25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அழகுக் குறிப்பு

Feb 09, 2024

முகத்தை பொலிவாக்கும் வாழைப்பழ தோல்

மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம்,. வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று.வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நாம் எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம்.ஆனால், நாம் தூக்கி எறியும் வாழைப்பழத்தின் தோலின் நன்மைகள் பயன்கள்அதிகமாக காணப்படுகின்றதுஇரவில் உறங்குவதற்கு முன்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தடவி வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் மருக்கள் மறைவதுடன் மீண்டும் வராமல் இருக்கும்.வாழைப்பழத்தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கு துணைப்புரிகின்றது.வாழைப்பழத்தோலில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் தழும்புகள் மற்றும் கறைகளை போக்குகின்றது.வாழைப்பழத்தோல்களில்பொட்டாசியம்மற்றும்ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை சருமத்தில் இருக்கும் நுண் துளைகளைத் திறந்து ஆக்ஸிஜனை உள்ளே செல்ல உதவுகின்றது.முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் வாழைப்பழத் தோலை பருக்கள் மீது தடவினால் முகம் உடனடி பொலிவு பெறும். இது முகத்தை சுத்தப்படுத்தவும். அழுக்குகளை குறைக்கவும் துணைப்புரிகின்றது.இரவில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் கண்களை சுற்றி கருவளையம் காணப்படும். அதனை தவிர்க்க வாழைப்பழ தோலை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் கருவளையம் விரைவில் மறைய ஆரம்பிக்கும்.முகத்தில் அதிக சுருக்கங்கள் இருந்தால், இந்த வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். இது ரத்த ஓட்டத்ததை சீர் செய்வதுடன் சுருக்கங்களை நீக்கும். வாழைப்பழ தோலில் சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பண்புகள் அதிகமாக காணப்படுகின்றது.இது சருமத்தில் கொலாஜனை உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை இருக்கமாக்க உதவுகின்றது.முகச்சுருக்கங்கள் நீங்கி என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வாழைப்பழ தோலை வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தால் முகம் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.

Feb 06, 2024

( DRY SKIN ) வறண்ட சருமத்திற்கு....

சருமம் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் அப்போது முகத்தில் ஆலிவு எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.மோரை முகத்தில் தேய்த்து20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் வறண்ட சருமம் பொலிவுடன் காணப்படும் மற்றும் முகம் மென்மையாக இருக்கும். சருமம் மிருதுவாக பழுத்த வாழை பழத்தை நன்கு மசித்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ சருமம் மிருதுவாக காணப்படும். தினமும் முகத்திற்கு தேங்காய் பாலுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகம் மிகவும் புத்துணர்ச்சி பெரும்.சருமம் அழகுபெற பால், கடலை மாவு, மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளப்பளப்பாகவும் மாறும், குறிப்பாக சருமம் அழகுபெற பெரிதும் உதவும்.

Feb 04, 2024

மேனி மினுமினுப்பாக.....

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள்கலந்து உடம்பில் தேய்த்து,சிறிது நேரம் கழித்துபயத்தமாவை தேய்த்து குளித்துவந்தால் மேனி பளப்பளப்பாகவும், சருமம்மிருதுவாகவும் இருக்கும்.மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுக்கும் 

Feb 02, 2024

இயற்கையான முறையில் மென்மையான சருமத்தை  தரும் சந்தனம்

 நம் முகத்தை இயற்கையான முறையில்  நம் வீட்டில் இருக்கும் சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக அழகு பெறலாம்.சந்தனம்  மருத்துவக் குணம் கொண்டது. மிகவும் வாசனையாகவும் இருக்கும்,இது அதிக குளிர்ச்சி வாய்ந்தது. இதைநாம் முகத்தில் அப்ளை செய்தால் முகம் வறட்சி தன்மையை குணப்படுத்துகிறது. முகத்திற்கு அதிகம் ஈரப்பதத்தை அளிக்கின்றது. சந்தனம்முகத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைக்கும் சிறந்த ஃபேஸ் பேக்காக சந்தனம் விளங்குகிறது.சந்தன பவுடர்- சந்தன பொடியை முகத்தில் அப்ளை செய்வதனால் முகதளர்வுகள், முகத்தின் ஈரப்பதம் மற்றும் நிறம் மேம்படுத்தப்படுகிறது.வறட்சியின் காரணமாக முகத்தில் அரிப்பு மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.சந்தன பொடி சருமத்தின் சுருக்கங்களை இறுக்கமாக்குகிறது.முகத்தில் தோன்றும் தொற்றுகள் மற்றும் அரிப்புகளை சந்தனப் பொடி குணப்படுத்துகிறது.மேலும் புத்துணர்வையும், குழந்தையின் தோல் போன்று மென்மையான சருமத்தையும் தரும் ஆற்றல் சந்தனத்திற்கு உண்டு.சந்தனத்தை பயன்படுத்தினால் சருமத்தை சந்தனம் போன்று பளபளவென்று இருக்கும்..சந்தனம் இறந்த செல்கள் தேங்கியிருக்கும் சருமத்தின் மந்தமான தோற்றத்தை தடுக்க கூடியது. சந்தனத்தை பயன்படுத்தும் போது சில காலம் சருமத்தில் இறந்த செல்கள் இல்லாமல் சருமம் புத்துணர்ச்சியாக , பொலிவுடன் இருக்கும். இதை முகத்தில் மட்டும் அல்லாமல் கண்களுக்கு கீழ், கழுத்திலும் கூட பயன்படுத்தலாம். இது மருக்களை வரவிடாமல் செய்ய தடுக்கிறது. அழகுப் பராமரிப்பில் முகப் பருக்களை தடுக்க உதவுகிறது..சந்தனக்கட்டை வாங்கி கல்லில் இழைத்து பயன்படுத்துவது. இது மிக நல்லது. ஏனெனில் இது செயற்கையாக எதுவும் கலக்காத இழைத்த தூய்மையான சந்தனம். இதை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினாலே சருமத்தின் உஷ்ணம் தணிக்கும்.எக்காரணம் கொண்டும் பூஜைக்கான சந்தன வில்லை (குறைந்த விலை ) வாங்க கூடாது. இது அசல் சந்தனம் கிடையாது. எம்போரியம் இருக்கும் இடங்களில் அசல் சந்தனம் கிடைக்கும். சந்தனம் எண்ணெய். இது அரோமா எண்ணெய் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும். இதுவும் சிறந்தது.வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் சந்தன எண்ணெயை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சந்தன பவுடர் அல்லது சந்தனத்தை இழைத்து பயன்படுத்தலாம்.

