சாதாரண ஈ.சி.ஜி (ECG) காட்டாத, விட்டு விட்டு ஏற்படும் இதயத் துடிப்பு மாற்றங்களைக் கண்டறிய 24-48 மணி நேரம் மார்பில் பொருத்தப்படும் ஒரு சிறிய ரெக்கார்டர் சாதனம் இதுவாகும்.யாருக்குத் தேவை? நெஞ்சு படபடப்பு, திடீர் மயக்கம், மாரடைப்புக்கு பிந்தைய துடிப்பு மாற்றம் உள்ளவர்கள் மற்றும் பேஸ்மேக்கர் (Pacemaker) பொருத்தியவர்கள்.பயன்படுத்தும் முறை: மார்பில் ஒட்டப்படும் இந்தச் சாதனத்தை அணிந்து கொண்டு குளியலைத் தவிர மற்ற அனைத்து அன்றாடப் பணிகளையும் செய்யலாம். அதிநவீனக் கருவிகளை கைப்பேசியுடனும் இணைக்கலாம்.கவனிக்க வேண்டியவை: சாதனம் நனையக் கூடாது; மொபைல் மற்றும் காந்தப்புலங்களுக்கு அருகில் அதிக நேரம் இருக்கக் கூடாது; அறிகுறிகள் தோன்றும் நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.முக்கிய பயன்:துல்லியமான இதய செயல்பாட்டை அறிந்து, பேஸ்மேக்கர் தேவையா என்பதைத் தீர்மானிக்கவும், மயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் உதவுகிறது.
முதுமையில் ஏற்படும் நெஞ்சு எரிச்சலுக்கும் மாரடைப்புக்கும் அறிகுறிகளில் அதிக ஒற்றுமை இருப்பதால் குழப்பம் ஏற்படலாம். அவற்றை பிரித்தறியும் வழிகள்:. நெஞ்சு எரிச்சல் (Heartburn / GERD)காரணம்: முதுமையில் உணவுக்குழாய் தளர்ச்சியடைவது (Presbyoesophagus), அமிலம் நெஞ்சுக்குள் வருவது (Refluxoesophagitis) மற்றும் உதரவிதான இறக்கம் (Hiatus hernia).அறிகுறிகள்: நெஞ்சு அடைப்பு, எரிச்சல், வாந்தி, வாயில் உமிழ்நீர் சுரப்பது. குனியும் போதோ, தலையணை இன்றி படுக்கும் போதோ, அதிகமாக சாப்பிடும் போதோ தொல்லை அதிகரிக்கும்.சிகிச்சை: கொழுப்பு மற்றும் உணவின் அளவைக் குறைத்தல், உடல் எடையைக் குறைத்தல், படுக்கும் போது தலைப்பகுதியை உயர்த்துதல், மருந்துகள் உட்கொள்ளுதல். பலனளிக்காவிடில் அறுவை சிகிச்சை. மாரடைப்பு (Heart Attack)காரணம்/ஆபத்துகள்: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மது, புகைப்பிடித்தல், மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும்.அறிகுறிகள்: கடின உடற்பயிற்சி, வேகமான நடை, அதிக உணவுக்குப் பின் அல்லது சும்மா இருக்கும் போது கூட திடீர் நெஞ்சுவலி, படபடப்பு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.
நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றும் சேர்த்து வருவது, அறுபதாவது வயதில் வரும் பிறந்த நாளில் தான்.மறுமுறை இதே போல சேர்ந்து வருவது நூற்று இருபதாவது வயதில் தான். அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள் ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை"ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி' என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்காமலே கூட போய் விடுகிறது. இருப்பவர்கள் இதை செய்து கொள்வது நல்லது தானே.
ஏற்கனவே அவர்களின் அன்றாட வாழ்க்கையில் வேலைகளை அவர்களே செய்துகொள்பவர்கள். நன்றாக நடந்து மாடிப் படிக்கட்டுகளில் தாங்களாகவே நடக்கும் திறன் உள்ளவர்கள். உயரத்திற்கு ஏற்ற எடை (BMI 1823) உள்ளவர்கள். வாழ்வியல் நோய்கள் -சுகர், பி.பி., கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள். சுய எதிர்ப்பாற்றல் நோய்கள் (auto immune disorders), முடக்குவாதம், தைராய்டு நோய் இல்லாதவர்கள். மது, புகைப்பழக்கத்தால் கல்லீரல், நுரையீரல் நோய்கள் இல்லாதவர்கள். இதய நோய்கள் இல்லாதவர்கள். ரத்தம் கசிதல்,உறைதல் குறைபாடு இல்லாதவர்கள். தடுமாற்றம் உள்ள நடை இல்லாதவர்கள். நரம்பியல் நோய், பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் நோய் போன்ற பிரச்னைகள் இல்லாதவர்கள்.
