25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Oct 09, 2025

உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடரில் காலிறுதியில் இந்தியா .

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில்,  மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.இந்திய அணி, 'எச்' பிரி வில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ.,), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றிருந்தது.நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ. அணிகள் மோதி, இந்திய அணி 45-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்தியாவின் உன்னதி ஹூடா. தான்வி சர்மா, சூர்யாக் ஷ்ரவாத் ஒற்றையரில் வெற்றி பெற்றனர். முதலிரண்டு போட்டியில் நேபாளம், இலங்கையை வீழ்த்திய இந்தியா, வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது .இந்தியா, தென் கொரியா அணிகள் இன்று நடக்கும் காலிறுதியில் மோதுகின்றன

Oct 09, 2025

பின்லாந்தின் ஆர்டிக் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தான்யா,அன்மோல் கார்ப் வெற்றி பெற்றனர்..

பின்லாந்தின் ஆர்டிக் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தான்யா, சீன தைபேவின் ஹுவாங்கை சந்தித்தார். 45 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தான்யா, 22-20, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீன தைபேவின் லின் ஹி மோதி,. அன்மோல் 23-21, 11-21, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென், ஜப்பானின் நரவோகாவை ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் எதிர்கொண்டார்.. 57 நிமிடம் நடந்த போட்டியின் முடி வில் லக்சயா 15-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்

Oct 08, 2025

ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ்  தக்சினேஸ்வர் 'சாம்பியன்'

ஆண்களுக்கான வின்ஸ்டன்- சலேம் டென்னிஸ்  தொடர்அமெரிக்காவில் ,ஒற்றையர் பிரிவு  பைனலில், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் தக்சினேஸ்வர், இத் தொடரின் "நம்பர்-8' வீரர், ஜப்பானின் ஷுன்சுகே மிட்சுயை எதிர்கொண்டார்.முதல் செட்டை தக்சினேஸ்வர், 6-0 என எளிதாக கைப் பற்றினார். , அடுத்த செட்டையும் என 6-3 வசப்படுத்தி னார். முடிவில் தக்சி னேஸ்வர், 6-0, 6-3 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 

Oct 08, 2025

தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடியில் வெற்றி !

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன்  இந்தியாவில், நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் ,போட்டியின் துவக்கத்தில் 3-2 என முந்தியது தமிழ் தலைவாஸ். இதன் பின்வரிசையாக அவுட்டாக, 9 வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 'ஆல் அவுட்டானது'. 10-13 என பின்தங்கியது.தமிழ்தலைவாஸ் அணிக்கு அர்ஜுன் தேஜ்வல் அடுத்தடுத்து புள்ளியுடன் திரும்ப, பாட்னா அணியை இரு முறை ஆல் அவுட்டாக்கி பதிலடி தந்தது. முதல் பாதியில் 30-19 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் அர்ஜுன் சிறப்பாக செயல்பட்டார். முடிவில் தமிழ்தலைவாஸ்  அணி 56-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 28 முறை 'ரெய்டு' சென்ற அர்ஜுன் போனஸ் புள்ளி 5 உட்பட, மொத் தம் 26 புள்ளி பெற்றுஅணியின் வெற்றிக்கு கை கொடுத்தார். 

Oct 08, 2025

30 ஆண்டுகளுக்கு பின் செஸ் ஜாம்பவான்கள் ஆனந்த், காஸ்பரோவ் மோத உள்ளனர்.

முன்னாள் உலக சாம்பியன்கள் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 53. ரஷ்யா வின்கேரி காஸ்பரோவ் 62, மோதும் 'கிளச்' செஸ் தொடர் அமெரிக்காவில் நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லூசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் நடக்கும். இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.28 கோடி.காஸ்பரோவ் ஆறு முறை (1985, 1986, 1987, 1990, 1993, 1995) உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினர்செஸ் அரங்கில் ஆனந்த் ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012), உலக சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தினர்1995 இல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் மோதினர். நியூயார்க்கின் பழைய உலக வர்த்தக மையத்தின் 107வது மாடியில் இருவரும் மோதிய இப்போட்டியில் காஸ்பரோவ்  சாம்பியன் ஆனார். மொத்தம் 12 போட்டி முடிவில் முதலிடம் பெறும் வீரருக்கு ரூ.62 லட்சம் பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெற் றால் ரூ. 44 லட்சம் தரப்படும். ஒருவேளை இருவரும் சம புள்ளி பெற்றால், தலா ரூ. 53 லட்சம் என சமமாக வழங்கப்படும்.

