25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நலம் வாழ

Sep 05, 2024

ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்கு நல்ல பலனை அளிக்கும் கோவைக்காய்

வைட்டமின் ஏ, கால்சியம்,  ஃபோன்க் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆ கியவை இதில் நிறைந்துள்ளன. வயிற்றுப் புண், வாய்ப்புண், மூல நோய் வேதனைஆகியவற்றை நீக்கும். ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாற்றை அடிக்கடி உட்கொண்டால் சர்க்கரை வியாதிக்குப் பக்கவிளைவும் அதிகம் ஏற்படு வதில்லை. பரம்பரையில் நீரிழிவு நோய்இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதற்கொண்டே உ ணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.வாய்ப்புண்ணுக்குப் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்குக் கோவைக்காய்நல்லது.வைட்டமின் பி 6, பி 12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன. 

Sep 03, 2024

நூக்கல்  நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது

நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது. நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Sep 02, 2024

மருத்துவ   திறன் கொண்ட  பாகற்காய்

குடற்புழுக்களை நீக்கும் திறன் கொண்டது.ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக்கும்.புத்திக்  கூர்மையை உண்டாக்கும்.பித்தம் கபம் ஆகியவற்றை குணமாக்கும்.உடல் எடையை குறைக்க உதவும்.நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.நுரையிரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Sep 01, 2024

வாழைத்தண்டு நோய் தீர்க்கும் காய்கறி

பித்தத்தைத் தணிக்கக்கூடியது. இயல்பாகச் சூடு  நிறைந்த தண்டு என்றாலும் சிறுநீரைப் பெருக்கும் வாழைத்தண்டுப் பச்சடி உடம்பு உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உடல் உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும். அதை உண்டால் குடலில் சிக்கிய மயிர், தோல், ஆகியவற்றை நீக்கும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,வைட்டமின் பி, சி ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்த நீரைப் பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயலைச் சீராக்கிச் சிறுநீரகக் கல் அடைப்பைத் தடுக்கும்.வாழைத்தண்டைப் பொரியல், கூட்டாகச் செய்து சாப்பிடுவது மட்டுமே நமக்குத் தெரியும். அது பல வகைகளில் நமக்கு மருந்தாக உதவுகிறது.சிறுநீரகப் பிரச்னை மற்றும் அதீத உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சிறுநீரை  நன்றாக வெளியேற்றும்.

Aug 30, 2024

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வாழை பூ 

வாழை பூ கொழுப்புகளை கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்க செய்யும். வயிற்று புண்களை ஆற்றும். செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவும். வாய் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். மேலும் மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

Aug 29, 2024

வெந்தயம்

வெந்தயம் பசியைக் குறைத்து உணவின் அளவைக் குறைப்பதோடு, உடல் பருமன் கொண்டவர்களின் பெரும் பிரச்னையாக உள்ள ரத்த அழுத்த உயர்வுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும்., நீரிழிவு உள்ளவர்களுக்கு உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இயற்கையான எடைக் குறைப்புக்கு இது கைகொடுக்கும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலியைக் குறைக்கவும், மாதவிடாய்ச் சுழற்சியை முறைப்படுத்தவும் வெந்தயம் பயன்படுகிறது.

Aug 28, 2024

நரம்பு சுருட்டல்  நீங்க…

வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக்  கற்றாழையில் அரைத்து  தடவி  2 மணி நேரம் உலர விட்டு பின் கழுவ வேண்டும். இவ்வாறு 20 நாள் வரை செய்ய வேண்டும்.புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட  வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

Aug 23, 2024

தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவும் இந்துப்பு

இந்துப்பு கலந்த இளஞ்சூடான நீரில் வாய்க் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கிப் பல்வலி, ஈறுவீக்கம் போன்றவை குணமாகும். ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை இதற்கு உண்டு. உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும்உதவுகிறது. தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இதய பாதுகாப்பிற்கு பேருதவி  புரிகிறது.

Aug 14, 2024

சொடக்கு தக்காளி நன்மை

சொடக்கு தக்காளி காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும். நன்கு முற்றிய பழத்தை சாப்பிட்டால் நுரையீரல் நோய்கள் நீங்கும். சிறுநீரகம் கல்லீரல் பிரச்சினைகள், சரியாகும். இந்த பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் அநீமியா சோர்வு அறிவுத்திறன் குறைபாடுகள்  சரியாகும் கட்டிகளை கரைக்கும் ஆற்றலும் இந்த பழத்துக்கு உண்டு.

Aug 11, 2024

முட்டையை வேகவைக்கும் போது ....

 முட்டையை சிலர் பொதுவாக சோறு வேகவைக்கும் போது அந்த தண்ணீரிலேயே சோறுடன் சேர்த்து வேக வைப்பர்.. இன்னும் சிலர் குழம்பு செய்யும் போது அதிலும் முட்டையை ஓட்டுடன் முழுசாக வேக வைப்பார்கள்.. இது தவறானதாகும்.ஏனென்றால் அந்த பச்சை முட்டையிலிருந்து வெளிவரும் கெட்ட நீர் .ஒரு இறந்த பிணத்தை குளிப்பாட்டும் நீருக்கு சமமாகும். இதனால் கெடுதி அதிகம் ஏற்படும். ஆகையால் முட்டையை அவிக்கும் போது தனியாக ஒரு பாத்திரத்தில் வேகவைப்பது சிறந்ததாகும்..

1 2 ... 32 33 34 35 36 37 38 ... 48 49

AD's



More News