உங்களுக்கு இரண்டு கால்களிலும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது அதிகமாக வலி ஏற்படுகிறதா? சிறிது நேரம் நடந்தால் வலி சற்றுக் குறைந்து, ஆனால் நாள் முழுவதும் ஒரு அசௌகரியம் நீடிக்கிறதா? உங்களுக்கு பி.பி., சுகர் இல்லை என்றாலும், உடல் எடை சற்று அதிகமாக இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.❓ காலையில் வலி ஏற்படக் காரணம் என்ன?காலையில் ஏற்படும் குதிகால் வலிக்கு மிக முக்கியமான காரணம் கால்கேனியல் ஸ்பர் (Calcaneal spur) என்னும் தொல்லைதான்.எலும்பு வளர்ச்சி: கால்சியம் சத்து, குதிகால் எலும்பில் அதிகமாகப் படிந்து (முள் போல) வளர்வதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.தசையழுத்தம்: இந்த கூடுதல் எலும்பு வளர்ச்சி, குதிகால் தசைகளுக்கு அதிக அழுத்தம் தருவதால் கடுமையான வலி உண்டாகிறது.🎯 இது யாருக்கெல்லாம் வரலாம்?⚖️ உடல் பருமன் (அதிக எடை) உள்ளவர்கள்👟 பொருந்தாத அல்லது கடினமான காலணிகள் அணிவோர்🚶♂️ தவறான நடை அமைப்பு உள்ளவர்கள்👵 முதியோர்கள்🔍 நோயின் அறிகுறிகள் மற்றும் கண்டறிதல்காலையில் படுக்கையை விட்டு எழும்போது, ஊசி குத்துவது போல திடீரென கடுமையான வலி ஏற்படும்.நேரம் ஆக ஆக, வலி சற்றுக் குறைந்து ஒருவித அசௌகரியமாக மாறும்.நீண்ட நேரம் அமர்ந்திருந்துவிட்டு திடீரென எழும்போது மீண்டும் இந்த வலி ஆரம்பமாகும்.கண்டறியும் முறை: ஒரு சாதாரண குதிகால் எக்ஸ்ரே (X-Ray) படம் மூலம் இந்த நோயை எளிதாக உறுதி செய்துவிடலாம்.🛠️ சிகிச்சை முறைகள் (Treatments)வீட்டு வைத்தியம்: வெந்நீரில் கல் உப்பு போட்டு, அதில் உங்கள் கால்களை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். இது தற்காலிகமாக வலியைக் குறைக்கும்.உடல் பருமனைக் குறைத்தல்: எடையைக் குறைப்பது குதிகாலுக்குத் தரும் அழுத்தத்தைக் குறைக்கும்.பொருந்தும் காலணிகள்: மென்மையான மற்றும் சரியாகப் பொருந்தும் மருத்துவக் காலணிகளை (MCR slippers) மட்டுமே அணிய வேண்டும்.முறையான உடற்பயிற்சி: பிஸியோதெரபி (Physiotherapy) பயிற்சிகள் தசைகளை வலுவாக்கும்.மருந்துகள்: மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.நடைப் பயிற்சி: சரியாக நேராக நடக்கப் பழக வேண்டும்.மேற்கூறிய எளிய சிகிச்சைகளுக்குப் பலனில்லை எனில், மருத்துவர்கள் வலி உள்ள இடத்திலேயே ஊசி (Injection) போடுவார்கள். ஆனால், இது ஒரு தற்காலிக நிவாரணமே ஆகும். இதிலும் குணம் தெரியவில்லை என்றால் மட்டுமே இறுதி வாய்ப்பாக அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படும்.🩺 உங்களுக்கான முக்கிய ஆலோசனை:நீங்கள் முதலில் உடல் பருமனைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். வீட்டிலும் வெளியிலும் மிருதுவான காலணிகளை (MCR) அணியுங்கள். தொடர்ந்து வலி இருப்பின், ஒரு சிறந்த எலும்பு மருத்துவச் சிகிச்சை நிபுணரை (Orthopedist) நேரில் சந்தித்து ஆலோசனை பெறவும். தொடர்ந்து பிஸியோதெரபி செய்வதன் மூலம் இந்த வலியிலிருந்து முற்றிலும் விடுபட அதிக வாய்ப்புள்ளது!
