முதல்-அமைச்சர் கோப்பைக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் நடந்து வருகிறது.சென்னை வேளச்சேரியில் நடந்து வரும்தொடரின் 11-வது நாளான நீச்சல்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் செங்கல்பட்டை சேர்ந்த கவீன்ராஜ் 16 நிமிடம் 54.97 வினாடிகளில் இலக்கைகடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். சென்னை வீரர் சாய் கணேஷ் வெள்ளிப்பதக்கமும், நெல்லை வீரர் லியோனர்ட் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 100 மீட்டர் பட்டர்பிளையில் ரோகித்பெனிடிக்சன் (செங்கல்பட்டு), 100 மீட் டர் பிரீஸ்டைல் ஜாஷூவா தாமஸ் (சென்னை) நிதிக் நாதெல்லா (செங்கல்பட்டு), 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக்கில் சுதேஷ் குமார் (செங்கல்பட்டு), ஆகியோர் இதன் 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் ,தங்கப்பதக்கத்தை வென்றனர்.
இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ் தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றுமுடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன்,'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில்இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். முடிவில் இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்குமேல்எடுத்தமுதல்அணிஎன்றபெருமையைஇந்தியாபெற்றது. ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்து 3 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக 'பாரா பவர்லிப்டிங்' சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில், ஜூனியர் ஆண்கள் 72 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் வினய் பங்கேற்றரர். முதலிரண்டு வாய்ப்புகளில் 137, 142 கிலோ தூக்கிய இவர், கடைசி வாய்ப் பில் 147 கிலோ தூக்கியது செல்லாது என நடுவர்கள் அறிவித்தனர். இருப்பினும் அதிகபட்சமாக 142 கிலோ துாக்கிய வினய், முதலிடத்தை உறுதி செய்து தங்கத்தை வென்றார்.
கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில், காலிறுதியில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா, முதன் முறையாக பதக்கத்தை உறுதி செய்தது ..இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' இந்தோனேஷியா அணிகள் நேற்று நடந்த அரையிறுதியில் மோதின. உன்னதி ஹூடா, பார்கவ் ராம், விஸ்வா தேஜ், விஷாகா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்திய அணி 0-2 (35-45, 21-45) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது.உலக ஜூனியர் பாட்மின்டனில், கலப்பு அணிகளுக்கான இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தனிநபர் பிரிவு போட்டிகள் அக். 13 முதல் நடக்கவுள்ளன.
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ,சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், உலக கன்டெண்டர் சீரிஸ் தொடர். 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கானஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜெனிபர் வர்கீஸ் ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டன்டினாவை சந்தித்தார். ஜெனிபர்,முதல் செட் 11-5 என, அடுத்த செட்டை 11-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் கடும் போராட்டத்துக்குப் பின் 13-15 என இழந்தார்.முடிவில் ஜெனிபர் 3-1 என்ற (11-5, 11-6, 13-15, 11-5) கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.இந்தியாவின் ஜெனிபர், சுதான்ஷர் ,19 வயது பிரிவு கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் 3-0 (14-12, 11-9, 12-10) செட்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி வின், சியுக் டங் ஜோடியை வென்று, பைனலுக்குள் நுழைந்தனர்.
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 55, ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 62. முன்னாள் அமெரிக்காவில் உலக சாம்பியன்கள் மோதும் 'கிளச்' செஸ் தொடர் நடக்கிறது.கடைசியாக 1995ல் நடந்த உலக சாம்பியன் ஷிப்பில் இருவரும் மோதினர். தற்போது 30 ஆண்டுக்குப் பின் மீண்டும் இருவரும் மோதுகின்றனர். மொத்தம் 12 போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளில் 4 போட்டி நடந்தன.முதலில் நடந்த இரு போட்டி 'டிரா' ஆகின. மூன்றாவது போட்டி யில் ஆனந்த், துவக்கத்தில் முந்திய ஆனந்த், அடுத்தடுத்த செய்த தவறுகள் செய்ய, காஸ்பரோவ் ஆதிக்கம் செலுத்தினார். பின் மீண்டு வந்தார் ஆனந்த்.போட்டியின் 50 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இருவரும் மோதிய நான்காவது போட்டி 'டிரா' ஆனது. முதல் நாள் முடிவில் ஆனந்த் 1.5-2.5 என்ற கணக்கில் பின்தங்கினார்.
