25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


லக்சயா இரட்டை சதம் நெருங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லக்சயா இரட்டை சதம் நெருங்கினார்.

இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் 'யூத்' டெஸ்டில் இந்திய அணி வலுவான பதிலடி கொடுத்தது.

முதல் இன்னிங்சில் இலங்கை 424/9 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் லக்சயா ராய்சந்தனி மற்றும் சாகர் விர்க் சிறப்பான தொடக்கம் அமைத்தனர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 295 ரன் சேர்த்த நிலையில், சாகர் விர்க் 134 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் குஷாக்ரா ஓஜா (24), கேப்டன் யாஷ்பர்தன் சவுகான் (6) விரைவில் வெளியேறினர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய லக்சயா, 196 ரன்களுடன் களத்தில் நீடித்து இரட்டை சதத்தை நெருங்கினார்.

3-வது நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 378/3 ரன் எடுத்து, இலங்கையை விட 46 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. லக்சயா (196), குஷ் படேல் (3) ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் முழுமையாக முடிவடைய வாய்ப்பு குறைவாக இருப்பதால், போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News