25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி ஆசிரியர் தினவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி ஆசிரியர் தினவிழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் செப்டம்பர் 05.09.23.ஆம் தேதி ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி ஜெய பவானி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.மதுமிதா அவர்கள் கலந்துகொண்டு  "சொல்புத்தி,சுயபுத்தி"நமக்கு அவசியம் என்பதை சிறப்பாக  எடுத்துக் கூறினார். *டாக்டர் இராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை மூன்றாம் வகுப்பு மாணவன் அஸ்வின் மற்றும் ஆசிரியர்களின் பயணத்தைப் பற்றி நான்காம் வகுப்பு மாணவன் மாதேஷ் ஆகிய இருவரும் அருமையாக பேசினார்கள்.

ஆசிரியர்களை பாராட்டும் வண்ணம் மூன்றாம் வகுப்பு மாணவிகள் பாடல் ஒன்று பாடினார்கள்.

நான்காம் வகுப்பு மாணவன் பொற்கலைராஜன் தன்னம்பிக்கை தரக்கூடிய பாடல் ஒன்றை பாடி அனைவரையும் வியக்க வைத்தான்.

நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பதை குட்டிக்கதை மூலம் முதலாம் வகுப்பு மாணவி மதுமிகா கூறினாள்.

மேற்கத்திய நடனங்களை நினைவூட்டும் வண்ணம் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் நடனம் ஒன்றும் ஆடினார்கள்.                                                                                                                                                                                                                                                                               கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித்தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் பாராட்டி பேசினார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.                             

நிறைவாக ஐந்தாம் வகுப்பு மாணவி ஜெனிதா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News