ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்கு தேய்த்து கழுவலாம்.தினமும் இரவு படுக்க செல்லும் முன் வெந்நீர், உப்பு எலுமிச்சைச்சாறு ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தம் செய்யவும்.பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் மருதாணி இலையை அரைத்து தடவினால் வெடிப்பு நீங்கும்.
காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் மெட்டபாலிசம் வேகமாகி வயிற்றுக் கொழுப்பு கரையும். இரவு உணவுக்குப் பிறகு குறைந்தது 3 மணி நேரம் காத்தால் உடலில் கொழுப்பு சேமிப்பு குறையும். தினம் 20 நிமிடங்கள் வேகமாக நடப்பது உடல் கொழுப்பை எளிதில் கரைத்து எடையை குறைக்கும். வெள்ளை அரிசி, மைதா, சர்க்கரை, பேக்கரி உணவுகளை தவிர்ப்பதால் இன்சுலின் spike குறைந்து fat சேமிப்பு குறையும். தட்டில் 50% காய்கறி, 25% புரதம் 25% சிறுதானியம் வைத்தால் இயற்கையாக portion control ஏற்பட்டு எடை குறையும்.
வேப்பிலை நம் பாரம்பரியத்தில் பல ஆண்டுகளாக இயற்கையான பராமரிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் வேப்பிலையைப் பயன்படுத்தும் பல வீட்டு முறைகள் உள்ளன.வேப்பிலையை நன்கு கழுவி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளலாம்.இந்த வேப்பிலை நீரை குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு கலந்து பயன்படுத்துவது பாரம்பரியமாக சருமப் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.மேலும், வேப்பிலை நீரை காட்டனில் நனைத்து முகத்தில் மெதுவாகத் தடவி வருவது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
தேங்காய் எண்ணெய் - குளிக்கும் முன் உடலெங்கும் தடவி, கடலைமாவுடன் குளித்தால்- தேகம் மின்னும்.மஞ்சள் + கற்றாழை - முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்தால் - முகம் கொழுகொழுவென மாறும்.கேரள அரிசி - பாலிஷ் செய்யாத பெரிய அரிசி- ஊட்டச்சத்தும், அழகும் சேரும்.பால் - முகத்தில் தடவினால் துளைகள் மூடி, நிறம் மங்காமல் காக்கும்.செம்பருத்தி + சீயக்காய் -ஷாம்பூவிற்குப் பதில் - கருங்கூந்தலை நீளமாக்கும்.வீட்டுக் காஜல் - கண்களை பளிச்சென்று அழகாக்கும்.சந்தனம் + முல்தானி மெட்டி - முகத்தில் தடவினால் - பளிங்குபோல மின்னும்.நல்லெண்ணை + கோதுமை மாவு + மஞ்சள் - முகத்தில் தேய்த்தால் - முடிகள் தானாக விழுந்துவிடும்.
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை வெறும் நீரால் முகம் கழுவு வேண்டும்.கற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் போடலாம்.வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம்.
நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி இயற்கையாகவே கருமை கலந்த ஊதா நிறத்தை தருவது. மருதாணி இலை சிவப்பு நிறத்தை தரும். முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேர இடைவெளியில், அவுரி பொடியையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை முடிகளில் கருமை நிறம் ஏறி இருக்கும். கரிசலாங்கண்ணியுடன் கறிவேப் பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இணைத்து அரைத்து முடிகளின் வேர் கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடியின் வளர்ச்சி கட்டுக்குள் வரும்.
ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும். பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டி தடவினால் முடி வளரும்.கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து, பாசிப்பருப்பு மாவு கலந்து தேய்த்தால் முடி உதிர்தல் நிற்கும்.கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும், தலையும் குளிர்ச்சியாகும்.சிறிய வெங்காய சாறை தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளிப்பது முடி உதிர்வைத் தடுக்கும்.செம்பருத்தி பூ + தேங்காய் எண்ணெய் கலவை கூந்தலைக் கருமையாக்கும்.முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது முற்றிலும் நிற்கும்.
வெயில் காலத்தில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் பொலிவிழப்பைத் தடுக்க கற்றாழை ஐஸ் க்யூப்ஸ் (Ice Cubes) சிறந்த தீர்வாகும்.தயாரிக்கும் முறை: கற்றாழை ஜெல்லினை நன்றாகக் கூழாக்கி, ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைத்து இதனைத் தயாரிக்கலாம்.பயன்கள்: இந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்வதால் சருமம் குளிர்ச்சியடையும், துளைகள் இறுக்கமடைந்து சுருக்கங்கள் குறையும். மேலும், இது முகப்பரு மற்றும் தடிப்புகளைக் கட்டுப்படுத்தி முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.
தோல் பொலிவு மற்றும் பளபளப்பு.முகத்தை பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் நீங்கி பிரகாசமாகவும் வைக்க விரும்புபவர்களுக்கான சோப்புகள்:பன்னீர் ரோஸ் (Paneer Rose).முகத்திற்கு இயற்கையான ரோஸ் நிற பொலிவையும் மென்மையையும் தரும்.பீட்ரூட் கேரட்(Beetoot Carrot ).சருமத்தின் வறட்சியை நீக்கி, இயற்கையான நிறத்தை மேம்படுத்தும் அதிமதுரம் .தோலில் உள்ள மங்கலான நிறம் மற்றும் கருந்திட்களை போக்க உதவும்.