ள வைட்டமின் ஏசத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

Feb 14, 2024

அசைவம் பல வழிகளில் மனிதனுக்குக் கெடுதல் செய்கிறது

.1. அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் இவ்வுணவு நமக்குச் செரிப்பதற்கு, நம் குடலானது இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும்.2. அசைவ உணவு நம் குடலில் செரிமானமாகாத பட்சத்தில் இவ்வுணவு புளித்துப் பல கிருமிகளை உண்டாக்கும். அதனால் உடலுக்குக் கெடுதியாகும். இவை மேலும் பல நோய்களை உண்டாக்கும். ஆனால் மனிதக்குடல் நீளமாய் இருப்பதால் கழிவுப் பொருட்கள் எளிதில் வெளியாகாமல் நீண்ட நேரம் குடலில் தங்கி நச்சுக் கிருமிகளைத் தோற்றுவிக்கிறது. இவை ரத்தத்தில் கலந்து பல நோய்களைத் தோற்றுவிக்கிறது.3. அசைவ உணவில் கொடிய புளிப்பு நஞ்சு கலந்துள்ளது. இதனால் மார்பு வலி, வயிற்று வலி, நீரிழிவு ஆகியவை உண்டாகின்றன.4. சில நேரங்களில் இறந்த விலங்கின் கறியை உண்ணுவதால் விசக்கிருமிகள் தொற்றும் வாய்ப்பும் உள்ளது.5. இரண்டு, மூன்று நாட்கள் கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதாலும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் சேர வாய்ப்புள்ளது.6. அசைவ உணவு உண்பதால் இயற்கையான மன உணர்வுகள் மாறுகின்றன. குறிப்பாக நல்ல உணர்வுகள் குறையத் தொடங்கும்.

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 43 44

AD's



More News