25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Apr 20, 2024

ஸ்வீட் கார்ன் பச்சடி

தேவையான பொருட்கள் -ஸ்வீட்கார்ன் 1 கெட்டிதயிர் ஒரு கப் பூண்டுஒரு பல் உப்புதேவையானது தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன் பச்சைமிளகாய் 1சர்க்கரை 1/2 ஸ்பூன்கொத்தமல்லி சிறிதுசெய்முறை: -  சோளத்தை உதிர்த்து இரண்டுநிமிடம் வாணலியில் ஒருகை தண்ணீர் தெளித்து வேக விடவும். தேங்காய், பச்சைமிளகாய் இரண்டையும் கொரகொரப்பாக அரைக்கவும். பூண்டை நசுக்கி கொள்ளவும். அதிகம்புளிப்பில்லாத தயிரில் ஸ்வீட் கான் தேங்காய் அரைத்தது உப்பு, சர்க்கரை, நசுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கலந்துபரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.

Apr 20, 2024

குடமிளகாய் பச்சடி

தேவையான பொருட்கள் -குடமிளகாய் ஒன்று சின்னவெங்காயம் 6 தக்காளிஒன்று கெட்டித் தயிர் ஒரு கப் தேங்காய் சிறிதுபச்சைமிளகாய் 1சீரகம் 1/2 ஸ்பூன்உப்புதேவையானதுதாளிக்க :கடுகு உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் கறிவேப்பிலை சிறிது செய்முறை -குடைமிளகாயை விதைகள் நீக்கி பொடியாக நறுக்கவும். தேங்காய், மிளகாய்,சீரகத்தை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கெட்டி தயிரில் தேங்காய் பச்சைமிளகாய் அரைத்த விழுது, உப்பு, நறுக்கிய காய்கள் சேர்த்து கலந்து கடுகு தாளித்துக் கொட்டமிகவும் ருசியான குடைமிளகாய் பச்சடி தயார்.

Apr 20, 2024

பூந்தி தயிர் பச்சடி

தேவையான பொருட்கள் -புளிக்காத தயிர் - ஒரு கப், காரபூந்தி - அரை கப், வேர்க்கடலை (வறுத்தது) ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு (வறுத்தது) -6, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன். பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் -2 டீஸ்பூன்.செய்முறை - தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளுங்கள். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, தயிருடன் சேருங்கள். பரிமாறும்பொழுது பூந்தி, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விசேஷங்களில் பந்தியில் முதலிடம் பெறுவது இந்த பச்சடிதான்.

Apr 13, 2024

கலவை பருப்பு வடை

தேவையான பொருட்கள் -  உளுத்தம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சரிசி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் -2. இஞ்சி -ஒரு துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன். உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிது.செய்முறை: பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊறப் போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம். உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 

Apr 13, 2024

தயிர் வடை

தேவையான பொருட்கள் -  உளுத்தம்பருப்பு - அரை கப், புளிக்காத புது தயிர்ஒரு கப், பால் கால் கப், உப்பு - ருசிக்கேற்ப, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய்- தேவையான அளவு, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு 4, பச்சை மிளகாய் சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன். செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள்.. உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள்.. எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி,  எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்).அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள். 

Apr 13, 2024

கோஸ் வடை

தேவையான  பொருட்கள் -  உளுத்தம்பருப்பு ஒரு கப், பொடியாக நறுக்கிய கோஸ் ஒரு கப், இஞ்சி -ஒரு துண்டு, பச்சை மிளகாய் 2. கறிவேப்பிலை - சிறிது, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:- உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ். இஞ்சி,மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.   

Apr 13, 2024

ரச வடை

தேவையான பொருட்கள் -  உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய்- தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் - 2 கப், புளித் தண்ணீர் - அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) - அரை கப், பழுத்த தக்காளி 1,  மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, பெருங்காயம் - அரை டீஸ்பூன்.பொடிக்க: மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன்,  மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது. - தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.செய்முறை:- உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து,  மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து. ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்). 

Apr 13, 2024

சாம்பார் வடை

தேவையான பொருட்கள் -  உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவைக்கு. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப்,. பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1. தக்காளி - 3, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு. உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.செய்முறை:-உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.துவரம்பருப்பை. மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும். தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம். கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து. சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து. ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது. சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்..

Apr 06, 2024

பழ சூப் ( FRUIT SOUP )

தேவையான பொருட்கள்-பலவகையான பழங்கள் - 300கிராம்எலுமிச்சம் பழச்சாறு - தேவைக்கேற்பசர்க்கரை - 150கிராம், சோள மாவு - 3 மேசைக்கரண்டிசெய்முறை-பழங்களை ஐந்து கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் பழங்கள் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.. பிறகு சர்க்கரையைச் சேர்த்து வேக வைக்க வேண்டும்.அடுப்பிலிருந்து இறக்கி நீரை மட்டும் வடிகட்டி விட்டு, வெந்த பழங்களைக் கையினால் பிழிந்து விட வேண்டும். இதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைக்க வேண்டும்.சிறிது தண்ணீரில் மக்காச் சோளமாவைக் கொட்டிக் கிளறி ,சேர்த்துக் கொள்ள வேண்டும் இக்கலவையை மூன்று நிமிட நேரம் கரண்டியால் நன்றாகக் கிளறி வேகவைத்து இறக்கி விட வேண்டும். சிறிது ஆறவிட்டு அருந்தினால் சுவையாக இருக்கும்.  

Apr 06, 2024

சுண்டக்காய் சூப்

சுண்டக்காய் பித்தக் கோளாறுகள் அகற்றும், இரத்த ஓட்டத்தைச் செம்மைப்படுத்தும். வயிற்றிலுள்ள கீரைப் பூச்சிகளை அழித்து குடலைச் சுத்தப்படுத்தும்.தேவையான பொருட்கள்பச்சை சுண்டைக்காய் - 20கிராம்லவங்கப்பட்டை-1, லவங்கம் -1,பெரிய வெங்காயம் - 4, பெரிய தக்காளி - 2, பால் - 200மி.லி,தேங்காய்ப்பால் -100மி.லி, மிளகு - 5கிராம், நெய் - ஒரு மேசைக்கரண்டு, உப்பு - தேவைக்கேற்பபயத்தம் பருப்பு - 25 கிராம்   செய்முறை தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு அடுப்பில் வைக்கவும். அது காய்ந்ததும் சுண்டைக்காய்களைப் போடவும் இலேசாக வதக்கியதும் இறககி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு லிட்டர் தண்ணீர் விடவும் தண்ணீர் சூடானதும் பருப்பைப்  போடவும் பருப்பு வெந்ததும் சுண்டக்காய்களைப் போடவும். காயும் பருப்பும் கரைந்து போகும் அளவு கொதிக்க விடவும் தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கவிடவும்வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய்யை விடவும் நெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவந்து வந்ததும் லவங்கப்பட்டையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி, வேக வைத்த சுண்டைக்காய் பால், தேங்காய்ப் பால் ஆகிய அனைத்தையும் விட்டு ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும்உப்பு, மிளகு இரண்டையும் பொடி செய்து போட்டுக் கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து தெளிவாக வடிகட்டி சூடாக அருந்தவும். 

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 21 22

AD's



More News