25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


நலம் வாழ

Nov 14, 2024

வைட்டமின் B6 (PYRIDOXINE) சத்து நிறைந்த உணவுகள்

1. மஞ்சள்.2. பிஸ்தா.3. குங்குமப்பூ.4. கோழி இறைச்சி.5.கல்லீரல்.6. மாட்டிறைச்சி.7. பன்றி இறைச்சி.8. சால்மன் மீன்.9. டோஃபு.10.பிரிஞ்சி இலை. 

Nov 08, 2024

எடை குறைக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்

.உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தினமும் தூங்கும் முன் வெள்ளரிக்காயை கட் பண்ணி அதில் கொஞ்சம் புதினா சேர்த்து அரைத்து சாறு எடுத்து அதில் அரை லெமன் பிழிந்து குடித்தால் உடல் எடை மடமட என குறையும் மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும் உடல் சூட்டை தணிக்கும் மன அழுத்ததை குறைக்கும் இதை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை சீக்கிரம் குறையும்.உடல் எடை அதிகமா இருக்கா இந்த ஜூஸ் குடித்து பாருங்க மடமட என குறையும்.

Nov 07, 2024

கோதுமை மாவு

கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால். உடல் பலம் பெறும். அக்கிப்புண். தீப்பட்ட இடங்கள், தோல் உரிந்த இடங்கள் போன்றவற்றில் இதன் மாவை நேரடியாகவோ, வெண்ணெய் சேர்த்தோ பூசினால் எரிச்சல் தணிவதோடு பிரச்னையின் தீவிரமும் குறையும்.

Nov 04, 2024

ஆப்பிள் பற்றிய சில தகவல்கள்

உடல் எடையை குறைப்பதிலும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் ஆப்பிள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிளில் இரண்டு வகையான நார்ச்சத்து உள்ளது. அதில் ஒன்று கொலஸ்டராலைக் குறைப்பது. மற்றொன்று பெருங்குடலில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கிறது.

Nov 03, 2024

பீர்க்கங்காய் நன்மைகள்

எடை குறைய உதவும்.ரத்தத்தை சுத்தம் செய்யும்.மஞ்சள் காமாலையை குணமாக்கும்.மலச்சிக்கலை குணமாக்கும்.வயிறு சுத்தமாகும்.சிறு நீரக கற்கள் கரையும்.கண் பார்வைக்கு நல்லது.

Nov 01, 2024

மூக்கு எரிச்சல்

மூக்கு எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறுதுண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்து கொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப் பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும்.

Oct 31, 2024

அரிசியை விட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ள கம்பு

அரிசியை விட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ள கம்பு.பெண்களுக்கு இந்த உணவு முக்கியம்கம்பு பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. மாதத்தில் நான்குமுறையாவது கம்பை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும், ரத்தபோக்கும் உண்டாகும் நேரங்களில் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் வைத்துகொடுப்பதன் மூலம் இவை குறையலாம். அதே நேரம் கம்பு உடன் மோர் மற்றும் சாம்பார் வெங்காயம் சேர்த்தும் சாப்பிடலாம்.பிரசவித்த பெண்கள் கம்பு உணவு எடுத்துகொள்ளும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதோடு ஆற்றல் மிகுந்த சத்துகளை கொண்டிருப்பதால் அவர்கள் சோர்வு, இல்லாமலும் இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது.

Oct 28, 2024

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையில் வலியை குறைக்க…

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினையில் பொதுவான ஒன்று வயிற்றுவலி இதற்கு காய்ந்த கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூ இரண்டையும் இரவு தூங்கும் முன் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்று வலி குறையும். உணவோடு தினம் வேளையும் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டுவர வயிற்று வலி, வாந்தி இருக்காது. மதிய உணவாக தயிர் சாப்பிட உடலுக்கு இதமாக இருக்கும். எரிச்சல் அடங்கும்.

Oct 25, 2024

கல்லீரல் வீக்கதை சரி செய்யும் சிறு கீரை

மலச்சிக்கலைப் போக்கும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கல்லீரல் வீக்கதை சரி செய்யும்.செரிமானமின்மை பிரச்சனைக்கு, இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் ஆண்மை குறைபாடு நீங்க,கண்களைக் காக்க,காயங்களை ஆற்றும் தன்மை சிறு கீரைக்கு உண்டு

Oct 22, 2024

ராஜ்மா

கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் வேலையைச் செய்யக்கூடியது சிறுநீரகம், 'கிட்னி பீன்ஸ்' எனப்படும் ராஜ்மாவில் உள்ள உயர்தர புரதம் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்பட உதவும். உடலுக்கு கேடு செய்யாத புரதம் இதில் உள்ளதால் இது கொழுப்பை உடலில் சேர விடாது..

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 53 54

AD's



More News