அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை . மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ? வயது.
காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன?----அண்டா .ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை. அது என்ன?----சீட்டு கட்டு kattu
அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?---தலை வகிடுமுதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?-----ஆர்மோனியம்
உயரத்திலிருந்து விழுவான் அடியே படாது .தரைக்குத்தான் சேதாரமாகும். அது என்ன? அருவி நீர் பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும். அது என்ன? பாசி
.என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை. அது என்ன? உளுந்து மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான். அவன் யார்? மண்புழு
.உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? தராசு தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்? தேங்காய்
.நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்?வெங்காயம்உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?கடல் அலை
இந்த குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனையுண்டு. ஆனால் குற்றத்தை செய்து விட்டால் தண்டிக்க முடியாது. அது என்ன? தற்கொலை தேவைப்படும்போது தூக்கி எறியப்படும். தேவை இல்லாத போது பத்திரமாய் வைக்கப்படும். அது என்ன? நங்கூரம்
அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம். அது என்ன?வளையல் .முக்கண்ணன் சந்தைக்கு போகின்றான். அவன் யார்?தேங்காய்
மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும்.அது என்ன?இரயில் என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும்ஆவல். தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்?ரகசியம்