25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Sep 29, 2025

ஹரியானாவின் சீமா தேசிய தடகள வட்டு எறிதலில்  முதலிடம் பிடித்தார் .

 தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான  வட்டு எறிதல் பைனலில், ஹரியானாவின் சீமா, 55.26 மீ., எறிந்து தங்கத்தை வென்றார். ரயில்வேயின் நிதி  (53.71 மீ.,), ஹரியானாவின் சன்யா யாதவ் (52.05 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.  ரயில்வே அணியின் கவுதம், சர்வீசஸ் அணியின் ராம்பீர், மத்திய பிரதேசத்தின்தேவ் மீனா தலா 5.10 மீ., தாண்டி, ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.ரயில்வே அணியின் பைரபி ராய் (13.10 மீ.,) தங்கம் வென்றார். மகாராஷ்டிராவின் பூர்வா சவந்த் (13.05 மீ.,), மத்திய பிரதேசத்தின் நிமிஷா (12.96 மீ.,) பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' பைனலில்வெள்ளி, வெண்கலம் வென்றனர். ஹிமாச்சல பிரதேசத்தின் சீமா, இலக்கை 16 நிமி டம், 01.27 வினாடியில் கடந்து பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் தங்கத்தை கைப்பற்றினார்.அனைத்து இந்திய போலீஸ் அணியின் பிரின்ஸ் குமார் 14 நிமிடம், 06.57 வினாடியில் ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில்  கடந்துமுதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் தன்வார் (14:14.88), ரயில்வேயின்அபிஷேக்(14:19.16) வெள்ளி, வெண்கலம் வென்றனர். 

Sep 29, 2025

சர்வதேச கிளாசிக் ஸ்குவாஷ் அபே சிங் எளிதாக வென்றார்.

சர்வதேச கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் கத்தாரில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 35 வது இடத்திலுள்ள இந்தியாவின் 'நம்பர்-1’ வீரர் அபே சிங், உலகின் 'நம்பர்-5' வீரர், முன்னாள் உலக சாம்பியன், எகிப்தின் கரிம் கவாத்தை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-6 என கைப்பற்றிய அபே சிங், அடுத்த செட்டையும் 11-4 என எளிதாக வென்று வசப்படுத்தினார்.முடிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அபே சிங் 3-1 (11-6, 11-4, 1-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முன்னேறினார்.

Sep 29, 2025

இந்திய அணி 9-வது முறையாக  ஆசிய கோப்பை கிரிக்கெட் சாம்பியன் !

துபாயில் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் ,நேற்றிரவுஅரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும்மோதின. 41 ஆண்டுகால ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகள் இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக மல்லுகட்டியதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. முதலில் பந்து வீச்சை 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்க வைத்தது. இத்தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியா 7 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று கோப்பையை முத்தமிட்டு இருக்கிறது. பாகிஸ்தானையும் 3 முறை போட்டுத் தாக்கி இருக்கிறது.இந்தியஅணி ஆசிய கோப்பையை வெல்வது இது 9-வது முறையாகும். இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

Sep 29, 2025

உலக 'பாரா' தடகள சாம்பியன் ஷிப் இந்தியா.

உலக 'பாரா' தடகள சாம்பியன் ஷிப் இந்தியாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான  12வது சீசன்  ,நேற்று ஆண்களுக் கான ஈட்டி எறிதல் எப். 57 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் பிரவீன் குமார் கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 41.92 மீ., எறிந்து, 9வது இடம் பிடித்தார். இந்தியாவின் மற்றொரு வீரர் ஹேம் சந்திரா (41.17 மீ.,) கடைசி இடம் (10) பெற்றார்.இந்தியாவின் விகாஷ், 6.96 மீ., மட்டும் தாண்டி, 6வது இடம் பெற்று, ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (டி 47)  பதக்க வாய்ப்பை இழந்தார். மற்றொரு இந்திய வீரர்அஜய் சிங் (6.31 மீ.,) 10 வது இடம் பிடித்தார்.ஆண்களுக்கான 100 மீ., டி 37 பிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர்கள். ராகேஷ்பாய் (11.88 வினாடி), ஷ்ரேயான்ஸ் (12.18) கடைசி இரு இடம் (7,8) பெற்றனர்.   இந்தியா, இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கம் மட்டும் வென்ற பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. 

Sep 27, 2025

ஜோனாதன் கவின் ஆண்டனி ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில், தங்கம் வென்றார் .

 ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ் டல்' / 'ஷாட்கன்') தொடர் டில்லியில், ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோனாதன் கவின் ஆண்டனி (586.19 புள்ளி), சிராக் சர்மா (578.15) முத லிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். இதில் ஜோனாதன்,244.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.  இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் (576.19 புள்ளி), மோஹினி சிங் (576.12), ராஷ்மிகா சாகல்(573.17)  முறையே 1, 2, 5வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.பைனலில் ராஷ்மிகா, 236.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனைகளான (174.2), மோஹினி (153.7) முறையே 5, 6வது இடம் பிடித்தனர்.இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கைப்பற்றி  முதலிடத்தில் நீடிக்கிறது இந்தியா.

