இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் திறமை காணும் விழா 16.3.24.சனிக்கிழமை அன்று ஆனந்தா கார்டனில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மித்ரா மாண்டிசோரி பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரிகார்த்திகா கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெயபவானி அவர்கள் விழாவிற்கு வருகை தந்தஅனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.பள்ளித்தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்.மேலும் அவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பாடல், நடனம், பேச்சு, ஓவியம்,சிலம்பம்,பறை மற்றும் கீ போர்டு போன்ற கலைகளில் தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள்.எல்.கே,.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்கள் அருமையான இசைக்கு நாகரிக நடை நடந்துஅனைவரையும் கவர்ந்தார்கள்.சிறப்பு விருந்தினர் தனது உரையில்நான்ஒருகலைஞன்என்பதைநினைவில்வைத்துக்கொள்ளவேண்டும்என்றும்,தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.மேலும் அவர் அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிய கதை ஒன்றும் கூறி,அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன், நிர்வாகக் குழு அலுவலர் திரு வெங்கட பெருமாள் மற்றும் எல். ஐ .சி திரு வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர் திருமதி தீபா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் 28 .2 .2024 புதன்கிழமைஅன்று அறிவியல் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ராக்கெட் ஏவுகணை, விவசாய முறை, காற்றாலை, சூரிய குடும்பம், நீர்மின் சக்தி, பாம்பன் பாலம்என பலவிதமான அறிவியல் படைப்புகளை மாணவர்கள் செய்து வைத்திருந்தனர்.இவ்விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாவட்டப் பொருளாளர் நித்யாகணேசன் அவர்கள் கலந்து கொண்டார்.அவர் மாணவர்களிடம் அறிவியலில் நாட்டம் கொண்டுசமூக சிந்தனையோடு இருக்க வேண்டும் என்றும் படிப்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்என்றும் கூறினார். பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் அறிவே ஆயுதம் என்று கூறி மாணவர்களின்படைப்புகளைப் பாராட்டி பேசினார்.பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெயபவானி அவர்கள் மாணவர்களிடம் தனது உரையில்புதிது புதிதாக அறிவியல் சாதனங்களை கண்டறிந்து தாங்கள் படித்த ஆனந்தா பள்ளிக்கு சிறப்புவிருந்தினராக வருகை புரிய வேண்டும் என்று பேசினார்.மாணவர்களில் சிலர் தங்களது படைப்புகள் பற்றியும் பாரம்பரிய உணவு வகைகள்,விவசாயம் பற்றியும் பேச விழா இனிதே நிறைவடைந்தது.
ANANDA VIDYALAYA 24 TH SCHOOL DAY CELEBRATION .TODAY 5.P.M ,AT ANANDA GARDEN
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தின விழா14.11.2023செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்தா கார்டனில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக குற்றாலம் சக்தி ரோட்டரி சங்கத்தலைவர் திருமதி.அனிதா ஆனந்த் கலந்து கொண்டார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித்தலைமை ஆசிரியர் திருமதி. ஜெய பவானி அவர்கள் வரவேற்று பேசினார். பள்ளித்தாளாளர் கவிஞர்.ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி நினைவுப்பரிசுவழங்கி கௌரவப்படுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் மாறுவேடப்போட்டி நடைபெற்றது.பெற்றோர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு விழாவினை அழகு செய்தனர். சிறப்பு விருந்தினர் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டினார்.மேலும் தமது உரையில் பெற்றோர்கள் அதிக நேரம் தம் குழந்தைகளிடம் செலவிடவேண்டும் என்றும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை ஒன்றும் கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருமதி. ரமணி சந்திரசேகர் ராஜா,திருமதி.ரம்யா மோகன் , எல்.ஐ.சி.திரு.வெங்கடேசன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு அலுவலர் திரு.வெங்கடபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஆசிரியர் திருமதி. முத்துலட்சுமி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.
