25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

May 18, 2024

தேங்காய் கோவா அல்வா

தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பால், சர்க்கரை தலா அரை கப், கோவா, நெய் - தலா கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை தேங்காய் துருவலை பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் தேங்காய் பால் விழுதைக் கொட்டி மிதமான தீயில் கிளறவும், சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். கெட்டியாகும் பதத்தில் நெய் சேர்த்துக் கிளறி பாதாம், முந்திரி துண்டுகளை நெய்யில் வறுத்து தூவவும்.

May 18, 2024

கராச்சி அல்வா

 தேவையானவை: மைதா, நெய் - தலா இரண்டு கப், சர்க்கரை - 4 கப். ஜாதிக்காய் பொடி - கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு, பிஸ்தா தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.செய்முறை: சர்க்கரையை அடிகனமான கடாயில் கொட்டி, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும். மைதாவை தண்ணீரில் கரைத்து சர்க்கரை பாகில் விட்டு. கட்டி தட்டாமல் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், முந்திரி, பிஸ்தாவை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய் பொடியை போட்டு இறக்கவும். இதை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

May 18, 2024

பால் அல்வா

தேவையானவை: பால் 2 லிட்டர், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், - பொடித்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - இரண்டரை கப், சிட்ரிக் ஆசிட் (அ) லெமன் சால்ட் - கால் டீஸ்பூன்.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும். இதில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட்டை விட்டு சிறிது நேரம் காய்ச்சவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும். பால் திரிந்து அல்வா பதத்தில் வந்ததும் இறக்கவும். 

May 18, 2024

பேரீச்சம்பழ அல்வா

தேவையானவை: கொட்டை இல்லாத பேரீச்சம்பழம், சர்க்கரை, நெய் தலா ஒரு கப், பால் அரை கப், பாதாம், முந்திரி, குங்குமப்பூ  தேவையான அளவு.செய்முறை: பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்து, பால் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். கடாயை சூடாக்கி, அதில் சக்கரையைப் போட்டு இளம் பாகு பதம் வந்ததும், அரைத்த பேரீச்சம்பழ விழுதைக் சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். இதில் பாதாம், முந்திரி, குங்குமப்பூ சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்.

May 11, 2024

ஐஸ் கீரீம்

 தேவையான பொருட்கள் -பால் 2 லிட்டர்,ஜல்டின் பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்டர்டு பவுடர் 7 ஸ்பூன், சீனி 400 கிராம், வெண்ணிலா எசன்ஸ், அன்னாச்சி பழ எசன்ஸ் ஒரு ஸ்பூன்.செய்முறை- பாலை நன்றாக காய்ச்சவும் 2லிட்டர் பால் 1 லிட்டர் ஆகும் வரை வத்தவைக்கவும், பின்பு ஜல்டின் பவுடரை வற்றிய பாலில் சேர்த்து நன்றாக கலக்கவும். கஸ்டர்டு பவுடரை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து, அதை பாலில் சேர்க்கவும். கடைசியில் சீனியை நன்கு கரைத்தபின்பு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். பால் ஆறிய பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

May 11, 2024

பேரி ஜெல்லி

பேரி ஜெல்லி தோலோடு வெட்டி உள்ளேயிருக்கும் கடினமான பாகத்தை நீக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டுத் துண்டுகளை மூடும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றி, நன்றாக வேக வைத்து தண்ணீரை வடித்துவிடவும். பிறகு அந்தச் சாற்றில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து, இரண்டு எலுமிச்சம் பழ ரஸத்தையும் பிழிந்து விடவும். பின்பு அதை அடுப்பிலேற்றி மெதுவாக எரிய விடவும். ஜெல்லி தயாரானதும் இறக்கவும்.பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

