25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


இன்றைய தினம்

Jan 16, 2026

அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

தாய் கூட சில மாதங்கள் தான்  எனக்கு பால் ஊட்டினாள். ஆனால் நான் இருக்கும் வரை எனக்குபால்  கொடுக்கும் நீ, என் தாயினும் சிறந்தவள்.உழவனுக்கு மட்டும் அல்ல, ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான் .மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து,நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும், மனிதனுக்கு பால் கொடுக்கும்பசு மாடுகளை வணங்குவோம்,உழவனுக்கு தோள் கொடுக்கும்எருதுகளை போற்றுவோம்.மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

Jan 15, 2026

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

சூரியனின் ஒளியைப் போல் பொங்கும் பொங்கலை போல், மணக்கும் அறுசுவை கொண்டபொங்கலின் சுவையை போல் ,உங்கள் வாழ்க்கை எப்போதும்,இனிமையுடன் மலரட்டும்,அதிர்ஷ்டத்தின் ஒளியால் வளர்ச்சி காணவும்,அன்பின் காற்றால் வாழ்வின்அமைதியை உணரவும்,கரும்பின் இனிமை போலவே உங்கள் வாழ்க்கை,வயலின் மாறுபட்ட பசுமை போலவே உங்கள் மனம்,தை பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்க்கையில், அனைத்தும் வெற்றியடைய உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

Jan 03, 2026

வைத்தியநாத சுவாமி கோவிலில் இன்று திருவாதிரை திருவிழா !

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இன்று  காலை 10 மணிக்கு 10 அடிஉயர  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதன் பிறகு சந்தன காப்பு அணிவிக்கப்படும்,  வைத்திய நாத சுவாமி கோவில் கோபுரம் ,திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் நிர்வாகத்தினர்  இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 

Jan 01, 2026

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  2026

நிறைந்த வளம். நிறைந்த ஆரோக்கியம் மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.வெற்றிகள், சந்தோஷங்கள் மற்றும் உன்னதமான சாதனைகள் நிரம்பிய ஆண்டாக 2026 அமையட்டும்.

Dec 25, 2025

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் உனக்கு உன்னதரை உள்ளங்கள் பறைசாற்ற, நம்பாரம் தீர்த்திடவே பாவங்களை மீட்க வந்த பரமனவன் பிறந்தநாளை, பக்தியோடு ஏற்றிடுவோம் பந்தமென போற்றிடுவோம்.நட்சத்திரங்கள் போல் • உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசட்டும் ,கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

Dec 23, 2025

முன்னாள் பிரதமர்சவுத்ரி  சரண் சிங் பிறந்த தினமான டிச. 23 , தேசிய விவசாயிகள் தினம்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வது விவசாயத்தொழில் உள்ளது.  முன்னாள் பிரதமர் சவுத்ரி  சரண் சிங் விவசாய துறைக்கு பல சட்டங்கள், திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.  அவரது பிறந்த தினமான டிச. 23 மத்திய அரசு சார்பில் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Dec 03, 2025

'சமூக முன்னேற்றத்தை வளர்ப்பதில், மாற்றுத் திறனாளிகளையும் சமூகத்தில் இணைப்பது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

உலக மக்கள் தொகையில் 16 சதவீதம், 130 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால், பல துறைகளிலும் சாதிக்கின்றனர். இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுதல், அவர்களுக்கான அடிப்படை உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச.,3ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  

Dec 03, 2025

 திருக்கார்த்திகை தினம்

சிவபெருமான் அக்னி வடிவமாக ஆதியும் அற்று அந்தமும் அற்று திருவண்ணாமலையில் உருவெடுத்தாக வரலாறு கூறுகிறது. அதனால் அந்த நாளை ஒவ்வொரு ஆண்டு திருக்கார்த்திகையாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Dec 02, 2025

பரணி தீபத்தை நம் வீட்டில் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, பஞ்ச பூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் 2025 பரணி தீபம் ஏற்ற உகந்த நேரம்.இந்த வருடம் பரணி நட்சத்திரம் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை ஆறு இருபத்து நான்கு மணிக்கு தொடங்கி ,மறுநாள் நான்கு நாற்பத்தி ஏழு மணிக்கு முடிகிறது. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை அன்று தொடங்குகிறது இந்த தெய்வீக நாள்.இந்த நாளில் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் ஐந்து விளக்கு ஏற்ற வேண்டும். கட்டாயம் ஐந்து விளக்கு தான் ஏற்ற வேண்டும் வீட்டில்.பாவத்தை போக்கும் பரணி தீபத்தை வீட்டில் ஏற்றும் முறை, அன்று வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் விளக்கும் ஏற்ற வேண்டும். அதோடு தனியாக ஒரு தாம்பாளத்தில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் ,என்பதால் திசை கணக்கு கிடையாது.நம்முடைய வாழ்க்கையில் செய்த சின்னச் சின்ன பாவங்கள் கூட நம்மை விட்டுப் போவதற்காக வேண்டி ஏற்றக்கூடிய தீபம்தான் பரணி தீபமாகும்.கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று (டிசம்பர் 2. 2025) ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம்.எமதர்ம ராஜனுக்கு மிகவும் பிரியமான பரணி நட்சத்திரத்தில் நாம் வாழும் காலமும், வாழ்க்கைக்குப் பிறகும் துன்பம் இல்லாமல் இருப்பதற்காக இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

Nov 14, 2025

குழந்தைகள் தினம் .

 இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ. 14, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைகள்.அன்றைய தினத்தில் மட்டும் குழந்தைகளைப் பற்றி பேசி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிவிட்டு, நம்மில் பலர் கடந்து சென்று விடுகிறோம். குழந்தைகளை கொண்டாட மறந்து விடுகிறோம். குழந்தைகளை ஒரு நாள் மட்டும் அன்று எல்லா நாட்களும் கொண்டோடுவோம். குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள். அவர்களை உடைத்து விடாமால், பக்குவமாய் உடன் பயணித்து வழிநடத்து வோம்.குழந்தைகளை, குழந்தைகளாக இருக்க அனுமதிப்போம். அவர்கள் நன்றாக விளையாடட்டும். சிரிக்கட்டும், கேள்விகள் பல கேட்கட்டும். வரைவது பிடித்தால் வரையட்டும், நடனம் பிடித்தால் ஆடட்டும். அவர்களுக்கு தேவையானதை அவர்களிடம் கேட்டறிந்து கொடுப்போம். எதையும் குழந்தைகள் மீது திணிக்காமல் இருப்போம்.பல குழந்தைகள் படிப்பதையும், கலை, விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதையும் சுமையாக நினைத்து மகிழ்ச்சியின்றி இருக்கின்றனர். அந்த நிலையை மாற்றிடுவோம்.இந்த குழந்தைகள் தினம் அர்த்தமானதாக மாற, குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நின்றிட வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவும்கிடைக்க வேண்டும். போரினால் மரித்து போகும் மழலைகளின் உயிர் காக்கப்படவேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 13 14

AD's



More News