2027ல் ஆசிய கோப்பை கால் பந்து தொடர் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 134 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இந்திய அணி மூன்றாவது போட்டியில், தரவரி சையில் 158 வது இடத்திலுள்ளசிங்கப்பூர் அணியை எதிர்கொண் டது. கோல் கீப்பர் குர்பி ரீத்சிங் கேப்டனாக கள மிறங்கினார். முதல் பாதி ஸ்டாப்பேஜ்' நேரத்தில் சிங்கப்பூர் வீரர் இக் ஷான் பன்டி, ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 0-1 என பின் தங்கியது.இரண்டாவது பாதி போட்டியின் கடைசி நிமிடத்தில் (90 வது) ரஹிம் அலி, கோல் அடித்து கைகொடுக்க, தோல்வியில் இருந்து தப்பியது இந்திய அணி. முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மீண் டும் அக். 14ல் கோவாவில் நடக்கும் போட்டியில் மோத உள்ளன.இதுவரை 3 போட்டியில் 2 டிரா, 1 தோல்வியுடன் இந்திய அணி, 2 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
அசாமின் கவுகாத்தியில், கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 36 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'எச்' பிரிவில் இடம் பெற்ற இந்தியா அணி, நேபாளம், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளை வென்றது.இந்தியா, தென் கொரியா அணிகள் நேற்று நடந்த காலிறுதியில் மோதின. முதல் செட்டை 44-45 என இழந்த இந்தியா, அடுத்த இரு செட்களை 45-30, 45-33 எனக் கைப்பற்றியது. முடிவில் உன்னதி ஹூடா, ரேஷிகா, ரவுனக் சவுகான், பார்கவ், விஸ்வா உள்ளிட்டோர் இடம் பெற்ற இந்திய அணி 2-1 (44-45, 45-30, 45-33) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதுகின்றன.கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியானது.தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு 11 பதக்கம் கிடைத்துள்ளன .
சவுதி அரேபியாவில் ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் நடக்க உள்ளது. 24 அணிகள் இதற்கான மூன்றா வது கட்ட தகுதிச்சுற்றில்பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 134 வதுஇடத்திலுள்ளஇந்தியஅணி 'சி' பிரிவில்ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் இரு போட்டியில் தலா ஒரு டிரா (வங்கதேசம்), தோல்வியுடன் (ஹாங்காங்) 1 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் கடைசியாக உள்ளது. இன்று தனது மூன்றாவது போட்டியில் தரவரிசையில் 158 வது இடத்திலுள்ள சிங்கப்பூர் அணியை அதன் சொந்த மண்ணில் (கல்லாங்) சந்திக்க உள்ளது. இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தால் மட்டுமே ஆசிய கோப்பை செல்ல முடியும் .
புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலைவாஸ், பெங்களூரு, பெங்கால், பாட்னா என, 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' ஹரியானா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஹரியானா வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி, முதல் பாதி முடிவில் 26-16 என முன்னிலையில் இருந்தது.ஆட்ட நேர முடிவில் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற கணக்கில், தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது.தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 'ஆல்-ரவுண்டர்' பாரத் (20 புள்ளி), கேப்டன் விஜய் மாலிக் (8) கை கொடுத்தனர். ஹரியானா சார்பில் மயங்க் சைனி 5, கேப்டன் ஜெய்தீப், வினய் தலா 4 புள்ளி பெற்றனர்.இதுவரை விளையாடிய 13 போட்டியில், 8 வெற்றி, 5 தோல்வி என, 16 புள்ளிகளுடன் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது. ஏழாவது தோல்வியை பெற்ற ஹரியானா (12 புள்ளி) 8வது இடத்தில் உள்ளது.