. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன்யார்? - கடல் அலை.உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? - தராசு
ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன? -ஊதுபத்தி நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்? -வெங்காயம்
கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்? சேவல் ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு
தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன? முதுகு
கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அது என்ன? உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்? சோளக்கதிர் kan
கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர் kneerகத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைக் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்? பஞ்சு
காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? தென்னை மரம் சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன ? மின் விசிறி
வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? விளக்குத் திரி .ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? ? எறும்புக் கூட்டம்
வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன? - கனவுமென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்? - நத்தை