Sep 27, 2025

டில்லியில் இன்று துவங்க உள்ள உலக பாரா தடகளம் . இந்தியா சார்பில் 74 பேர் பங்கேற்கின்றனர்.

உலக பாரா தடகளசாம்பியன்ஷிப்  டில்லியில் இன்று துவங்குகிறது  சொந்த மண்ணில் பதக்க வேட்டை நடத்த இந்திய நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி சார்பில், நடத்தப்படுகிறது. இதன் 12வது சீசன் டில்லி, நேரு மைதானத்தில் இன்று துவங்குகிறது. வரும் அக். 5 வரை நடக்கும். 104 நாடு களில் இருந்து 1500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.101 ஆண்கள், 84 பெண்கள், ஒரு கலப்பு போட்டி என மொத்தம் 186 பிரிவு களில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. ஈட்டி எறிதலில் பாராலிம்பிக் சாம்பியன், நடப்பு உலக சாம்பியன் சுமித் அன்டில், பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்) இந் தியாவுக்கு தங்கம் வென்று தரலாம். இந்தியா சார்பில் 74 பேர் பங்கேற்கின்றனர்.

Sep 27, 2025

பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பைனலுக்கு முன்னேறியது.

ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட் சில் (யு.ஏ.இ.,)  நடக்கிறது. இதன் பைனலுக்கு முன்னேறியது  இந்திய அணி. நேற்று முன் தினம், துபாயில் நடந்த 'சூப்பர்-4' போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 135/8 ரன் எடுத்தது. வங்கதேச அணி 20 ஓவரில் 124/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள்  நாளை நடக்கும் பைனலில் மோதுகின்றன. 

Sep 27, 2025

ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டன் ,இந்தியாவுக்கு 4 பதக்கம்,

ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டன் தொடர்  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், நடந்தது. இதில் 10 நாடுகளை சேர்ந்த, 80 பேர் பங்கேற்றனர்.இந்தியாவின் சான்வி சர்மா பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். இந்தியாவின் சான்வி சர்மா, சுஜிதா சுகுமாறன் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி கைப்பற்றியது.இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி என, 4 பதக்கம் கைப்பற்றியது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை  இந்தியா வென்றது. 

Sep 26, 2025

அனுஷ்கா  தோகூர் உலக துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் .

(ரைபிள்/பிஸ்டல் /ஷாட்கன்) ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில்  இந்திய வீராங்கனைகள்  மூன்று பதக்கங்களையும் தங்கம் வெள்ளி, வெண்கலம் வென்றனர்.இந்தியாவின் அனுஷ்கா  தோகூர் பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு பைனலில்,621.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான அன்ஷிகா (619.2 புள்ளி), ஆத்யா அகர்வால் (615.9) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.இந்தியாவின் தீபேந்திர சிங் ஷெகாவத், ஆண்களுக்கான50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு பைனலில், 617.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் கன்யான் (616.3) வெண்கலம் வென்றார் . சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷ்ய விளையாட்டு  நட்சத்திரங்களுக்கு தடைஇருப்பதால், துப்பாக்கி சுடுதல் ”கூட்டமைப்பு கொடியின் கீழ் விளையாடும் கமில் நுாரியாக் மெடோவ் (618.9) தங்கம் வென்றார். இதுவரை 5 பதக்கம் வென்ற இந்தியா, ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என முதலிடத்தில் உள்ளது.

Sep 26, 2025

ஷீத்தல் தேவி உலக பாரா வில்வித்தையில்   இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப், தென் கொரியாவின் குவான்ஜு நகரில், பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதற்கான தகுதிச்சுற்றில் 2வது இடம் பெற்ற இந்தியாவின் ஷீத்தல் தேவி, அரையிறுதியில் பிரிட்டனின் ஜோடீ கிரின்ஹாமை எதிர்கொண்டார்.ஷீத்தல் தேவி 145-140 என்ற கணக்கில் வெற்றி பெற்று, உலக பாராசாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார். இந்தியாவின் தோமன் குமார், மற்றொரு அரையிறுதியில் 144-143 என சகவீரர் ஷ்யாம் சுந்தரை வீழ்த்தினார். பைனலில் (நாளை) ராகேஷ் குமார், தோமன் குமார் மோத உள்ளனர். ஷ்யாம் சுந்தர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மெக்குயினை சந்திக்க உள்ளார். 

1 2 ... 66 67 68 69 70 71 72 ... 136 137

AD's



More News