25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


அழகுக் குறிப்பு

Nov 20, 2023

 தொப்பையை குறைக்க easy way

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும். வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தால் தொப்பை குறைய உதவும். எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்க தொப்பை குறையும். உணவுகளில் இஞ்சி சேர்ப்பது வயிற்று தொப்பை குறைய உதவியாக இருக்கும். தினம் காலை ஒரு டம்ப்ளர் க்ரீன் டி குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம். உணவில் அதிகமான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

Nov 19, 2023

உடல் எடையைக் குறைக்க வாழைத்தண்டு ஜூஸ்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க விரும்பினால் வாழைத்தண்டு ஜூஸை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கலோரிகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம் வாழைத்தண்டு உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். வாழைத்தண்டில் காணப்படும் சிறப்பு வகை நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

Nov 17, 2023

முகம் பளபளப்பாக கொத்தமல்லி சாறு

தினமும்இரவில் படுக்கும்முன் கொத்தமல்லிசாறும், எலுமிச்சைசாறும் கலந்துஉதடுகளில் தடவிக்கொள்ளவும். கருப்பானஉதடுகள் பளபளப்பாகும். மூக்கைச் சுற்றிகரும்புள்ளிகள் இருந்தால்அங்கும் இந்தகலவையை தடவிஅரை மணிநேரம் ஊறவைத்து குளிர்ந்தநீரில் முகம்கழுவலாம். தொடர்ந்துசெய்து வரநன்மைகள் இருக்கும். 

Nov 16, 2023

முகப்பரு வராமல் இருக்க....

பருக்கள் ஏற்பட மலச்சிக்கல் ஒரு முக்கியக் காரணி. அன்றாட உணவு பழக்கத்தைச் சரி செய்வதன்  மூலமாக  மலச்சிக்கல்  வராமல்  பார்த்துக் கொள்ள வேண்டும்..பொடுகுத் தொல்லை, நீளமாக நகம் வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறையச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லி ட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.கொழுப்பு நிறைந்த அசைவ  உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை  போன்றவற்றையும் தவிரப்பது நல்லது.

Nov 13, 2023

எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாத. 'பீட்ரூட் - சோளமாவு' ஃபேஷியல்

சரும ஆரோக்கியத்தில் பீட்ரூட் அத்தியாவசிய வேர் காய்கறியாகும். அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், மினரல் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் சருமத்தில் அதிசயங்களை ஏற்படுத்தக்கூடும்தேவையான பொருட்கள்-பீட்ரூட் - 1, சோள மாவு - 2 டீஸ்பூன்; தண்ணீர் - தேவையான அளவு; பாதாம் எண்ணெய் - 2 டீஸ்பூன்செய்முறைமுதலில் பீட்ரூட்டை தோலுரித்து, சிறிய துண்டுகளாக கட் செய்ய வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு ப்யூரி பதத்திற்கு வரும் வரை நன்கு அரைக்க வேண்டும்.பின் அதை கடாய்க்கு மாற்றி, மிதமான நெருப்பில் சூடுபடுத்த வேண்டும்.அத்துடன் சோள மாவை மிக்ஸ் செய்து நன்கு கிளற வேண்டும்.கலவை நன்கு கட்டியாக வருவதற்கு, கூடுதல் சோள மாவும் சேர்த்துக்கொள்ளலாம்கலவையை சில நிமிடங்கள் குறைவான நெருப்பில் வைத்துவிட்டு அடுப்பைஅனைத்து விடலாம். கலவை ஆறியதும் பாதாம் எண்ணெயை செர்த்து நன்கு கலக்க வேண்டும்.பின், கிளாஸ் ஜாருக்கு மாற்றி, பிரிட்ஜில் வைத்து விடலாம்.இந்த ஜில் கலவையை அப்ளை செய்யும் முன்பு, முகத்தை சுத்தமாக வாஷ் செய்ய வேண்டும். பின், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.சுமார்20 நிமிடங்களுக்கு பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். செயற்கை சிகிச்சையில் ஏற்படக்கூடிய வீக்கம், வலி, அலர்ஜி போன்ற எவ்வித பக்கவிளைவுகளும் பீட்ரூட் ஃபேஷியலில் ஏற்படாது.

