ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப்பூ சர்க்கரை
ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப்பூ சர்க்கரை.
பொருள்:
இலுப்பைப்பூ இனிப்புச்சுவை உடையது.பழங் காலத்தில் சர்க்கரை எனும் இனிப்புப் பொருளை கண்டு பிடிக்காத காலங்களில் இதனையே இனிப்புக்காக உண்டனர். இப்போதும் பழங்குடிகள் இனிப்புக்காக இலுப்பைப்பூவை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இலுப்பையின் பூமட்டும் அல்ல இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என அனைத்துமே மருத்துவ குணம் உடையது.தாகத்தைத் தீர்க்கும் மலச் சிக்கலைப் போக்கும். மருத்துவ குணம் நிறைந்த இலுப்பைப்பூவில் குளுக்கோஸ் அதிகம் என்பதாலேயே இனிப்புச்சுவை உருவாகிறது.
0
Leave a Reply