தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால், பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை சக்தி அதிகரிக்கும். வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.
சுக்கு,மல்லி விதை ( தனியா ) ஆகியவற்றுடன், கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபி தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ. காபிக்கு பதிலாக இந்த சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே, வெந்நீர் அல்லது சுக்கு மல்லி காபியை அருந்தலாம்.
குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவது சகஜம் இதை விரட்ட எளிமையான வழி இருக்கிறது. உலர்ந்த மஞ்சள் கொம்பு ஒன்றை எடுத்து, அதை அடுப்பில் காட்டி, எரிய விடுங்கள். பின்னர், அதிலுள்ள தீயை அணைத்தால் ஏற்படும் புகையை சுவாசியுங்கள்.இவ்வாறு செய்யும் போது. மூக்கடைப்பு அகலும். அதுமட்டுமின்றி, கிருமிகளை அழிப்பதோடு, மூக்கு, சைனஸ் அறைகள் மற்றும் நுரையீரலைசுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.மூக்கு முற்றிலும் அடைத்துவிட்டாலும் கவலை வேண்டாம். குறுமிளகு என்று சொல்லக்கூடிய மிளகை ஊசியில் குத்தி, நெருப்பில் காட்டி, பின்னர் அதிலிருந்து எழும் புகையை சுவாசிக்க, மூக்கடைப்பு உடனே சரியாகும்.
அதிகப்படியான முட்டைகளை சாப்பிடுவது அதிக கொழுப்பு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். முட்டைகள் புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருந்தாலும், அதிகப்படியான நுகர்வு LDL (கெட்ட) கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம், சில நபர்களுக்கு, குறிப்பாக தற்போதுள்ள கொழுப்பு அல்லது இதயம் தொடர்பான நிலைமைகள் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். முட்டைகளை அதிகமாக உண்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு வழிவகுத்தால், சமநிலையற்ற உணவுக்கு வழி வகுக்கும். உண்மையில், அதிக அளவு முட்டைகளை தொடர்ந்து உட்கொள்வது, அதிக புரதச் சுமை காரணமாக முன்பே இருக்கும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிறுநீரகங்களை கஷ்டப்படுத்தலாம். அதே வேளையில், முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் முக்கியமானது.
தலைமுடி பிரச்சனையை தீர்க்க உதவும்.நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.இதய நோய் வராமல் தடுக்க உதவும்.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்..இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மார்பக புற்று நோயை தடுக்க உதவும். எலும்புகள் வலுவடைய உதவும்.
பால் - கால்சியம் சத்தின் சிறந்த மூலமான இதில் வைட்டமின் D உள்ளது. ஒரு கப் பாலில் 300 மிகி கால்சியம் உள்ளது. இது உங்களுக்கு தேவையான கால்சியம் சத்தை வழங்குவதோடு தசை மீட்புக்கும் உதவும்.பாதாம் பால் - அதிக கால்சியம் சத்து கொண்ட இது குறைந்த கலோரிகள் மற்றும் தாவரம் அடிப்படையிலான பாலாக அமைகிறது. ஒரு கப் பாதாம் பாலில் 450 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.
கம்பை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது, கம்பு மாவை அதில் சேர்த்து கட்டியாகாமல் கிளறி இறக்கி சாப்பிடலாம்.கால்சியம், புரதம், இரும்பு, கனிமச் சத்துகள் என அனைத்து சத்துகளுமே கம்பில் உள்ளது.வளரும் குழந்தைகளுக்கும், பருவடைந்த பெண்களுக்கும் அவசியம் தர வேண்டிய உணவு.சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு, ஆகிய பிரச்சனைகளில் இருந்தும் இது காக்கிறது.சருமம், கண்பார்வைக்கு அவசியமான வைட்டமின் A, பீட்டா கரோட்டின் கம்பில் அதிகளவில் உள்ளது.கம்பு, வேண்டாத கொழுப்புகளை உடலில் தங்கவிடாது.
மதிய நேர குட்டித் தூக்கம் நல்லதா, கெட்டதா?. மதிய நேர குட்டி தூக்கத்தை ஆங்கிலத்தில் afternoon cat nap என்று சொல்கிறார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளில், மதிய நேரம் தூங்குவது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும், சோர்வை குறைத்து சுறுசுறுப்பாக்கும் எனத் தெரிய வந்துள்ளது. ஆதலால் மதிய நேர குட்டி தூக்கம் நல்லது என உடல் நல நிபுணர்கள் கூறுகின்றனர்.
கற்பூரவள்ளி ,துளசி, சின்ன வெங்காயம்,உப்பு நன்றாக இடித்து அதன் சாரை எடுத்து அதனுடன் மிளகுத்தூள் எலுமிச்சை சாரை சேர்த்து குடித்தால் போதும் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும் நல்ல மருந்து, முயற்சி செய்து பாருங்கள்
வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸ்ஐ தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். மலேரியா நோய்க்கு இந்த ஜூஸ்ஐ குடிப்பதால், அதுகுயினின் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேம்பில் அதிகளவு கால்சியம் உள்ளதால், நமது எலும்புகளுக்கு நன்மை தருவதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய்க்கு கூடவேம்பு மருந்தாக அமைகிறது.வேப்பிலை சாற்றின் கசப்பான தன்மை காரணமாக இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. இது மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைத்து இரத்த சர்க்கரை ஏறாமல் உடனே ஏறாமல் தடுக்கிறது.