பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!விளக்கம்: வாழ்க்கையில் 16 வகையானசெல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள்(ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள்
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. பொருள் : என்ன தான் ஊரார் வீட்டில் நெய் விட்டு ருசியாக சமைத்திருந்தாலும், அது தன் மனைவியின் கை பக்குவத்திற்கு ஈடாகாது என்று கணவன் மார்கள் கூறும் பழமொழி இது.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்."அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்" என்பதே சரி. பொருள் : அகம் என்றால் மனம் என்று பொருள். எந்த ஒரு விடயத்தையும் மனதில் பதியவைக்கும் முன்பு அதை தெளிவாக ஆராய்ந்து அறிந்து பதியவைக்க வேண்டும்.
பசித்தபின் புசிபொருள் : நன்றாக பசி எடுத்த பிறகு உண்டோமானால் உணவு ருசியாக இருக்கும். அதே சமயம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்.
விளக்கம்: வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள்(ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள்.
ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும் என்பதே சரி ! பொருள் : முற்காலத்தில் ஆடி மாதத்தில் மழையுடன் சேர்ந்து சாரலும் வீசும்.. இதன் காரணமாக மனிதர்களின் உடலில் உள்ள சூடு தணிந்து அம்மை நோய் விலகும்.
"நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு என்பதே சரி. பொருள் : அந்த காலத்தில் சந்தையில் மாட்டை வாங்கும்போது மாட்டின் காலடி சுவடை வைத்து அதன் பலத்தைஅறிவதுண்டு. நடக்கும்போது அதன் காலடி சுவடு எந்த அளவிற்கு ஆழமாக உள்ளதே அந்த அளவிற்கு அந்த மாடு பலம் பொருந்தியதாக அறியப்படும்.
தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.பொருள்: ஒவ்வொருவருடையவினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.விளக்கம்: பட்டினத்தார் தன் செல்வச்செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமாகஅவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர் கணபதி அருளால் இதனை அறிந்த பட்டினத்தார் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தன் சகோதரி வீட்டின் முன்நின்று அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டுப் பாடிய பாடல்தான், இந்தப் பழமொழி. வீடு உடனே பற்றி எரிய அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது.
.குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர் பொருள்: ஒரு சிலர் வறட்டு கௌரவத்திற்காக தாங்கள் செய்யும் சில செய்கைகளை குறிக்கிறது.
பழமொழி சரியானது: குறி வைக்கத் தப்பாது ராமசரம்பழமொழி தவறானது: குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்விளக்கம்:அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம், ஒரு சம்பந்தமும் இல்லை. குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி, ஸ்ரீராமபிரானின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.நாமும் குறிக்கோளை நோக்கி, ஸ்ரீராமபிரானின் அம்பு போன்று தகுந்த முயற்சியுடன் கடினமாக உழைத்தால் இலக்கை அடையமுடியும் என்பதை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.