காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதனால்தான் பழங்கள் மற்றும் காய்கறிகள் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை தரும். கோடை காலத்தில் வெள்ளரிக்காயை உட்கொண்டால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையே வராது. வெள்ளரிக்காயை முக அழகை கூட்டவும் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வெள்ளரிக்காயை முகத்தில் தடவி வரவும். வெள்ளரிக்காய் தோல், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.. வெள்ளரி சாறுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்க்கவும்.கடைசியாக முகத்தை நீரால் அலசவும்.கற்றாழை பெரும்பாலான சரும வகைகளுடன் பொருந்தக்கூடியது. எனவே முகத்தை சுத்தம் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் . வெள்ளரிக்காயை வைத்து ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கதேவையான பொருட்கள்- தேயிலை மர எண்ணெய்-2 சொட்டு,வெள்ளரிக்காய் சாறு – 1 கப். வெள்ளரிக்காய் சாறுடன் தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த கலவையை ஃபேஸ் மாஸ்க் போல் முகத்தில் பூசவும்.முகப்பரு மீதும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.இந்த ஃபேஸ் மாஸ்க், சரும வறட்சி மற்றும் வெடிப்புகளை குறைக்கிறது.குறிப்பு: முகத்தை ஈரப்பதமாக்குவதற்கு முன்பு வெறும் சருமத்தில் தேயிலை மர எண்ணெயை தடவ கூடாது.
கோடை காலத்தில் உதடுகள் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்க,தினமும் குளித்து முடித்த பின்னர் ஆலிவ் ஆயிலால் உதடுகளை மசாஜ் செய்து வந்தால் உதடு வெடிப்புகள் குறையும்.அவ்வபோது தேங்காய் எண்ணெய்யை உதடுகளில் தடவி, மசாஜ் செய்து வந்தால் UV கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.கற்றாழை ஜெல்களை உதடுகளில் தடவி வந்தால், உதடு வறட்சி, சுருக்கம் மறையும்.எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரஸ் அமிலம், உதடுகளின் இறந்த செல்களை நீக்கி, உதடுகளை பொலிவுற செய்யும்.அன்னாசி பழச்சாறில் உள்ள ப்ரோமலைன் உதடு சுருக்கங்கள் மறைய உதவுகிறது.திராட்சை பழச்சாறில் உள்ள விட்டமின் இ, உதடு சுருக்கங்கள், வறட்சி சரியாக உதவுகிறது.ஆமணக்கு எண்ணெய்யை உதடுகளில் தடவி வர, உதட்டில் உள்ள சுருகங்கள் மறைந்து மென்மையாகும்.
முடி கொட்டுவது, ஒரு முடி இரண்டாக பிளந்து இருக்கும் .தலை சீவினால் குட்டி குட்டி முடி வணங்காமல் நிற்கும். இதற்கு காரணம் முடிக்கு சத்து இல்லை. தலையில் பக்கு இருந்தால் முடி கொட்டும். இதற்கு வாரம் ஒருமுறை கொஞ்சம் தயிர் ஒரு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து கலக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம். கரப்பான் இலை சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து குளிக்கலாம்.தலையில் வாரம் ஒருமுறை, நல்ல எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் .இப்படி செய்தால் முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்.
சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது. பற்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கரித்தூள் முகத்திற்கு, சருமத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. தேவையான பொருட்கள் : கரித்தூள்- 1 டீஸ்பூன்,புரோபயாடிக் காப்ஸ்யூல் - 1, ஆப்பிள் சைடர் வினிகர்-2 டீஸ்பூன், அத்தியாவசிய எண்ணெய் - 1 சொட்டுபயன்படுத்தும் முறை:ஒரு கிண்ணத்தில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். உலர்ந்ததும், அதை குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை மீண்டும் நிரப்ப மாய்ஸ்சரை தடவவும். இப்படி மாதம் 2 முறை செய்தால் போது உங்கள் முகம் பளிச்சிடும்.