Nov 10, 2023

சரும பொலிவுக்கு உதவும் ஆரஞ்சு குளியல் பொடி

சரும பொலிவுக்கு உதவும் குளியல் பொடி ஒன்றினை வீட்டிலேயே தயார் செய்யலாம்.தேவையான பொருட்கள்!ஆரஞ்சு பழம் - 2 | கடலை மாவு - 1 ஸ்பூன் | அதிமதுரம் - 2 துண்டு | மஞ்சள் - K ஸ்பூன் | ரோஜா இதழ்கள் கைப்பிடி | ரோஸ் வாட்டர் - போதுமான அளவுஆரஞ்சு பழத்தில் இருந்து தோலை மட்டும் பிரித்து எடுத்து சூரிய ஒளியில்2 நாட்களுக்கு நன்கு உலர வைக்கவும் இதனுடன் ரோஜா இதழ்களைய உலர வைக்கலாம். நன்கு உலர வைத்த அதிமதுர துண்டினை இடித்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு தனியே தயாராக எடுத்து வைக்கவும் . மிக்ஸி ஜார் ஒன்றில் உலர வைத்த ஆரஞ்சு தோல் ரோஜா இதழ், அதிமதுரப் பொடி மஞ்சள் கடலை மாவு சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ள குளியல் பொடி தயார்இந்த பொடியினை ரோஸ் வாட்டருடன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்துசோப்புக்குமாற்றாகசருமத்திற்குதேய்த்துகுளித்துவரவும்.சருமத்தின் கூடுதல் எண்ணையை உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த குளியல் பொடி ஆனது, எண்ணெய் வடிதல் பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவுகிறது.சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களை திறம்பட அகற்றும் பண்பு கொண்ட இந்த பொடி ஆனது, சரும துளைகளை சுத்தம் செய்வதோடு,இறந்த செல்களை நீக்கி பொலிவான சருமம் பெறவும் உதவுகிறது.

Nov 09, 2023

உதடுகளை பளபளப்பாக்க....

ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவும் போது உதடு நிறம் மாறும்மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்கற்றாழையை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்மஞ்சள்தூள் உதடுகளில் தடவும்போது கிருமிகள் அழிந்துவிடுகிறது.புதினா மற்றும் நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.ஒரே அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளுங்கள்.அந்த கலவையை உங்கள் உதடுகள் மீது பூசி விட்டு, ஒரு மணி நேரம் கழித்து கழுவுங்கள்.இதனால் உலர்ந்த உதடுகளில் ஈரப்பதம் அதிகரிப்பதோடு,உதட்டின் நிறமும் மாற்றமடையும்.பீட்ரூட் எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லதோ,அதே அளவிற்கு உங்கள் உதடுகளுக்கும் நன்மையளிக்கும்.சிறிய பீட்ரூட் துண்டை எடுத்து உங்கள் உதட்டில் தடவி ஒரு மணி நேரம் காய வைத்து பின்னர் கழுவுங்கள்.இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதட்டின் நிறம் "பிங்க்" நிறத்தில் மாறும்.சிலர் வெள்ளரி துண்டுகளை குளிர்ச்சிக்காக கண்களில் வைப்பதை பார்த்திருப்போம்.ஆனால் வெள்ளரிச் சாற்றை உதடுகளில் தடவி வர,கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உதடுகள் பழைய நிறத்தை பெறும்.

Nov 05, 2023

பாசிப்பயறு மாவு

பாசிப்பயிரை மாவுபோலஅரைத்து சீயக்காய் தூள் போலதலையில் தேய்த்து குளிப்பதுமூலம் முடி வளர்ச்சிக்கு இதுஉதவுகிறது.மேலும் முகத்திற்கு இந்த பச்சைபயறுமாவைதேய்த்துகுளிப்பது மூலம் சருமத்தையும்ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும்.முகத்தில் சிதைந்த செல்களைபுதுப்பிப்பதற்கு பாசிப்பருப்பு மாவு உதவுகின்றது.பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

Nov 02, 2023

பொடுகுத் தொல்லை குறைய....

