கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சி.ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத புத்தி கோணிய ஒருவன்(கோணையன்) கிழித்த ஒரு துணி கோமணமாகப் பயன்படுத்த உதவியது.அப்படியென்றால் 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பது போல ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைக்கப் படுபவர்களால் கூட நன்மை இருக்கும்.
“சிறு பிள்ளை இட்ட வெள்ளாமைவீடு வந்து சேராது”,“இஞ்சி இலாபம் மஞ்சளிலே”“உழுதவன் கணக்குப் பார்த்தால்உழக்கால் தடியுங்கூட மிஞ்சாது”
நொல்லயன் கொல்லில அள்ளாதவன் பாக்கி.நொல்லயன் என்றால் கண் தெரியாதவன் என்பது நமக்குத் தெரியும். அவன் கொல்லியில் (அதாவது கொல்லை என்பதை கொல்லி என்கிறார்கள். வயக்காடு என்றும் கூறுவார்கள்.) பயிரிட்டால் அவைகளை மற்றவர்கள் கண்டிப்பாக அபகரிக்கத்தான் பார்ப்பார்கள். ஏனென்றால் அவனுக்குத்தான் கண் தெரியாதே! ஒருவரும் பாக்கி இல்லாமல் அவனை ஏமாற்ற நினைப்பார்கள். நாமும் கண் தெரியாதவர்களைப் போன்று வெகுளியாக இருந்தால் அனைவரும் நம்மை ஏமாற்றதான் முயல்வார்கள்
“காட்டு வேளாண்மையையும்வயிற்றுப் பிள்ளையையும்எப்படி மறைக்கிறது?”என்ற பழமொழி மூலம் சமுதாய மக்களிடம் சாதாரணமாக இவ்வொப்பீடு நடைமுறையில் வழங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது.சிறிய வயதில் அனுபவமற்ற முறையில் பிள்ளைகள் செய்யும் காரியம் முழுப்பயனைத் தருவதில்லை
செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம்.ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது.
“இட்டதெல்லாம் பயிரா? பெற்றதெல்லாம் பிள்ளையா?”என்று கேட்டுச் சமாதனம் அடைகின்ற நிலையை இப்பழமொழி மூலம் அறியலாம்.இடுகின்ற விதைகளெல்லாம் நல்ல பயிராக வளர்ந்து பயன்தருவதில்லை. அதுபோல் தான் பெற்ற பிள்ளைகளெல்லாம் பெற்றோர் கடமையைச் செய்வார்களென்ற நிலையைக் காண்பது அரிது என்பதே இதன் பொருளாகும்.
‘வெக்கம் வேணாங்குது, விருப்பம் கொண்டாங்குது ’ .ஒரு வீட்டிற்கு செல்கிறோம். அவர்கள் நமக்குச் சாப்பிட ஒரு பலகாரம் கொடுக்கிறார்கள். ஆனால், நாம் அதனை வாங்கி சாப்பிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று வாங்க மறுத்துவிடுகிறோம். ஆனால், நமது மனதிற்குள் அதைச் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு விருப்பம் இருக்கும். அதுதான் 'வெக்கம் வேண்டாம் என்கிறது, விருப்பம் கொண்டுவா என்கிறது' என்பதின் அர்த்தம்.
‘‘அவரைக் கொடியும் பெண்ணும் ஒண்ணுபீர்க்கங்கொடியும் பையனும் ஒண்ணு’’ஒவ்வொரு செடியும், கொடியும் வெவ்வேறு நிலைகளில் வளரும் தன்மை கொண்டன. சில தரையிலும், சில மேலேயும் படரும் தன்மை கொண்டன. அவரை வளராதது போன்று தெரிந்தாலும், விரைவாக வளரும் தன்மை கொண்டது. அதுபோன்று பீர்க்கங்கொடி வேகமாக வளரும் தன்மை கொண்டது. இவ்விரண்டு கொடியையும் பெண், ஆண் குழந்தைகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடுவர்.இவ்வாறு இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த நமது முன்னோர்கள் தமது அனுபவ அறிவால் பெற்ற கருத்துக்களை பழமொழிகள் வாயிலாகத் தொழில் நுட்பக் கருத்துக்களை உணர்த்தியுள்ளனர். இவை நமக்கு நலமுடனும், வளமுடனும் வாழ்வதற்கு வகைசெய்பவையாக அமைந்துள்ளன.வளர்கின்ற குழந்தையையும், வளர்கின்ற பயிரையும் ஒப்பிடும் முறையை வேளாண் பழமொழி தெளிவுறுத்துகின்றது.
அள்ளாம குறையாது, சொல்லாம பிறவாது.பொருள்- எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறையாது.குறைந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக நாம் அதனைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல, ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதை யாராவது சொல்லியிருந்தால்தானே வெளிவரும்?.
ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு முறையில் வளர்க்கவேண்டும். அவ்வாறு வளர்த்தால், அம்மரம் நமக்கு அதிகம் பலனைத் தரும். மர வளர்ப்பு முறையில் கவ்வாத்து செய்தல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முருங்கை, கொய்யா போன்ற மரங்களை ஆண்டிற்கு ஒரு முறை கவ்வாத்து செய்தால் புதிய கிளைகள் வந்து அதிக பலன்களைத் தரும். இத்தகைய கவ்வாத்து முறையை,‘‘ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்,அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது’’ என்ற பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர்.