கொய்யாப்பழம் ஜூஸ்.
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த கொய்யாப்பழம் - 3 (நறுக்கியது),
சர்க்கரை அல்லது தேன் - 50 கிராம் (தேவைக்கேற்ப),
தண்ணீர் - தேவையான அளவு,
ஐஸ் கட்டிகள் – 10,
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்),
புதினா இலைகள் - சிறிதளவு (விருப்பப்பட்டால்),
செய்முறை -
கொய்யாப்பழங்களைச் சுத்தமாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் நறுக்கிய கொய்யாப்பழம், சர்க்கரை/தேன் மற்றும் தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு வடிகட்டி (Strainer) மூலம் வடிகட்டி, விதைகளை நீக்கவும்.
தேவைப்பட்டால் கூடுதல் தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு மாற்றவும்.
கிளாஸில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, ஜூஸை ஊற்றி பரிமாறவும்.
சர்க்கரைக்கு பதிலாக தேன்அல்லது நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம்.
கொய்யாப்பழ ஜூஸ் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
0
Leave a Reply