பொடுகைப் போக்க பலரும் பலவிதமான ஷாம்புகளைப் பயன்படுத்துகின்றனர் ஷாம்பூவைப் பயன்படுத்துவதால் பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவவும். லேசான [ஷாம்பு கொண்டு |முடியைக் கழுவி, கண்டிஷனரைப் | பயன்படுத்தவும்..பொடுகுக்கு காரணமான ஒரு வகை- பாக்டீரியா. இந்த கிருமிகளை அகற்ற பயன்படுத்தலாம்.வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து முடியின் வேர்களில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் விட்டுவிட்டு கழுவவும். பொடுகு தொல்லை நீங்கும்.ஒரு பிடி வேப்ப இலையை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.20 நிமிடங்கள் கொதிக்க வைத்து குளிரூட்டவும். தண்ணீரை வடித்து தனியாக வேப்ப இலைகளை பேஸ்ட் செய்து முடியின் வேர்களில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து மூலிகை ஷாம்பு கொண்டு கழுவவும். முடிவில், வேப்பம்பூ நீரை உங்கள் தலைமுடியால்  கழுவவும், 

Oct 31, 2023

முகம் பொலிவாக இருக்க திராட்சை

திராட்சையில்ஆல்பா ஹைட்ராக்ஸிஅமிலங்கள் உள்ளன. இவை சருமத்தைபுத்துயிர் பெறவைக்கின்றனசருமத்திற்கு தேவையானவைட்டமின்கள் சி, பி மற்றும்கே ஆகியவைதிராட்சையில் இருப்பதால்,இவை கொலாஜன்உற்பத்திக்கு உதவுகிறது முகத்தைபொலிவாகவும், அழகாகவும்வைத்துக்கொள்ள திராட்சையைஇரண்டு விதமாகபயன்படுத்தலாம். தேவையான பொருள்-திராட்சை-5,தயிர்- 1 டீஸ்பூன்,,எலுமிச்சைசாறு- 1 டீஸ்பூன் செய்முறை-திராட்சைகளைஅரைத்து கூழ்செய்து, 1 தேக்கரண்டிதயிர் சேர்த்து, நன்கு கலக்கவும்.இதில்எலுமிச்சை சாற்றைஅதில் சேர்க்கவும்.இந்த கலவையைமுகம் மற்றும்கழுத்தில் தடவிசிறிது நேரம்கழித்து சூடானநீரில் முகத்தைகழுவுங்கள்.தயிரில்இருக்கும் லாக்டிக்அமிலம், துளைகளைஇறுக்கி சுருக்கவும்,துளைகளைக் குறைக்கவும்உதவும்., இதுவறண்ட, மந்தமானசருமத்தை ஒளிசெய்யும் மற்றும்மென்மையானதாக மாற்றும்எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளைக்கொண்டுள்ளதுதேவையான பொருள் -திராட்சை- 5,தேன்-  1 டீஸ்பூன்செய்முறை-திராட்சைகளைஅரைத்து கூழ்செய்து அதில்ஒரு தேக்கரண்டிதேன் சேர்க்கவும்.இந்தகலவையை நன்குகலந்த பிறகு,முகத்தில் தடவி20 நிமிடங்களுக்குப் பிறகுகழுவ வேண்டும்.வாரத்திற்கு2,3 முறைஇந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.தேன்சருமத்தை ஒளிரவைக்கிறது. இதுமுகப்பரு மற்றும்தடிப்புத் தோல்அழற்சிக்கு சிகிச்சையளிக்கஉதவும், மற்றதோல் நிலைகளுக்கும்சிகிச்சை அளிக்கும்.. 

1 2 ... 19 20 21 22 23 24 25 26 27 28

AD's



More News