மாதுளம் பழத் தோல் பொடி
மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
இந்தப் பொடியை நீருடன் கலந்து கொப்பளிக்க, வாய் துர்நாற்றம் நீங்கும்..
மாதுளம்பழத் தோலின் பொடியுடன், பால், ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம்.
மாதுளம்பழத் தோலைப் பொடித்து,தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.
சருமப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் மாதுளைப் பொடியைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஒரே மாதிரி நிறம் இல்லாமல் (uneven skin tone) இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் மாதுளை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.பிக்மண்டேஷன் உள்ளவர்கள் இதை வாரம் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம்.கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம். வயற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
0
Leave a Reply