இந்தியாவின் அபிஷேக் சர்மா சிறந்த வீரராக தேர்வானார்.இந்தியாவின் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, ஜிம்பாப் வேயின் பிரையன் பென்னட் கடந்த செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுருக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறந்த வீரராக அபிஷேக் தேர்வானார். கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன் குவித்து (314 ரன், சராசரி 44.85, 'ஸ்டி ரைக் ரேட்' 200.00) தொடர் நாயகன் விருது வென்றார் அபிஷேக்.இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாசிறந்த வீராங்கனைக்கான விருது.தென் ஆப்ரிக்காவின் தஸ் மின் பிரிட்ஸ் ,சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, பரிந்துரைக்கப்பட்டனர். இதில் மந்தனா, சிறந்த வீராங்கனையாக தேர்வானார். கடந்த மாதம் விளையாடிய 4 ஒருநாள் போட்டியில், 2 சதம் உட்பட 308 ரன் குவித்தார் (சராசரி 77.00, 'ஸ்டிரைக் ரேட்' 135.68) மந்தனா.
உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர், அசாமின் கவுகாத்தியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, சீனாவின் லி யுவான் சன் மோதினர்.தான்வி 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் ஞான தத்து, அமெரிக்காவின்காரெட்டான் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் மோதினர். ஞானதத்து 15-12, 15-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.இந்தியாவின் பவ்யா சாப்ரா, விஷாகா ஜோடி ,கலப்பு இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் 12-15, 15-11, 15-12 என்ற கணக்கில் பிரான்சின் திபோட்ஸ் கார்டன், அகதே குவேஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். .
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சீனாவின் பீஜிங் நகரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ('கிளாஸ் 1') அரையிறுதியில் இந் தியாவின் ஜெகன் மதன், தென் கொரியாவின் சாங்கு ஜியோங்மோதினர். ஜெகன் மதன் 0-3 (6-11, 1-11, 8-11) என்ற கணக்கில்தோல்வியடைந்து வெண்கலம் வென்றார். இந்தியாவின் சந்தீப் டாங்கி 0-3 (0-11, 1-11, 6-11) என, தென் கொரியாவின் ஹாக்ஜின் கிம். மிடம் தோல்வியடைந்து மற்றொரு அரையிறுதியில் வெண்கலம் கைப்பற்றினார் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ,ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் வரலாற்றில், இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் கிடைத்தது.
மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்டதொடரில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன.நேற்று இரண்டு பிரிவுகளாக ,ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.ஆஸ்திரேலிய மண்ணில் சீனியர் வீரர்கள் செயல்பாடு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். ரோகித், கோலிக்கு இது சிறந்த தொடராக அமையும்," என்றார்.காம்பிர் "உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு சிறந்த அணியை உருவாக்குவோம் என்றார்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026 ல் (ஜூன் 11-ஜூலை 19) நடக்க உள்ள, 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன.நான்காவது கட்ட ஆசிய அணிகளுக்காக நடந்தது. சொந்த மண்ணில் கத்தார் அணி 2-1 என ஐக்கிய அரபு எமி ரேட்சை ('ஏ' பிரிவு) வென்றது. 'பி' பிரிவில் சவுதி அரேபிய அணி, ஈராக்குடன் 'டிரா' (0-0) செய்தது. இருபிரிவிலும் முதலிடம் பெற்ற கத்தார், சவுதி அரேபிய அணிகள் உலக கோப்பைதொடருக்கு தகுதி பெற்றன.
உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில்,பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அமெரிக்காவின் ஆலிஸ் வாங் மோதினார். இதில் உன்னதி ஹூடா 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறினார். இந்தியாவின் தான்வி 15-12, 15-7 என, இந்தோனேஷியாவின் வினார்டோவை மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் வென்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ஸ்ரீ 11-15, 15-5, 15-8 கணக்கில் சிங்கப்பூரின் ஆலியா ஜகாரியாவை வென்றார்.
