25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


விடுகதை

Jul 06, 2026

.வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். அது என்ன பாய் ?

சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். அவன் யார் ?  செங்கல்  .வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். அது என்ன பாய் ?  ரூபாய்

Jun 29, 2026

ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்

ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?  -  மூச்சு   ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன?  -  ஊதுபத்தி

Jun 22, 2026

கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான்.

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன?  -  முதுகு.கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்?  -  சேவல்

Jun 15, 2026

கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும்.

கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?- கண்ணீர் கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன?  வேம்பு 

Jun 08, 2026

கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்?.

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அது என்ன?  - உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்? - சோளக்கதிர்  

Jun 01, 2026

.மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன்.

கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு.மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்? – பஞ்சு.  

May 25, 2026

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். 

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? -தென்னை மரம்.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன ? - மின் விசிறி

May 18, 2026

ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது.

வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? - விளக்குத்  திரி. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? - எறும்புக் கூட்டம்.  

May 11, 2026

அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான்.

மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன? வயது அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை

May 04, 2026

மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். 

வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன?  - கனவு மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்? - நத்தை  

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News