தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
“பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த, 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தகுதிகளின் அடிப்படையில், தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி, 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
மேற்படி விருதிற்கு கீழ்கண்ட தகுதிகளை உடைய குழந்தைகளிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை (http://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் 30.09.2024 -ற்குள் பதிவேற்றம் செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கான கால அவகாசம் 25.12.2024 -வரை நீட்டிப்பு செய்துள்ளதால் தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்ப விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறும், அசல் கருத்துருவினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருது பெற தகுதிகள்: 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட, தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (31 டிசம்பர்-ன்படி)யும் இருக்க வேண்டும்.
கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
• பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்.
• பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு.
• பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்.
• வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல்.
• பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்.
• ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
0
Leave a Reply