நாம் சாப்பிடுவதற்கு முன் நாய்க்கு உணவளிக்க வேண்டும் எச்சில் பட்ட கையால் நாய்க்கு உணவளிப்பது தோஷத்தை உண்டாக்கும். நாய்க்கு தொடர்ந்து அன்போடு உணவளிப்பது பெரிய புண்ணிய பலனை தரும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள நாய்கள் அடிக்கடி ஊளையிட்டால், அது வரவிருக்கும் அசுப நிகழ்வுகளுக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
ஒரு விளக்கை மீண்டும் மீண்டும் தெய்வத்தின் முன் ஏற்றி பிரார்த்தனை செய்யும்போது, அதில் ஆன்மீக சக்தி அதிகரிக்கிறது. இது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை படிப்படியாக குறைத்து நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.பழைய விளக்கில் தினமும் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமானது.இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்தின் மீது நிரந்தரமாக பதியும்.எனவே, புதிய விளக்குகள் மீதான ஆசையை குறைத்து, வீட்டில் உள்ள பழைய விளக்குகளை தொடர்ந்து பயன்படுத்தினால்,அதன் முழுமையான ஆன்மீக பலனைபெற முடியும்.
எந்த சாமியிடம் எந்த வரம் கேட்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.நிம்மதியை சிவனிடம் கேளுங்கள்,வீரம் மற்றும் குழந்தை வரத்தை முருகனிடம் கேளுங்கள்,பண வரவை குபேரனிடமும்,ஐஸ்வர்யத்தை லட்சுமியிடமும் கேளுங்கள் பாதுகாப்பை முனீஸ்வரனிடம் கேளுங்கள்,நீதியை கருப்பசாமியிடம் கேளுங்கள்,திருமண வரத்தை விஷ்ணுவிடமும், ஆரோக்கியத்தை அனுமனிடமும் கேளுங்கள்.
முகம் பார்க்கும் கண்ணாடி வட்ட வடிவில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும். வீட்டை கழுவும் போது சிறிது கல் உப்பு போட்டு துடைத்தால் வாஸ்து பிரச்சனைகள் வராது. வலம்புரி சங்கில் தண்ணீர், துளசி சேர்ந்து வீட்டை சுற்றி தெளித்தால் கண் திருஷ்டி நீங்கும். வாஸ்து குறையுள்ள வீட்டிற்கு குற்றாலம், பிள்ளையார்பட்டி சென்று வந்தால் வாஸ்து பிரச்சனைகள் தீரும். திருச்சியில் உள்ள திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேசுவரர் கோவிலுக்கு சென்றால் திருமண தடை நீங்கும். நவக்கிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வந்தால் அனைத்து நவகிரக தோஷங்களும் நீங்கும்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளிக்க வேண்டும்.வாசலில் சாணம் / மஞ்சள் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.வாசலில் கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும்.பகவானுக்கு பூஜை மற்றும் நெய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.மாதம் முழுவதும் தினமும் காலையில் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.தினமும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாட/ படிக்க/கேட்க வேண்டும்.திருமணம் ஆகாத பெண்கள் ஆண்டாள் பாசுரத்தில் கூறியபடி விரதம் இருக்க வேண்டும்.இதனை பாவை நோன்பு என்று கூறுவார்கள்.மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும்.ஆலடத்திற்கு கைங்கரியம் செய்ய வேண்டும்.தான தருமங்களை மேற்கொள்ள வேண்டும்.
சுவாமிக்கு வலது பக்கம் தீபம் ஏற்ற வேண்டும்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது காமாட்சி அம்மன் விளக்கைக் அணைக்கக் கூடாது.காமாட்சி அம்மனுக்கு துணை விளக்காய் மண் விளக்கு ஏற்றலாம்.தீபம் ஏற்றிவிட்டு உச்சரிக்க வேண்டிய மந்திரம், "ஓம் தீப லக்ஷ்மியே நமோ நமஹ”தீபம் ஏற்றும் நேரம் அரை மணி நேரம் கழித்து மலையேறலாம். அரை மணி நேரத்துக்கு மேல் எரிவது அவரவர்கள் விருப்பம், வசதியைப் பொறுத்தது.தீபம் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்ற வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோம்பு -2 ஸ்பூன், ஏலக்காய்-10, சந்தனம் -3, பச்சை கற்பூரம் 1 சின்ன துண்டு, ஜவ்வாது - 4 ஸ்பூன், விரலிமஞ்சள்-2 இந்த பொருட்களை எல்லாம் போட்டு நைசாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை அரைக்கும் போதே நமக்கு இந்த பொடியின் வாசம் மனதை மயக்கும். இதை நீங்கள் ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கலந்து வைத்தால் பூஜை அறையில் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும் ஒரு நேர்மறை எண்ணத்தையும் தரும் நம் வீட்டிற்கு
அடுப்பின் முன் நின்று சமைக்கும் பொழுது உங்களுடைய வலது கை பக்கத்தில் உப்பு ஜாடியை வைக்க வேண்டும். உப்பை எட்டி எடுக்குமாறு வைக்காமல், கையெட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். உயரத்தில் இருக்குமாறு உப்பு ஜாடியைவைக்கக் கூடாது மண் மற்றும் பீங்கான் பாத்திரத்தில் உப்பை வைப்பது சிறந்தது பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரத்தை தவிர்ப்பது நல்லது.
1. போட்ட அழுக்கு துணியே, மீண்டும் மீண்டும் போடுவது வறுமையை உண்டாக்கும். 2. பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் மஞ்சள் உரைத்து பூசி குளித்து, கருப்பு மையில் பொட்டு வைத்து கொண்டால் காத்து கருப்பு அண்டாது. 3.அதிகமாக கிழிந்த துணிகளை, உபயோகிக்க கூடாது. இவை தரிதரத்தை உண்டாக்கும். 4. தரையில் கை ஊன்றி சாப்பிடக்கூடாது, இவை நம் சக்தி அனைத்தும் கீழே பூமாதேவி இழுத்து கொள்வாள். 5. கருட தரிசனம் கோடி புண்ணியம். நாம் கருடனை வானத்தில் அண்ணாந்து பார்ப்பது மிகவும் புண்ணியத்தை தரும். 6. பெண்கள் கைகளில் வளைகள் இல்லாமல் சாப்பாடு பரிமாறக்கூடாது .மற்றும் பூஜை அறையில் பூஜை செய்யக்கூடாது, இவை வறுமை உண்டாக்கும்.
தாம் உயிரோடு இருக்கும் பொழுது மட்டுமல்லாமல், நாம் இறந்த பிறகும் புண்ணியத்தை தரும் தானம் பசு தானம் மட்டும்தான்.பசுவை தானமாக செய்பவர்கள் இறந்த பிறகு சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்பது ஐதிகம்.முக்கியமாக கர்ப்பினியான பசுவை தானமாக கொடுத்தால் வைகுண்டத்தில் வாசம் செய்ய அனுமதி கிடைக்கும் ,என்று சாஸ்திரம் கூறுகிறது.நாம் தானம் கொடுக்கும் பொழுது மன தூய்மையுடன், ஒழுக்கத்துடன், முழு மனதுடன் கொடுக்க வேண்டும்.அப்போது தான் நாம் கொடுத்த தானம் நமக்கு நல்ல பலனை பெற்றுத் தரும்.