பசித்தபின்னர் சாப்பிடுங்கள் என்று பொதுவான ஆலோசனை ஒன்று உண்டு. இருப்பினும் பசி வரும்வரை சாப்பிடாமல் இருக்க வேண்டாம். தாகம் வரும்வரை தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். போதுமான தண்ணீர் அருந்துவது நல்லது. தூக்கம் வரும்வரை படுக்காமல் காத்திருக்க வேண்டாம். உடலுக்கான ஓய்வை அளிப்பது முக்கியம். உழைப்பு முக்கியம்தான். அதற்காகச் சோர்வு ஏற்படும்வரை ஓய்வெடுக்காமல் உழைக்க வேண்டாம். நோய்வாய்ப்படும்வரை மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லாமல் காத்திருக்க வேண்டாம். வருமுன்னர் காக்க வேண்டியது நம் கடமை. பிரச்னை வரும்வரை கடவுளிடம் பிரார்த்தனை செய்யாமல் சும்மா இருக்க வேண்டாம்.
ஞாபகசக்தியை மேம்படுத்தச் சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு செய்தால் போதும்.நேற்று என்னவெல்லாம் சாப்பிட்டோம். யார் யாரையெல்லாம் சந்தித்தோம் என நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அன்றைய இரவில் தூங்கச் செல்லும் முன்னும் நடந்தவற்றை அசைபோடலாம்.தெருவில் உள்ளவர்களின் பெயர்களையும் தெரிந்தவர்களின் முகங்களையும் நினைவில் வைக்கப் பழக வேண்டும்.நம் பிள்ளைகளின் மொபைல் எண்களைத் திரும்ப திரும்ப நினைவில் கொண்டுவர வேண்டும்.அன்றாடம் காலையில் நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு அவற்றைச் செய்து,இரவில் நாம் இட்ட பட்டியலில் முழுவதும் முடிந்துவிட்டதா என மூளையைச் சிறிது சிறிதாகப் பழக்க வேண்டும்.கடைகளுக்குச் செல்லும் முன் வாங்க வேண்டிய லிஸ்ட்டை நினைவில் வைத்து,அதை வாங்கியபின் சரிபார்க்க வேண்டும்.மறக்காமல் வெளியில் செல்லும் முன்பு நம்மைப் பற்றிய அடையாள அட்டையை (வீட்டு முகவரி, தொலைபேசி எண், நம்முடைய நோய் பற்றிய விவரங்கள்) கொண்டுசெல்ல வேண்டும்.
1 தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால்..சில நேரங்களில் உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளலாம். அப்போது பதற்றப்படாமல் இரண்டு கைகளையும் மெதுவாக தலைக்கு மேல் உயர்த்தி சில விநாடிகள் வைத்திருக்கவும். இதனால் தொண்டை தசைகள் சற்று தளர்ந்து உணவு கீழே செல்ல உதவலாம். 2.தவறான தலையணை காரணமாக கழுத்து வலி வந்தால்..தூங்கும் போது சரியான தலையணை பயனபடுத்தலில்லை என்றால் கழுத்து வலி ஏற்படலாம். அப்போது படுக்கையிலேயே கால் களை ஒன்றன் பின் ஒன்றாக உயர்த்தி, கால் விரல்களை மெதுவாக பிசைந்து மசாஜ் செய்யுங்கள் இதனால் நரம்புகள் தளர்ந்து சற்றே நிவாரணம் கிடைக்கலாம். 3) காலில் திடீரென தசை இறுக்கு (cramp) ஏற்பட்டால்..சில நேரங்களில் கால்களில் தசை இறுக்கு அல்லது சுளுக்கு போன்று வரும். அப்போது வலது கால் வலித்தால் இடது கையை உயர்த்தவும், இடது கால் வலித்தால் வலது கையை உயர்த்தவும். இது உடலின் நரம்பு சமநிலையை சீராக்க உதவலாம். 4.பாதத்தில் திடீரென கூச்சம் (நரம்பு பிடிப்பு) வந்தால்…அப்படி இருந்தால் எதிர் பக்க கையின் உள்ளங்கையை வேகமாக சுழற்றி அல்லது மசாஜ் செய்யுங்கள். இதனால் நரம்பு அழுத்தம் குறைந்து பாத வலி குறையலாம்.
முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம்.எந்தளவிற்கு விரைவாகச் சிகிச்சை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு ஆஸ்துமா விரைவில் குணமாகும்.வாகனம் ஓட்டும்போதும், சமையல் செய்யும்போதும், ஒட்டடை அடிக்கும்போதும் முகத்தைத் துணியால் மூடிக்கொள்வது அவசியம்.மருத்துவரிடம் ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காண்பிப்பது மிக முக்கியம்.தவறாமல் செய்யும் நடைப்பயிற்சி மூலம் நுரையீரலின் செயல்திறனை அதிகரித்துஆஸ்துமாவின் தொல்லையை வெகுவாகக் குறைக்க முடியும்.பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சி மிகவும் அவசியம்.சரியாக உட்காருதல் மற்றும் தூங்கும் நிலைகளை முறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்கவும்.மனதைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் அவசியம்.ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே ஆரம்பிக்க வேண்டும்.சைனஸ் மற்றும் வயிறுஎரிச்சல் போன்ற தொல்லைகளுக்குத் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் நீராவி பிடித்துக்கொள்ளலாம்.இன்புளூயன்ஸா, நிமோனியா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இன்புளூயன்ஸா தடுப்பூசியும், ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் நிமோனியா தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.உள் இழுப்பான் (Inhaler) மற்றும் உள் உறிஞ்சி (Nebulizer) ஆகியவற்றை உபபோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். மூச்சுவிடும் சிரமத்திலிருந்துஉடனே நிவாரணம் கிடைக்கும். பக்கவிளைவுகள் ஏதுமில்லை. குறைந்த அளவு மருந்தே உள்ளே செல்லும்.முடிக்குச் சாயம் (Hair dye) அடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளிக்கொணர மார்பு இயன்முறைச் சிகிச்சை தேவைப்படும். சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ எடுத்துக்கொள்ள வேண்டும்.நோய் தீவிரநிலையில் இருக்கும்போது வெந்நீர் அருந்துவது நல்லது.காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alarm) வீட்டில் தேவை.தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்க தயங்கக்கூடாது.
வாந்தி, வயிற்றுப்போக்கினால் நீரிழப்பு ஏற்பட்டால் ORS பாக்கெட்டுகளைப் பயன்படுத்துங்கள்.இதில் போலிகளும் விற்கப்படுகின்றன. எனவே, பல வண்ணங்களில் விற்கப்படும் பானங்கள் வாங்குவதில் கவனமாக இருங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி, தரமான பாக்கெட்டுகளையே வாங்குங்கள்.நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்-அதிக தாகம் எடுப்பது, நாவறட்சி, சிறுநீர் குறைவாகப் போவது, அடர்ந்த மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போவது, தலைவலி, தசைப்பிடிப்பு போன்றவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை உணர்த்தும்.வீட்டிலேயே தயாரிக்கலாம்உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஒரு லிட்டர் ஒ.ஆர்.எஸ். கரைசலில் சர்க்கரை 13.5 கிராம், சோடியம் குளோரைடு 2.6 கிராம், பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம், சோடியம் சிட்ரேட் 2.9 கிராம் சேர்க்க வேண்டும். இவற்றைக் கொதிக்க வைத்து, பின்பு ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும் அரை டீஸ்பூன் உப்பும் சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்கு கலக்கிக் கரையச் செய்தால் ஓ.ஆர்.எஸ் கரைசல் தயார்.ஒ.ஆர்.எஸ். கரைசல் மிதமான நீரிழப்பை மட்டுமே சரி செய்யும். கடுமையான நீரிழப்புக்கு மருத்துவச் சிகிச்சை அவசியம்.