ஒவ்வொரு வருடமும் எமது ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா நடைபெறும். தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான தொல்லியல் கண்காட்சிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை அகழாய்வு, விஜயகரிசல்குளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கி.மு, கி.பி யில் தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், பானைகள், முதுமக்கள் தாழிகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை மாணவர்கள் கண்டு வியந்தனர். மாணவர்கள் வரலாற்று புத்தகத்தில் கண்டவற்றை நேரிலே கண்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தனர். ராஜபாளையத்தை சுற்றியுள்ள இடங்களில் மற்றும் கிராமங்களில் கிடைத்த குகை ஓவியங்கள், பலியிடம், சிலைகள், குத்துக்கல் மற்றும் நடுகற்களின் புகைப்படங்களை கண்டு தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மான் கொம்புகள், வேட்டையாட உபயோகித்த ஆயுதங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கண்டு வியந்து மகிழ்ந்தனர்.இந்த கண்காட்சியில் மாணவர்களோடு ஆசிரியர்களும், முதல்வரும், தாளாளரும் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலக்கியத் திருவிழா பள்ளித் தாளாளர் கவிஞர். ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மற்றும் கதை சொல்லியுமான திருமதி. சரிதா ஜோ கலந்து கொண்டார் .அவரை முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்று அறிமுகம் செய்ய, பள்ளித் தாளாளர் திருமதி, ஆனந்தி அவர்கள் சிறப்புப் பரிசினை வழங்கி கௌரவம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தனது கதைக் களத்தை ஆடல் பாடலுடன் உற்சாகமாக தொடங்கினார். கதையானது மாணவர்களின் கற்பனைத் திறனையும், அவர்களது வாசிக்கும் பழக்கத்தினையும் வளர்க்கிறது என்று கூறினார். இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாகவும் இருந்தது. கதை கூறும் போதும், கேட்கும் போதும், வாசிக்கும் போதும் மாணவர்கள் தங்களை அந்த கதாபாத்திரமாகவே கருதிக் கொள்வதால் அவர்கள் வெற்றி அடைய முடியும் என்று கூறினார்.மேலும் அவர் தமது கதையில் வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது மட்டுமே வாழ்க்கை மிகவும் ரசனை மிக்கதாக மாறுகிறது என்பதனை ஒரு சிறிய கதையின் மூலம் எடுத்துரைத்தார். தோற்கும் இடத்திலிருந்து வெற்றியை துவக்க வேண்டும் என்ற கருத்தினை மாணவர்களுக்கு தனது கதையின் மூலம் ஆழமாக பதிவிட்டார். பின்பு ஒரு சிறிய பாடலுடன் தனது உரையை முடித்தார்.ஆசிரியை திருமதி. அழகுராணி நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் இன்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியும் இணைந்து Career Choices for Commerce Students என்னும் நிகழ்ச்சி பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.Interact Club President தாமரைச் செல்வி ரோட்டரி இறை வணக்கம் பாடினார்.சிறப்பு விருந்தினராக Rtn. முகமது சர்பராஸ், கத்தார் சென்ட்ரல் பேங்க், கத்தார். (Retd. AGM, Reserve Bank of India) கலந்து கொண்டு சிறப்பித்தார். Rtn.M.J. வெங்கட பெருமாள், Chairman - Youth Service அனைவரையும் வரவேற்று, விருந்தினரை கெளரவம் செய்தார். பள்ளி முதல்வர் திரு.S. கோபால கிருஷ்ணன் விருந்தினரை அறிமுகம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு உண்டான சரியான முயற்சியையும், திட்டமிடலையும் செய்ய வேண்டும் என்று கூறினார்.மேலும் வணிகவியல் மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு உண்டான பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் தெளிவாக எடுத்துரைத்தார் . மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளித்து பேசினார்.மாணவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள தினமும் செய்தித் தாள்களை வாசிக்க வேண்டும் என்றும் ஆங்கிலப் புலமையின் முக்கியத் துவத்தையும் தன்னுடைய அனுபவத்தின் மூலம் விளக்கிக் கூறினார்.Interact Club Secretary சனந்தா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் செப்டம்பர் 05.09.23.ஆம் தேதி ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி ஜெய பவானி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.