கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னிகள், மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முகாம்
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கைபேசி வாயிலாக கீழ்கண்ட தகவல்களை அளித்து உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு முகாம் வருகிற 23.11.2024 மற்றும் 24.11.2024 - ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகளில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் வட்டார இயக்க மேலாளர் (Block Mission Manager), வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-ordinator) மற்றும் சமூக நலத்துறை பணியாளர்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல் ஆகியவற்றை எடுத்து வந்து தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடைய வேண்டு மென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தகவல்.
0
Leave a Reply