25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA)  நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு, சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.  அதன்அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-NDA)  அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படைபடிப்பு (Air Cargo Introductory+ DGR)  சரக்கு ஏற்றுமதி மற்றும்இறக்குமதி அடிப்படை படிப்பு (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு (Foundation in Travel and Tourism)  போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான காலஅளவு ஆறுமாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000-த்தை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.இப்பயிற்சியினை வெற்றிதரமாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Transport Association-Canda மூலம் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தனியார் விமானநிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India) சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.

ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000-முதல் ரூ.22,000-வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000-முதல் ரூ.70,000-ஊதிய உயர்வு பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களான Indigo, Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange  போன்றவைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com  மூலம் பதிவு செய்யலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News