இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் இன்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியும் இணைந்து Career Choices for Commerce Students என்னும் நிகழ்ச்சி
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் இன்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியும் இணைந்து Career Choices for Commerce Students என்னும் நிகழ்ச்சி பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Interact Club President தாமரைச் செல்வி ரோட்டரி இறை வணக்கம் பாடினார்.
சிறப்பு விருந்தினராக Rtn. முகமது சர்பராஸ், கத்தார் சென்ட்ரல் பேங்க், கத்தார். (Retd. AGM, Reserve Bank of India) கலந்து கொண்டு சிறப்பித்தார். Rtn.M.J. வெங்கட பெருமாள், Chairman - Youth Service அனைவரையும் வரவேற்று, விருந்தினரை கெளரவம் செய்தார். பள்ளி முதல்வர் திரு.S. கோபால கிருஷ்ணன் விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு உண்டான சரியான முயற்சியையும், திட்டமிடலையும் செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் வணிகவியல் மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு உண்டான பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் தெளிவாக எடுத்துரைத்தார் . மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளித்து பேசினார்.
மாணவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள தினமும் செய்தித் தாள்களை வாசிக்க வேண்டும் என்றும் ஆங்கிலப் புலமையின் முக்கியத் துவத்தையும் தன்னுடைய அனுபவத்தின் மூலம் விளக்கிக் கூறினார்.
Interact Club Secretary சனந்தா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.
0
Leave a Reply