மதுமிதா அவர்கள் கலந்துகொண்டு "சொல்புத்தி,சுயபுத்தி"நமக்கு அவசியம் என்பதை சிறப்பாக எடுத்துக் கூறினார். *டாக்டர் இராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை மூன்றாம் வகுப்பு மாணவன் அஸ்வின் மற்றும் ஆசிரியர்களின் பயணத்தைப் பற்றி நான்காம் வகுப்பு மாணவன் மாதேஷ் ஆகிய இருவரும் அருமையாக பேசினார்கள்.ஆசிரியர்களை பாராட்டும் வண்ணம் மூன்றாம் வகுப்பு மாணவிகள் பாடல் ஒன்று பாடினார்கள்.நான்காம் வகுப்பு மாணவன் பொற்கலைராஜன் தன்னம்பிக்கை தரக்கூடிய பாடல் ஒன்றை பாடி அனைவரையும் வியக்க வைத்தான்.நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பதை குட்டிக்கதை மூலம் முதலாம் வகுப்பு மாணவி மதுமிகா கூறினாள்.மேற்கத்திய நடனங்களை நினைவூட்டும் வண்ணம் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் நடனம் ஒன்றும் ஆடினார்கள். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித்தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் பாராட்டி பேசினார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக ஐந்தாம் வகுப்பு மாணவி ஜெனிதா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மதுமிதா அவர்கள் கலந்து கொண்டார்கள்.பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்ய தாளாளர் திருமதி.ஆனந்தி,அவருக்கு சிறப்புப்பரிசு வழங்கினார்.சிறப்பு விருந்தினர் தனது உரையில் கூறியதாவது,ஆசிரியர்கள் குழந்தைகளுக்கும் சமுதாயத்திற்கும் என்ன செய்வார்களோ அதைத்தான் பள்ளி தாளாளர் ஆனந்தி அவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் அவரும் ஒரு ஆசிரியரே எனக் கூறி ஆசிரியர் தின வாழ்த்துகள் கூறினார்.இப்பள்ளியில் பாடங்களுடன் மற்றத் திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்கின்றனர். மேலும் கல்வி தலைமுறைக்கு தலைமுறை மாறுபடுகிறது. வாய்ப்பை பயன்படுத்திய தலைமுறையும் உண்டு. தவறவிட்ட தலைமுறையும் உண்டு. இப்பொழுது வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. நாம் தான் அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.உங்கள் passion என்ன என்று தேடுங்கள். Passion பிறப்பில் வருவதும் இல்லை. நடுவில் வருவதும் இல்லை. அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.நிலவைப் பார்த்து சோறு ஊட்டிய காலம் போய் நிலவுக்கே சென்று சோறு சாப்பிடும் காலத்தில் வாழ்கிறோம். ஆதலால் தோல்வியை கண்டு துவளக் கூடாது. நம்மை நாமே குறைவாக எண்ணக் கூடாது.நேற்றைய தினத்தை விட இன்று வளர்ந்து இருக்கிறோமா? இன்றைய நாளை விட நாளை வளர்வதற்கு என்ன செய்யப் போகிறோம்? என சிந்திக்க வேண்டும் என்று அழகாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.விழாவில் மாணவர்கள் உரைவீச்சு, சேர்ந்திசைப் பாடல், ஆசிரியர்களின் சேர்ந்திசைப் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில் நிர்வாக அலுவலர் திரு. வெங்கடப்பெருமாள், திருமதி. பிரபா ராமராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆசிரியர்கள் மிக அழகாக விழாவினை ஒருங்கிணைக்க நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திருமதி.சுதா இளவரசு அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றினார். பள்ளி முதல்வர் திரு. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, தாளாளர் விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவம் செய்தார். நிகழ்வில் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. ரமணி சந்திரசேகர் ராஜா கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் இந்திய திரு நாட்டில் ஏராளமான வளங்கள் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் இருந்தால் ஒவ்வொருவரும் சாதிக்கலாம் என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஹெலன் கெல்லர், வால்ட் டிஸ்னி, ஹாரிபாட்டர் போன்ற சாதனையாளர்களை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு உற்சாக மூட்டினார். கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தமது திறமைகளை மிக அழகாக வெளிப்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன . நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் வெங்கட் பெருமாள் அவர்களும் கலந்து கொண்டார். ஆசிரியை பத்மாவதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.