25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல்

Nov 08, 2025

முருங்கைக்கீரைப் பொடி.

தேவையான பொருட்கள்:முருங்கைக்கீரை - 1 கப் (நிழலில் உலர்த்தியது அல்லது லேசாக வறுத்தது),உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 5-7 (உங்கள் காரத்திற்கேற்ப),உப்பு - தேவையான அளவு,சீரகம் - 1 டீஸ்பூன்,பூண்டு - 2-3 பற்கள்,பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை:முருங்கைக்கீரையை நன்கு கழுவி, நிழலில் உலர்த்தவும் அல்லது வெறும் கடாயில் லேசாக வறுத்து எடுக்கவும். கீரை காய்ந்து, மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். அதே கடாயில், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.பின்னர், மிளகாய், சீரகம், பூண்டு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வறுக்கவும்.வறுத்த பொருட்களை ஒரு கலவை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, உலர்ந்த முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு ஆற விடவும்.முழுவதுமாக ஆறியதும், மிக்சியில் போட்டு மென்மையான பொடியாக அரைக்கவும். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை பொடியை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். 

Nov 08, 2025

மொறு மொறு காளான் பக்கோடா.

தேவையான பொருட்கள்:காளான் - 200 கி,கடலை மாவு - 1 கப்,அரிசி மாவு - 1/4 கப்,வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),இஞ்சி - சிறிது,மிளகாய் தூள் - 2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்),உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு ,செய்முறை:காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய காளான், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பிற மசாலாப் பொருட்களை சேர்க்கவும்.அதனுடன் கடலை மாவு மற்றும் அரிசி மாவைச் சேர்க்கவும்.சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.சூடான எண்ணெயில் பிசைந்த காளான் கலவையை உதிர்த்துப் போடவும்.பக்கோடா பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.சுவையான காளான் பக்கோடாவை சூடாகப் பரிமாறவும்.

Nov 01, 2025

கவுனி அரிசி பொங்கல்.

தேவையான பொருட்கள் - 1கப்கருப்பு கவுனி அரிசி, மூன்றரை  கப் தண்ணீர்,1கப்வெல்லம்,1ஸ்பூன் ஏலக்காய் தூள்,8முந்திரிப் பருப்பு,3டேபிள்ஸ்பூன்நெய்,கால் கப்தேங்காய்த்துருவல்செய்முறை -  கவுனி அரிசியை சமைப்பதற்கு முன்பாக அதிக நேரம் அதாவது6 மணி முதல்8 மணி வரை ஊற வைக்கவும். பிறகு ஊறிய அரிசியை குக்கரில் ஒன்றுக்கு மூன்று அல்லது மூன்றரை தண்ணீர் விட்டு 6 விசில் விடவும்.குக்கரை திறந்து அரிசியை ஒரு விரலால் எடுத்து நசுக்கி பார்த்தால் வெந்தது தெரியும். அரிசியை பார்க்கவே வேகாதது போல் தான் இருக்கும். ஆனால் நசுக்கி பார்த்தால் உள்ளே நன்கு வெந்திருக்கும். இதுவே சரியான பக்குவம்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து கொண்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் அளவுக்கு சூடு பண்ணவும்.பிறகு இதனை பொங்கல் செய்யும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஏனெனில் அடியில் மண், தூசி ஏதேனும் இருக்க வாய்ப்பு உள்ளது.பிறகு இந்த வெல்லக்கரைசலுடன் வேக வைத்த கவுனி அரிசியை சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைக்கவும்.பிறகு ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து துருவிய தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.பிறகு இதனை நன்கு கிளறி மற்றொரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.மிகவும் சத்தான சுவையான செட்டிநாட்டு கருப்புகவுனி அரிசி பொங்கல் ரெடி.

Nov 01, 2025

பழம் பொரி.

தேவையான பொருட்கள்:நேந்திரம் பழம்- 3,மைதா மாவு - 1 கப்,சர்க்கரை- 1 கப்,அரிசி மாவு - 0.25 கப், மஞ்சள் துாள். சமையல் சோடா, ஏலக்காய் துாள்- சிறிதளவு,தேங்காய் எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:நேந்திரம்பழத்தைத் தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும். மைதா மாவு, அரிசி மாவு, சர்க்கரை, மஞ்சள் துாள். ஏலக்காய்த் துாள், உப்பு, சமையல் சோடா மற்றும் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், பழத்துண்டுகளை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.சுவைமிக்க, 'பழம் பொரி!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Nov 01, 2025

உளுந்து போண்டா .

தேவையான பொருட்கள்:உளுத்தம்பருப்பு - 2 கோப்பை,பச்சைமிளகாய் – 4,மிளகு - 1 தேக்கரண்டி,தேங்காய் - இரண்டு பத்தை,கறிவேப்பிலை - ஒரு கொத்து,ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,உப்பு - தேவையான அளவுசெய்முறை:உளுத்தம்பருப்பை கழுவி சுடுதண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.ஊறிய பருப்பை நீரை வடித்து விட்டு உப்பை சேர்த்து கரகரப்பாக அரைத்து பெருங்காயம், ஆப்பசோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனுடன் குருமிளகு, மற்றும் பொடியாக நறுக்கிய பொருட்களைப் போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.பிறகு சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காயவைத்து கரண்டியின் உதவியால் மாவு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.உளுந்து போண்டா ரெடி

Nov 01, 2025

வெஜிடபிள் குருமா .

