25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Feb 03, 2024

தேங்காய்ப்பால் சூப்

 தேவையான பொருட்கள்  - தேங்காய்ப்பால் அரை மூடியில் எடுக்கப்பட்டது. பாதாம் பருப்பு ஒருமேசைக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைபருப்பு 1 மேஜைக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் 1.செய்முறை  -  தேங்காய்ப்பால், கடுகு, வெங்காயம் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருள்களையும் அரைத்து மசாலா தயார்செய்து கொள்ள வேண்டும். காய்கறி வேக வைத்த சாறு மூன்று கப்புடன் மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு, மற்றும் அரிந்த வெங்காயத்தை நெய்யில் வதக்கி சூப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கரண்டியால் கிளறி விட வேண்டும். சூடாக அருந்தலாம். 

Feb 03, 2024

பீட்ரூட் சூப்

தேவையான பொருட்கள் -  பீட்ரூட் அரைகிலோ, வெங்காயம் 1, எண்ணெய் 3 மேஜைக்கரண்டி, உருளைக்கிழங்கு 1, புதினா இலை சிறிதளவு, கிரீம் அரைகப், தண்ணீர் அரைகப், எலுமிச்சம் பழச்சாறு 1 தேக்கரண்டி, துருவிய எலுமிச்சம் பழத்தோல் அரை தேக்கரண்டி, மிளகுத்தூள், உப்பு தேவைக்கேற்ப,செய்முறை  -  பீட்ரூட் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச்சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும், எலுமிச்சம் பழத்தோலைத் துருவி எடுத்துக் கொள்ளவும். எண்ணெயைச் சூடவைத்து வெங்காயத்தைஇரண்டுநிமிடம்வதக்கவும்.பிறகுநறுக்கியஉருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத்தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும், 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும், எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விடவும். புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.  

Jan 27, 2024

கிரீன் சில்லி மசாலா

தேவையானவை: கெட்டியான பச்சை மிளகாய்50 கிராம் ,எலுமிச்சம்பழச் சாறு - அரை கப், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், புளி சிறிய உருண்டை, உப்பு தேவைக்கு. தாளிக்க: எண்ணெய் - கால் கப், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன்,செய்முறை: மிளகாயை கழுவி துடைத்து இரண்டாக நறுக்கி உப்பு,,மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இரண்டு நாள் ஊறவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து புளியை கெட்டியாக கரைத்து சேருங்கள். அதில் மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு மிளகாயை சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள்..சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான சைட் டிஷ்..

Jan 27, 2024

பட்டர் வெஜ் மசாலா

தேவையானவை: உருளைக்கிழங்கு 2. கேரட் - 1. குடமிளகாய் -1.,பின்ஸ் - & காலிஃப்ளவர் சிறியதாக 1. பட்டாணி அரை கப். பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4. மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - அரை டீஸ்பூன். மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது. எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்க: வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பட்டை - 2 துண்டு, இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.செய்முறை: காய்கறிகளை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள்..வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். நறுக்கிய காய்கறிகளை குடமிளகாய் நீங்கலாக, சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகவையுங்கள். வெண்ணெயை உருக்கி பட்டை, இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் குடமிளகாய், சிறிய பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்குங்கள். பிறகு மிளகாய்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி காய்கறிகளையும் சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு. எலுமிச்சம்பழச் சாறு, கரம்மசாலா, உப்பு, மல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்

Jan 27, 2024

பனீர் குடமிளகாய் மசாலா 

தேவையானவை: குடமிளகாய் 2. பனீர் 200 கிராம். பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, சாட் மசாலா - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு.செய்முறை: குடமிளகாய், பனீர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சதுர துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பனீர், தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி சாட் மசாலா, எலுமிச்சம்பழச் சாறு சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.சாலட் வகைகள், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட ஏற்ற மசாலா .. 

Jan 27, 2024

சோயா பாலக் மசாலா

தேவையானவை: பசலை கீரை - 2 கட்டு, சோயா தூள் அரை சுப், பெரிய வெங்காயம் - 1. தக்காளி - 1. பூண்டு - 5 பல், இஞ்சி ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 3. எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு.செய்முறை: கீரையை ஆய்ந்து, கழுவி, வேக வைத்து மசித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கி, எண்ணெயைக் காயவைத்து வதக்குங்கள்.நன்கு வதங்கியதும் கீரை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். சோயாவை தண்ணீரில் அலசி பிழிந்து சேர்த்து கிளறுங்கள்.வித்தியாசமான ருசியை விரும்புபவர்களுக்கு விருந்து படைக்கும்  இந்த சைட் டிஷ். 

Jan 27, 2024

அடை மசாலா

தேவையானவை: (அடைக்கு) துவரம்பருப்பு - கால் கப்.கடலைப்பருப்பு கால் கப், பாசிப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு -ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2 சோம்பு அரை டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பூ 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் தேவைக்கு. மசாலாவுக்கு: பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 4 மல்லித்தழை சிறிது, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன். அரைக்க: இஞ்சி-ஒரு துண்டு, பூண்டு 6 பல், தேங்காய்ப்பூ - 1 டேபிள்ஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், மிளகாய்தூள் -இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் - ஒரு டீஸ்பூன் ,பட்டை - ஒரு துண்டு, லவங்கம் -2.செய்முறை -அடைக்குகொடுத்துள்ள பருப்புகளையும், அரிசியையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து மிளகாய், சோம்பு, சேர்த்து கரகரப்பாக அரைத்து, தேங்காய், மல்லித்தழை, உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். தோசைக்கல்லை காயவைத்து, சிறு அடைகளாக ஊற்றியெடுங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும். தக்காளியையும் அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். பறிமாறும்போது அடைகளை. மசாலாவுடன் சேர்த்து பறிமாறுங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் சைட்  டிஷ்.

Jan 20, 2024

ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்

தேவையான பொருட்கள் -கோவைக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன்.அரைக்க:-சின்ன வெங்காயம் 10, மிளகாய் வற்றல் 8செய்முறை-:காய்களைக் கழுவி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். வெங்காயத்தின் தோலை நீக்கி வையுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றலை லேசாக வறுத்து பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைத்து ஒன்றிரண்டாக அரைத்து வையுங்கள், தண்ணீர் சேர்க்கக் கூடாது.மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகை தாளித்து, நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் மூடியை நீக்கிவிட்டு வெங்காயக் கலவையைச் சேருங்கள், பச்சை வாடை நீங்கி, கலவை வதங்கி சுருண்டதும் இறக்குங்கள்.

Jan 20, 2024

பப்பாளிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்- பப்பாளிக்காய் (சிறிய சைஸ்) 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, மலர வெந்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் தலா 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.செய்முறை:-பப்பாளிக்காயை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து வடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

Jan 20, 2024

பிஞ்சு மக்காச்சோளப் பொரியல் ( BABY CORN )

தேவையான பொருட்கள் -பிஞ்சு மக்காச் சோளம் 1 கிலோ, உப்பு தேவைக்கு, எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்அரைக்க-:தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5. இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், புதினா, மல்லி தலா 1 கைப்பிடி.செய்முறை:-மக்காச்சோளத்தின் பட்டைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து பிசறி ஆவியில் ஐந்து நிமிடம் வேகவையுங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போகக் கிளறுங்கள். பிறகு சோளம், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி இறக்குங்கள். 

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News