25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பழமொழி.

Oct 22, 2025

தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழுவரா?

தகப்பன் வெட்டிய கிணறு என்று தலைகீழாய் விழுவரா?பொருள்- : தந்தை வெட்டிய கிணறு என்றாலும், அதில் விழ முடியுமா... அது போல, ஆபத்து என தெரியும் செயல்களை, எக்காரணம் கொண்டும் மேற்கொள்வது கூடாது.

Oct 21, 2025

. ‘‘எருப்போட்டவன் காடுதான் விளையும்;

. ‘‘எருப்போட்டவன் காடுதான் விளையும்; பொறாமைப்படுபவன்- காடு விளையாது’’பயிர் நடவு செய்துவிட்டால் மட்டும் பயிர் விளைச்சலைத் தராது. அதற்குத் தேவையான உரமிடுவது அவசியமானதாகும். நமது முன்னோர்கள் இயற்கை உரத்தையே பயன்படுத்தினர். செயற்கை உரத்தைப் பயன்படுத்தினால் உணவுப்பொருளில் நச்சுத்தன்மை ஏற்பட்டு, அதனை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் பெரும்பாலும் இயற்கை சார்ந்த வேளாண்மையையே அதிகம் செய்தனர். தற்போது போல் அதிகமாக செயற்கை உரத்தைப் பயன்படுத்தவில்லை. தொழு எரு போட்டு பயிர்களின் விளைச்சலைப் பெருக்கினர். இன்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறிப்பிடுவது போன்று இயற்கை சார்ந்த உரங்களை அதிகம் பயன்படுத்தினர்.எருப் போடாது, மற்றவருடைய வயலைப் பார்த்து பொறாமைப் படுவதால் எதுவும் விளையாது.

Oct 15, 2025

தங்கத்தை குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுவதில்லை .

தங்கத்தை குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுவதில்லை என்கிறான்.பொருள்: அறிவுத்திறன் இன்றி வேலை செய்து பழக்கப்பட்டவர்களுக்கு,  தங்கம் இலவசமாகத் தருகிறேன் என்று சொன்னால் கூட செய்வதை நிறுத்தத் தெரியாது; 

Oct 14, 2025

‘‘வலுத்தவனுக்கு வாழை; இளைச்சவனுக்கு எள்ளு’’

யார் யார் எத்தகைய பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும் என்பதையும் பழமொழிகளில் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்ப் பாசன வசதி, பிற செலவுகள் செய்வதற்குரிய பணம் வாய்ப்பிருப்போர் வாழையைப் பயிரிடலாம். நீர் வசதி பிறவோ இல்லாதவர்கள் எள்ளைப் பயிரிட்டுப் பயன் பெறலாம். இதனை,என்ற பழமொழி மொழிகின்றது. வாழை பயிரிடுவோர் காற்றினால் மரம் சாய்ந்து விடுகின்றபோது அதனால் பாதிப்படையாமல் அவ்விழப்பைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி இருக்க வேண்டும். மேலும், எள்ளிற்கு அதிக அளவு நீர் தேவைப்படாது. சிறிதளவே நீர் தேவைப்படும் காற்றடித்தாலும் எள் செடியானது பாதிப்படையாது. இதனால் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பழமொழி குறிப்பிடுவதும் நோக்கத் தக்கது.

Oct 08, 2025

நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.

பணக்காரர்கள் தாம் தூம் என்று செலவு செய்வார்கள். எவ்வளவு நாளைக்கு? எல்லாம் அந்தப் பணம் உள்ளவரை மட்டும்தான். சிலர், தங்கள் அருகில் நண்பர்கள் பக்கபலமாக இருந்தால், ஒரு பிரச்சினை வரும்போது தங்கள் மேலே தவறு இருந்தாலும் கூட, நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மிகவும் அதிகமாகப் பேசித் தங்களது வீரத்தை நிரூபிக்க முயல்வார்கள். அதுவே அவர்கள் தனியாக இருந்தால், பயந்துபோய் ஓடிவிடுவார்கள்.

Oct 07, 2025

‘‘ஆட்டுப் புழுக்கை அன்றைக்கே! மாட்டுச் சாணம் மக்குனாத்தான்!’’

நடமாடும் வங்கியான ஆட்டின் புழுக்கை அன்றைக்கே உரமாகப் பயன்படும். மாட்டுச் சாணம் மட்க வேண்டும். அப்போதுதான் அது நன்கு பயனைத் தரும். மேலும் மாட்டிலிருந்து பெறப்படும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை ‘பஞ்சகவ்வியம்’ என்பர். இத்தகைய இயற்கையான உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை, பழமொழிகள் விளக்குகின்றன.

Oct 01, 2025

தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.

தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.தண்ணீர், பச்சை தண்ணீராக இருந்தாலும் சுடுநீராக இருந்தாலும் அதனை நெருப்பின் மீது ஊற்றினால் நெருப்பு அமிந்துபோகும். அதுபோல, நல்லவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் கொள்கையில் மாறமாட்டார்கள். நல்லது மட்டுமே செய்வார்கள்.

Sep 24, 2025

சொப்பனத்தில்  கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

சொப்பனத்தில்  கண்ட அரிசி சோற்றுக்காகுமா?பொருள் மாட மாளிகை காட்டுவதாகக் கனவு கண்டால் நடக்குமா.? அதை நோக்கி முன்னேற நிஜ வாழ்க்கையில் உழைத்து ,கனவை நனவாக்க வேண்டும். வெறும் கனவு காண்பதால் பலனில்லை.

Sep 23, 2025

‘‘நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட’’

‘‘நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட,தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட’’எனத் அனுபவ மொழியாகக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் ஒரு நண்டு போகும் அளவிற்கு இடைவெளிவிட்டு நடவேண்டும், என்று இப்பழமொழி குறிப்பிடுகின்றது. இதனை இன்று ஒரு மிதிவண்டியின் டயருக்குள் 17 குத்துக்கள் இருப்பதைப் போல் நெற்பயிரை நடவு செய்தல் வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் இன்று இதனை செம்மை நெல் சாகுபடி என்றும் குறிப்பிடுகின்றனர்.வாழைக் கன்றை நடவு செய்கின்றபோது ஒரு மாட்டு வண்டி போகுமளவு இடைவெளிவிட்டு நட வேண்டும். தென்னைக்கு ஒரு தேர் ஓடுமளவிற்கு இடைவெளி விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பயிரையும் எவ்வாறு நட்டால் பயிர் அதிக விளைச்சலைத் தரும் என்பதை பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர் நமக்குக் கூறியுள்ளனர்.

Sep 17, 2025

தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?

தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?பொருள்: ஒரு பணியை செய்ய முடிவு செய்தால், அச்சப்படக் கூடாது; துணிந்து காரியத்தில் இறங்க வேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News