புதினா,இஞ்சி,லெமன் ஜூஸ்.
தேவையான பொருட்கள்-
எலுமிச்சைப்பழம்- 1,
இஞ்சி -1 துண்டு,
புதினாஇலை -6,
நன்னாரிசர்பத்-4ஸ்பூன்கள்,
உப்பு -1பின்ச்,
எலுமிச்சைதோல்- சின்னதுண்டு.
செய்முறை -
முதலில்எலுமிச்சைசாறு,நன்னாரி சர்பத், இஞ்சி மட்டும் மிக்ஸியில் ஒரு சுத்து அரைக்கவும்.
பின் புதினா இலை,1 பின்ச் உப்பு,சின்ன எலுமிச்சைதோல், சேர்த்து மீண்டும் ஒரு சுத்து அரைக்கவும்.பின் வடிகட்டி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிரிஜ்ஜில் வைத்து,பருகலாம்.இல்லை ஐஸ் cube சேர்த்தும் பருகலாம்.
.இஞ்சி, எலுமிச்சைதோல்,புதினா சேர்த்து அரைப்பதால் நல்ல ருசி , மணமும் உண்டு..உடம்புக்கும் நல்லது.
புதினா, இஞ்சி,லெமன் ஜுஸ் ரெடி.
0
Leave a Reply