25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Mar 23, 2024

மாதுளை கொய்யா ஜூஸ்

தேவையானவை - கொய்யாபழம் 130 கிராம் (வெட்டி விதை நீக்கியது),மாதுளை பழம் 250 கிராம்(வெட்டிஉதிர்க்கவும்) ,நன்னாரி சர்பத் தேவைக்குசெய்முறை - உதிர்த்தெடுத்த மாதுளம் விதைகளுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் கொய்யாபழத்தை சேர்த்து அரைக்கவும். இதனுடன் சுவைக்கேற்ப நன்னாரி சேர்த்து பரிமாறலாம். மலச்சிக்கல், சளி, இருமல் ஆகியவற்றை தடுக்கும்.

Mar 23, 2024

காரட் பேரி ஜூஸ்

தேவையான பொருட்கள் - காரட் கால் கிலோ,  பேரிக்காய் 2 எண்ணிக்கை, தேன் தேவைக்கேற்ப.செய்முறை - ஜூஸரில் காரட் மற்றும் பேரிக்காயைச் சாறு எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால், வேறு எந்த ஜூஸ் பக்கமும் போக மாட்டீர்கள்.ஜூஸர் இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்து வடிகட்டியும் ஜூஸ் எடுக்கலாம். 

Mar 23, 2024

ஜில் நீர் மோர்

 தேவையான பொருட்கள் -  தயிர் 2 கப், உப்பு சிறிதளவு, பச்சை மிளகாய் 1 சிறியது, சின்ன வெங்காயம் 3, இஞ்சி 1 இஞ்ச், கருவேப்பிலை சிறிதளவு, மல்லி இலை சிறிதளவு, பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன், சீரகப் பொடி கால் டீஸ்பூன், ஜீனி 3 டீஸ்பூன், தண்ணீர் 3 கப்,செய்முறை - தயிரை தவிர்த்து மீதி அனைத்தையும் ,ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பின் தயிர் சேர்த்து நன்றாக அடித்துக் கொண்டு, தண்ணீர் சேர்த்து வடிகட்டி ,பிரிட்ஜில் வைத்து ஜில் ஆனவுடன் எடுத்துக் குடியுங்கள். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.

Mar 16, 2024

காரட் மாதுளை ஜீஸ்

 தேவையான பொருட்கள் -காரட் 6 தோல் சீவி துருவியது, மாதுளை 2 வெட்டி உதிர்த்தது. தேன் ¼டீஸ்பூன்.செய்முறை -ஜுஸர் அல்லது மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பரிமாறலாம். இந்த ஜீஸ் குடித்தால் இரத்தம் விருத்தியாகும். கண் பார்வை கூர்மையாகும் இது ஒரு உற்சாக டானிக் வயதானவர்கள் வாரம் மூன்று முறை இந்த ஜூஸ் பருகலாம்.

Mar 16, 2024

நன்னாரி வேர் ஜீஸ்

தேவையான பொருட்கள்- நன்னாரி வேர் ½ தேக்கரண்டி நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும், எலுமிச்சை 1 பழம், பனஞ்சர்க்கரை அல்லது சர்க்கரை தேவையான அளவு.செய்முறை- 2 டம்ளர் நீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து பனஞ்சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்த்துப் பருகலாம். வெயில் காலத்தில் அடிக்கடி பருகலாம்.

Mar 16, 2024

வாழைத்தண்டு ஜீஸ்

தேவையான பொருட்கள்- வாழைத்தண்டு 1 கப், எடுத்து சிறிதாக நறுக்கியது. தயிர் ¼கப் இஞ்சி 1 இன்ச் கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப.செய்முறை -அனைத்து பொருட்களையும் அரைத்து வடிகட்டி சிறிதளவு உப்பு போட்டு பரிமாறலாம். நார்ச்சத்து நிறைந்தது. மலம் நன்றாகக் கழியும். சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு சிறந்தது.

Mar 16, 2024

இளநீர் ஜீஸ்

தேவையான பொருட்கள்- வழுக்கை இளநீர், 1 இளநீரின் நீரும், சதைப்பகுதியும், மாதுளை முத்து 1 கைப்பிடி பனங்கற்கண்டு அல்லது வெள்ளை சர்க்கரை தேவையான அளவு.செய்முறை -அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருகலாம். வெய்யில் காலத்தில் அடிக்கடி பருகலாம். உடல் சூட்டைத் தணிக்கும் உடல் எடையைக் குறைக்கும் சீறுநீரகம் சரியாக இயங்க உதவும். உடலில் அமிலச் சத்து அதிகம் இருப்பவர்கள் இதை அதிகம் குடிக்கலாம்.

Mar 16, 2024

எலுமிச்சை புதினா ஜீஸ்

 தேவையான பொருட்கள்- எலுமிச்சை 1 பழம், நறுக்கிய புதினா 2 டீஸ்பூன் பணஞ்சர்க்கரை அல்லது உப்பு தேவையான அளவு.செய்முறை -1 டம்ளர் நீரில் மேற்கண்டவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி அருந்தலாம். நாவறட்சி தணியும். பசி எடுக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும் .இரத்தத்தை சுத்தம் செய்யும்.

Mar 16, 2024

வெள்ளரிக்காய் தயிர் ஜீஸ்

 தேவையான பொருட்கள் -வெள்ளரிக்காய் 50 கிராம், தயிர் 100 மில்லி, உப்பு தேவையான அளவு, புதினா குடமிளகாய் தேவையான அளவு மிகப் பொடியாக நறுக்கியது.செய்முறை- வெள்ளரிக்காய், தயிர் இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் அடித்து புதினா, குடமிளகாய், சேர்த்து ருசிக்கலாம். வெய்யில் காலத்தில் இந்த ஜீஸை ஒரு டம்ளர் குடித்தாலே போதும் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். 

Mar 09, 2024

கீரை அடை

 தேவையான பொருட்கள்- குட மிளகாய் 1 சிறியது (நறுக்கியது) கோதுமை மாவு 3/4 கப், கடலை மாவு 3/4 கப், கான் பிளவர் சோள மாவு 1/4 கப், ராகி மாவு 1/4 கப், இஞ்சி 1/4  டீஸ்பூன் பொடியாக நறுக்கியது, சீரக தூள் 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1/4  டீஸ்பூன், மிளகு தூள் பெப்பர் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. கீரை3 கப், பாலக்கீரை, முருங்கைக் கீரை, பொடியாக நறுக்கி வதக்கவும் .எந்த வகை கீரை இருந்தாலும் போடலாம் அல்லது இரண்டு வகை கீரை இருந்தாலும் கலந்து செய்யலாம்.செய்முறை- முதலில் நான்கு விதமான மாவுகள் , கீரை, குடமிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில்போட்டுதேவையான அளவு தண்ணீர்  விட்டு  பிசைய வேண்டும்.பின் இஞ்சி சீரகத்தூள் கரம் மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு கலந்து தோசை மாவு பதத்திற்கு  கலந்து தோசை மாதிரி வார்த்தால் சத்தான கீரை அடை ரெடி. 

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News