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் ,ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 347 வது இடத்திலுள்ள இந்தியாவின் சஹாஜா, முன்னாள் 'நம்பர்-3' வீராங்கனை, யு. எஸ்., ஓபன் கிராண்ட்ஸ் லாம் கோப்பை (2017) வென்ற அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார்.ஒரு மணி நேரம், 12 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் சஹாஜா, 6-2, 6-2 என்ற நேர் செட் - கணக்கில் வெற்றி பெற்று, - இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான விர் டஸ் உலக தடகள சாம் பியன்ஷிப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், நடக்கிறது. இதில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 20' பிரிவு) போட்டியில் இந்திய வீராங்கனை புவி அகர்வால் பங்கேற்றார். இதில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற் றினார்.புவிஅகர்வால் 100,200,400 மீ.,ஓட்டத்தில் ,3 வெள்ளிவென்றார். தொடர்ந்துகுண்டுஎறிதலில்பங்கேற்றபுவிஅகர்வால், வெள்ளி வசப்படுத்தினார். புவி அகர்வால். ஒரு தங்கம், 4 வெள்ளி என மொத்தம் 5 பதக்கம் வென்றார் .
மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன் ஷிப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி, 24.62 வினாடிநேரத்தில் வந்து, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார். விர்டஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை ஆனது. முன்னதாக 25.01 வினாடி நேரத்தில் ஓடியது முதலிடத்தில் இருந்தது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தீப்தி, தங்கம் வென்றிருந்தார். இதையடுத்து நடப்பு சீசனில் தீப்தி வென்ற இரண்டாவது தங்கம் .
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், 40 வது சீசன், சிறப்பாக செயல்படும் பட்சத்தில், 2026ல் அமெரிக்காவில் நடக்கவுள்ள ஜூனியர் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் பங்கேற்க தகுதி பெறலாம்.தமிழகத்தின் தான்யா16 வயதுக்கு உட்டோருக்கான (பெண்கள்) நீளம் தாண்டுதலில், 4.23 மீ., தாண்டி தங்கம் வென்று, ஜூனியர் அரங்கில் புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2024ல் அனன்யா, 4.05 மீ., தாண்டியதே அதிகமாக இருந்தது. தவிர, 2 முதல் 4 வரையிலான இடங்களை பெற்ற திக் ஷா (4.11, ஹரியானா), அனாமிகா (4.08, கேரளா), கின்ஜல்பென் (4.07, குஜராத்)என மூவரும் தேசிய சாதனை படைத்தனர்.தமிழகத்தின் அபிநாத் 16 வயது ஆண்கள் பிரிவு நீளம் தாண்டுதலில் (4.94 மீ.,) புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார். தமிழகத்தின் விஷ்ணு (31.74 வினாடி), குருதீப் (352.02) என இருவரும் 400 மீ., தடை ஓட்டத்தில் தங்கம், வெள்ளி கைப்பற்றினர். 4X400 மீ., கலப்பு தொடர் ஓட்டத்தில் (20 வயதுக்கு உட்பட்ட) தமிழகத்தின் ஸ்ரீநிவாஸ், சக்தி ஸ்ரீ, விஷ்ணு, அக்ஸ்லின் கூட்டணி (3:32.76 நிமிடம் ) வெள்ளிப்பதக்கம் வென்றனர்.தமிழகத்தின் பிரித்திகா (400 மீ., தடை ஓட்டம், 1:02.79 நிமிடம்), உவின் (800 ., ஆனந்தன் 1:50.60 நிமிடம்), அம்பி ரியஷ் (உயரம் தாண்டுல், 1.96 மீ.,), வெண்கலப் பதக்கம் வென்றனர். தமிழகத்தின் யுவராஜ் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான டிரிபிள்ஜம்ப்' போட்டியில் (15.61 மீ.,) தங்கமும் ,பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில்சுபா தர்ஷினி (24.35) வெள்ளியும் வென்றனர்.