Oct 08, 2025

ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-1' ஐ.சி.சி., தரவரிசையில்  …..

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.அடுத்த இரு இங்கிலாந்தின் நாட் சிவர் பிரன்ட் (731), ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (713) உள்ளனர். இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், (612), 16 வது இடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அரைசதம் அடித்த தீப்தி சர்மா (610) ஒரு இடம் (17) முந்தினார்.கடந்த இரு போட்டியில் சிறப்பாக செயல் பட்ட ஹர்லீன் (48, 46 ரன்) 7 இடம் முன்னேறி 38 வது இடம் பிடித்தார்

Oct 08, 2025

உலக ஜூனியர் பாட்மின்டனில், இந்தியாவெற்றி.

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில்,  மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி, 'எச்' பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ ), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, நேற்று இரண்டாவது போட்டியில் இலங்கையை சந்தித்தது. இதில் இந்திய அணி 2-0 (45-27, 45-21) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் உன்னாதி ஹூடா, ரக்ஷித்தா ஸ்ரீ உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். 

Oct 07, 2025

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) கோப்பை தங்கம் வென்றார்  அருந்ததி சவுத்ரி .

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) கோப்பை முதல் சீசன் சென்னையில்,  நேற்று பெண்களுக்கான ,65-70 கிலோ பிரிவு பைனலில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரி 5-0 என, அனைத்து இந்திய போலீஸ் (ஏ.ஐ.பி.) அணியின் ஸ்னேஹாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.அசாம் வீராங்கனை அங்குஷிதா 3-2 என, ராஜஸ்தானின் பார்த்வி கிரேவலை,  60-65 கிலோ பிரிவு பைனலில், வென்று  தங்கத்தை  கைப்பற்றினார்.இந்திய விளையாட்டு ஆணையம் அணியின் 57-60 கிலோ பிரிவு பைனலில் ,பர்வீன் ஹூடா 3-2 என, ஹரியானாவின் பிரியாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

Oct 07, 2025

சர்வதேச பாரா பாட்மின்டனில்6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என, 27 பதக்கம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தன.

மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன்நைஜீரியாவின் அபியா நகரில்,  முதல் சீசன் ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('எஸ். எல்.3') பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-7, 9-21, 21-9 என சகவீரர் மந்து குமாரை வென்றுதங்கத்தை  கைப்பற்றினார்.இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த்கடம் ஜோடி  ,ஆண்கள் இரட்டையர் பிரிவு ('எஸ். எல்.3-4') பைனலில்  21-13, 21-18 என நைஜீரியாவின் ஒபின்னாபிரிசியஸ், சிகோஜி ஜெரிமியா ஜோடியைவென்று தங்கத்தை கைப்பற்றியது. கலப்பு இரட்டையர் - பிரிவு ('எஸ்.எல்.3' பைனலில் 'எஸ்.யு.5') இந்தியாவின் பிரமோத் பகத், ஆரத்தி பாட்டீல் - 4 21-13, 21-17 பெருவின் கெர்சன் லாஸ் டானால், டயானா ரோஜஸ் கோலக் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.இதன் மூலம் பிரமோத் பகத் 37, 'ஹாட்ரிக்' தங்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் ரஞ்சித் சிங், மூன்று வெண்கலம் வென்றார். 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என, 27 பதக்கம் இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்தன.  

Oct 07, 2025

புரோ கபடி லீக் போட்டியில் டில்லி அணி வெற்றி பெற்றது.

சென்னையில் நடந்த லீக் போட்டியில்நேற்று ஜெய்ப்பூர், டில்லி அணிகள் மோதின. டில்லி அணியினர், ஜெய்ப்பூர்வீரர்களை ஆல்-அவுட்' செய்தனர். ஆட்ட நேரமுடிவில் டில்லி அணி 29-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10 வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் டில்லி அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆறாவது தோல்வியை பெற்ற ஜெய்ப்பூர் அணி (12 புள்ளி) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

1 2 ... 63 64 65 66 67 68 69 ... 136 137

AD's