May 11, 2024

ஆப்பிள் ஜெல்லி

ஆப்பிள் ஜெல்லி ஒரு ஆப்பிள் ஒரு கிலோ கிராம். பழத்தை நான்காக வெட்டி உள்ளேயிருக்கும் கடினமான பாகத்தை நீக்கிவிட்டு 6 கிலோ கிராம் பழத்துண்டை நன்றாக ஆட்டி, அரைக்கிலோ தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ரஸத்தை வடித்துக் கொள்ளவும். ரஸம் எவ்வளவு இருக்கிறதோஅவ்வளவு சர்க்கரைஅதில் சேர்த்து இரண்டு எலுமிச்சம் பழங்களையும் பிழிந்துவிட்டு அடுப்பிலேற்றி, மெதுவாக எரிய விடவும். ஜெல்லி தயாரானதும் இறக்கிக் கொள்ளலாம்.பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

May 11, 2024

மார்மலேடு

 நல்ல கொய்யாப் பழங்களாக எடுத்துச் சுமார் இரண்டு மணி நேரம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும், இரண்டு மூன்று தடவை தண்ணீரை மாற்றிப் புதுக் கொதிநீரை விடவும் பிறகு எடுத்துக் குளிரச் செய்த பழங்களைத் தோலோடு துண்டு செய்து விதைகளை மாத்திரம் நீக்கி விடவும். கடைசியாகக் கொதிக்க வைத்த நீரில் ஒரு படி எடுத்து, அதில் அரைக்கிலோ சர்க்கரையைக் கலக்கிப் பாகு தயாரித்து அதில் பழங்களை போட்டுக் கொதிக்க வைக்கவும். இது அரைகிலோ பழத்திற்கு, ஒரு கிலோ பழமானால் ஒரு கிலோ நீரும், ஒரு கிலோ சர்க்கரையும் வேண்டும். மார்மலேடு தயாரானதும் அடுப்பை விட்டு இறக்கிப் பத்திரப்படுத்தவும்.

May 11, 2024

கொய்யாப்  பாலேடு

முதிர்ந்த கனிந்த கொய்யாக் கனியைக் கழுவித் துண்டுகளாக வெட்டி, அதற்கு சரிசமமான நிறைக்குத் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கனி மெதுவானநிலையை  அடைந்தவுடன் மெல்லிய துணியில் வடிகட்டி விதைகளை நீக்க வேண்டும். கொய்யாப் பாலேடு செய்யப் பொதுவாக தேவையான கலவை கொய்யாச்சாறு அரைக்கிலோ, சீனி முக்கால் கிலோ, வெண்ணெய்60 கிராம், சிட்ரிக் அமிலம் ஒரு கிராம், உப்பு அரை தேக்கரண்டி, சிவப்புச் சாயம்,சாயத்தைத் தவிர்த்து மீதியுள்ளவற்றை நன்கு கலந்து கட்டியாக மாறும் வரை சூடாக்க வேண்டும். பின்பு சாயத்தைச் சிறிது தண்ணீரில் கலந்து அதனுடன் சேர்க்க வேண்டும்.பீங்கான் தட்டைக் கழுவி அதன் மேல் இப்படித் தயாரித்த கொய்யா பாலேட்டைப் பரப்பிக் குளிர வைத்துத் துண்டு துண்டாக வெட்டி உண்டால் சுவையாக இருக்கும்.

May 04, 2024

வீகன் வெண்ணிலா மற்றும் பாதாம் பால் ஐஸ்க்ரீம்

தேவையான பொருள்கள்பாதாம் பால் - 2 கப்வெல்லம் - கால் கப்வெண்ணிலா - 1 டிஸ்பூன்செய்முறைசாஸ்பேன் எடுத்து அதில் பாதாம் பாலை மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். இந்த பால் பொங்கவிட கூடாது. இதில் வெல்லத்தை பொடியாக்கி சேர்க்கவும். வெல்லம் பாலுடன் நன்கு கரைந்தவுடன் அதில் வெண்ணிலா சேர்க்க வேண்டும்.பின்னர் இதை நன்கு குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து ஐஸ்க்ரீம் மேக்கருக்கு மாற்றி ப்ரிட்ஜில் ப்ரீஸ் செய்ய வேண்டும்.அவ்வளவுதான் சுவை மிக்க வெண்ணிலா, பாதாம் பால் ஐஸ்க்ரீம் தயார்

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 21 22

AD's



More News