இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து கள ஆய்வு
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட முகாமானது 20.11.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 21.11.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இராஜபாளையம் புகழேந்தி சாலையில் உள்ள வேளாண்மை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு விதை மற்றும் கைத்தெளிப்பான்களை வழங்கினார்.
பின்னர், இராஜபாளையம் செவல்பட்டி நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைத்தாரர்கள், தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
மேலும், இராஜபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலையத்தின் செயல்பாடுகள், ஊர்தி மற்றும் உபகரணங்களின் பராமரிப்பு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வழங்கப்படும் சேவைகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பொதுமக்களின் சேவை மனுக்களுக்கான தீர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதா என கேட்டறிந்தார்.
பின்னர், இராஜபாளையம்; கூட்டுறவு நகர வங்கியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உறுப்பினர்களின் எண்ணிக்கை, சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், இராஜபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மருத்துவர்களிடம் அங்கு கால்நடைகளுக்கான சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, தடுப்பூசி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வழங்கப்படும் சேவைகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பொதுமக்களின் சேவை மனுக்களுக்கான தீர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதா என கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, இராஜபாளையம் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
மேலும், மில்கிருஷ்ணாபுரம் கிராமத்தில், சமுதாயக் கூடம் புதிதாக கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், தெற்கு அண்ணா நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்; நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, இராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு, அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, அங்கிருந்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பல்வேறு பொது விநியோக அமைப்புகளுக்கு விநியோகிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
மேலும், இராஜபாளையம், மலையடிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
0
Leave a Reply