Feb 01, 2024

நகங்களை பராமரிக்க....

நகங்களை வெட்டுவதற்கு முன் நகத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால், நீங்கள்விரும்பும் வடிவத்திற்கு நகங்களை வெட்டலாம்.தினமும் பாலுடன் கொஞ்சம் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைத்தல் குறையும். மேலும் நகத்திற்கு பாதாம் எண்ணெயை தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.

Jan 28, 2024

பொடுகு தொல்லைதீர உப்பு

 பொடுகுதொல்லை வருவதற்கான முக்கிய காரணங்கள் ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதினாலும்,தலைமுடியை எண்ணெயைபசையுடன் அழுக்காக வைத்துக்கொள்வது, சரியாகதலை அலசாமல் இருப்பதினாலும், தினமும்தலைக்கு ஷாம்பு போடுவதினாலும்,தலைகுளித்துவிட்டு தலைமுடியை நன்றாக துவட்டாமல் இருப்பது., பொடுகு உள்ளவரின் சீப்பை பயன்படுத்துவது எனபல காரணங்கள் இருக்கின்றது..இந்தபொடுகு தொல்லை , உப்பு தலைமுடியில் இருக்கும் பொடுகை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. எனவேஉப்பு இரண்டு ஸ்பூன்எடுத்து கொண்டு, சிறிதளவுதண்ணீரில் கலந்து கொள்ளவும்.பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10,15 நிமிடம் மசாஜ்செய்ய வேண்டும்.பின்புமைல்டு ஷாம்பு போட்டுதலை அலச வேண்டும்.இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில்குணமாகும்.

Jan 25, 2024

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க தினமும் எலுமிச்சை சாறை தேய்த்து வர முடி வளரும் தன்மையை இழந்து முகம் அழகு பெரும்.முகத்தில் உள்ள முடி நீங்க முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அவற்றில் சோளமாவு, சர்க்கரைஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்டு போல் கலந்து முகத்தில் தடவி, பின்புகாய்ந்தவுடன் அவற்றை கைகளால் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதாக வந்துவிடும்.கை, கால்களில் கருப்பு நிறம் முடிகள் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை சாறை தடவி சோப்பு போட்டு குளித்து வர கை, கால்களில் இருக்கும் கருப்பு நிறம் முடிகள் போய் விடும்.

Jan 24, 2024

முகப்பரு தழும்புகள் மறைய...

முக்கியமாக பருக்களை கைகளால் தொடக்கூடாது.கொழுந்து வேப்பிலையை அரைத்து முகத்தில் உள்ள முகப்பரு மீது தடவி10 நிமிடம் பின் கழுவ வேண்டும். இது தொடர்ந்து செய்து வர நல்லது.வல்லாரை சாற்றுடன், முல்தானி மெட்டி பவுடருடன் கலந்து பேஸ் பேக் போட்டு வரலாம்.துளசியை சுடு நீரில் போட்டு பின் அதனை அரைத்து முகத்தில் தடவி வர நீங்கும்.பருவினால் ஏற்படும் தழும்புகள் மறைய இரவு உறங்குவதற்கு முன் புதினா சாறு 2 தேய்க்கரண்டி, 1/2 மூடி எலுமிச்சை சாறு மற்றும் பயத்தமாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் 10 நிமிடம் ஊறவைத்து பின்பு ஐஸ் கட்டியால் ஓத்தடம் கொடுத்தால், பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையும்.

Jan 23, 2024

புருவம் அடர்த்தியாக வளர...

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்..வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம்  குறையும்.உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.

Jan 19, 2024

உலர்ந்த தலை முடி சாப்டாக்க ஹேர் கண்டிஷனர்

இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி.?தேவையான பொருட்கள்:ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்,கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்இரண்டையும் நன்றாக கலக்கவும்:முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து ,உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். பயன்படுத்தும் முறை:இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும்.இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விடவும்.முக்கிய குறிப்புகள்:எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்த கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 25 26

AD's



More News