தேவையான பொருட்கள்:காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி) - 1 கப்,வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,பச்சை மிளகாய் - 2 (கீறியது),தேங்காய் - ½ கப் (துருவியது),முந்திரி - 5-6 (விரும்பினால்),கசகசா - 1 தேக்கரண்டி,சோம்பு - 1 தேக்கரண்டி,பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு,மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி,மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப),மல்லித் தூள் - 1 தேக்கரண்டி,கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - தேவையான அளவு,மல்லித்தழை - அலங்கரிக்க.செய்முறை:தேங்காய் விழுது தயாரித்தல்: ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.குருமா செய்தல்: அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.கட் செய்த காய்கறிகளை சேர்த்து, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.அடுத்து, கரம் மசாலா தூள் சேர்த்து, 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.மல்லித்தழை தூவி இறக்கவும்.சுவையான வெஜிடபிள் குருமா சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி போன்றவற்றுடன் பரிமாறலாம். 

Nov 01, 2025

கோவில் புளியோதரை வீட்டில் செய்யும் முறை.

தேவையான பொருட்கள் - கடலைப்பருப்பு 1/4 கப்,உளுத்தம் பருப்பு. 1/4 கப்,கொத்தமல்லி விதைகள் - 2 தே.கரண்டி,எள்ளு - 2தே.கரண்டி,மிளகு-1தே.கரண்டி,வெந்தயம்-1 தே.கரண்டி,கறிவேப்பிலை சிறிதளவு,காய்ந்த மிளகாய்-10-15,புளி - ஒரு எலுமிச்சங்காய் அளவு.செய்முறை -முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை எண்ணெய் சேர்க்காமல் பொன்நிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அதனையடுத்து கொத்தமல்லி விதை வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இதையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் கறிவேப்பிலையை நன்றாக சூடாக்கி உலர வைக்க வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை சேர்த்து நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு இதில் சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக ஆறிய பின் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கொரகொரப்பாள பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.அதனுடன் கடுகு கடலைப்பருப்பு, கரு வேப்பிலை,பெருங்காயம் தாளித்து சேர்த்தால் சுவையான புளியோதரை பொடி தயார்.அதன் பின்னர் சாதம் வடித்து அதில் தேவையான உப்பு,நல்லெண்ணெய் கலந்து, தேவையான அளவு பொடியையும் போட்டு கலந்தால் கோவில் பாணியில் சுவையான  புளியோதரை தயார். 

Nov 01, 2025

ரஸ்க் ஐஸ்கிரீம்.

தேவையான பொருட்கள்:ரஸ்க் துண்டு - 6,பசும்பால்- 3 கப்,சர்க்கரை- 50 கிராம்,வெண்ணிலா எசன்ஸ் -சிறிதளவு.செய்முறை:பசும்பாலில் சர்க்கரை கலந்து, சுண்டக் காய்ச்சவும். ரஸ்க் துண்டுகளை பொடியாக்கி அதில் ஊறவைத்து கூழாக்கி ஆறவிடவும். பின், வெண்ணிலா எசன்ஸ் கலந்து, பிரீசரில் 1 மணி நேரம் வைக்கவும்.சுவை மிக்க, 'ரஸ்க் ஐஸ்கிரீம்!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.

Oct 25, 2025

வாழைக்காய் சட்னி.

தேவையான பொருட்கள்-வாழைக்காய் -2; தேங்காய் துருவல் - கால் கப்; வரமிளகாய் - 5; புளி -தேவைக்கேற்ப; எண்ணெய் தேவையான அளவு சின்ன வெங்காயம் - 10; பூண்டு - 4 பற்கள்; சீரகம் - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை -சிறிதளவு; உப்பு -தேவைக்கேற்பசெய்முறை -முதலில் வாழைக்காயின் தோலை நீக்கி நன்றாக வேகவைத்து வேண்டும்.அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வர மிளகாய், பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், புளி, தேங்காய் துருவல் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து வைத்துகொள்ளவும். மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பொருட்களை சேர்க்க வேண்டும்.அத்துடன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.இறுதியாக, தேவையான அளவு உப்பு மற்றும் வேகவைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து அரைக்க வேண்டும்.சுவையான வாழைக்காய் சட்னி ரெடி. இதை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Oct 25, 2025

கடலைப்பருப்பு கார தோசை.

தேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1 கப்,கடலை பருப்பு – கால் கப்,துவரம் பருப்பு - கால் கப்,உளுந்து - 1 ஸ்பூன்,வர மிளகாய் – 5,சின்ன வெங்காயம் – 15,பூண்டு - 7 பல்,கறிவேப்பிலை – சிறிதளவு,கடுகு – அரை ஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 1 ஸ்பூன்,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு ,செய்முறை: இட்லி அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊற வைத்த அரிசி, பருப்புடன் வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, எண்ணெய் தடவவும்.அரைத்த மாவை எடுத்து தோசைக்கல்லில் பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.இதே முறையில் அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்கவும். 

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 66 67

AD's



More News