25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Feb 24, 2024

வெண்டைக்காய் பச்சடி

தேவையானவை: புளிக்காத புது தயிர் - ஒரு கப், வெண்டைக்காய் 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் 2, உப்பு -தேவைக்கு. தாளிக்க-  கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு.செய்முறை: வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர்பச்சடி இது.

Feb 24, 2024

தக்காளி - தேங்காய் பச்சடி

தேவையானவை: புளிக்காத தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் அரை கப், தக்காளி (நல்ல சிகப்பு நிறம்)-2. பச்சை மிளகாய் - 2 இஞ்சி ஒரு சிறு துண்டு. உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன்.செய்முறை:இஞ்சி, பச்சை மிளகாய். தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தயிருடன் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து சேருங்கள். விருப்பமுள்ளவர்கள், மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். கோடைக்கு ஏற்ற குளுகுளு தயிர்பச்சடி இது. (தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தும் சேர்க்கலாம்).

Feb 24, 2024

காய்கறி பச்சடி

தேவையான பொருட்கள் : காரட் பெரியது 1, பல்லாரி பெரியது 1, சிறிதளவு முட்டைக்கோஸ், சௌசௌ, சிறிய தக்காளி 1, மிளகாய் 1, தேவையான அளவு உப்பு தயிர், தேங்காய்ப்பூ,செய்முறை : மேற்கண்ட காய்களைப் பொடியாக நறுக்கி தயிருடன் கலந்து தேங்காய் துருவல் மற்றும்உப்பையும் சேர்த்து பச்சடியாக்கி சப்பாத்தியுடன் சாப்பிடவும்.

Feb 24, 2024

வெள்ளை முள்ளங்கி பச்சடி

 தேவையான பொருட்கள் -  வெள்ளை முள்ளங்கி 2, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு ஒன்றரை டீஸ்பூன், பல்லாரி வெங்காயம்1, பச்சை மிளகாய் 4, வெல்லம் சிறிது, கடுகு 1டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.செய்முறை -  முதலில் புளியைத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். முள்ளங்கியை நறுக்கி மிருதுவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியைத் திட்டமாகக் கரைத்துக் கொண்டு உப்பையும், வெல்லத்தையும் போட வேண்டும். அரைத்த விழுதை புளிக்கரைசலில் போட்டு கரைத்து விட வேண்டும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொண்டு, வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு தாளித்து உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு சிறிது வதங்கியவுடன், முள்ளங்கி, புளி கரைசலை ஊற்றி வதக்கி இறக்க வேண்டும். 

Feb 24, 2024

கதம்ப பச்சடி

தேவையான பொருட்கள் -  பேரிச்சம்பழம் 5, ஆப்பிள் பழம் அரை, ஆரஞ்சுப் பழம் உரித்தது அரை பழம், விதை நீக்கியது, திராட்சைப் பழம் 10, கொய்யாப் பழம் அரை, வாழைப்பழம் அரை, காரட் சீவியது 1கரண்டி, பெல்லாரி 1, மிளகு, பெருங்காயம் 1 சிட்டிகை, மல்லி இலை நறுக்கியது 1 ஸ்பூன், உப்பு 1 சிட்டிகை,செய்முறை -  எல்லாப் பழங்களையும், பெல்லாரி, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, சீவிய காரட்டை அதனுடன் சேர்த்து பின்பு, உப்பு, மிளகுப் பொடியையும் சேர்த்து கலந்து வைக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.

Feb 24, 2024

விளாம்பழ பச்சடி

தேவையான பொருட்கள்  - விளாம்பழம் சிறியது, வெல்லம் 1 சிறிய எலுமிச்சை அளவு, தயிர் 2 கரண்டி,உளுந்தம் பருப்பு கால் ஸ்பூன், கடுகு ஒரு ஸ்பூன், வத்தல் மிளகாய் 1 பெரியது.செய்முறை  - முதலில் விளாம்பழத்தை தரையில் போட்டு பார்த்து, அது ஒடாமல் இருந்தால் அதுதான் நல்ல பழம், வாங்கும் போது இப்படி பார்த்தே வாங்க வேண்டும். அதன் பிறகு ஓட்டை உடைத்து உள்ளே இருக்கும் பழத்தை எடுக்க வேண்டும். அந்தப்பழத்துடன் வெல்லத்தைப் போட்டு நன்றாக மசிக்க வேண்டும். பிறகு தயிர் விட்டு, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்தவுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகாய் வத்தல் இவற்றை தாளித்துகொட்ட வேண்டும்.

Feb 17, 2024

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள் -  அரிசி 3 கப், காரட் அரை கப் நறுக்கியது, உருளைக்கிழங்கு அரை கப் நறுக்கியது, பச்சைப்பட்டாணி அரை கப் நறுக்கியது, பீன்ஸ் அரை கப் நறுக்கியது, காலிஃபிளவர் அரை கப் நறுக்கியது, வெங்காயம் அரை கப் நறுக்கியது, மசாலா அரை கப் நறுக்கியது, பச்சைக் கொத்தமல்லி பூண்டு 10 பல், இஞ்சி சிறிய துண்டு, பச்சை மிளகாய் 8 அல்லது 10, தேங்காய் துருவல் கால் கப், வெங்காயம் நறுக்கிய துண்டு கால் கப், பட்டை சோம்பு சிறிது, ஏலக்காய் கிராம்பு சிறிது.செய்முறை - முதலில் அரிசியை நன்றாக நெய் அல்லது டால்டா விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். (வாசனை வரும் வரை) மேற்கண்ட மசாலாப் பொருட்களை பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் சிறிது டால்டா அல்லது நெய் ஊற்றி (கால் கப்) நறுக்கிய காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் மசாலா கலவையையும் போட்டு மூன்று நிமிடம் வதக்கவும். பின்பு அரிசியையும் 6 கப், தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பையும். சேர்த்து அடுப்பில் குக்கரை வைத்து, ஆவி வந்த பிறகு வெயிட் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். ஆறிய பிறகு 1 மூடி எலுமிச்சம்பழச் சாறைப் பிழிந்து கலந்து விடவும். இதனுடன் தொட்டுச் சாப்பிட வெங்காயம், தயிர் பச்சடி ஏற்றது .ரொட்டித் துண்டுகளை நெய்யில் வறுத்து வெஜிடபிள் பிரியாணியில் போட்டால் நன்றாக இருக்கும்.

Feb 17, 2024

காளான் பிரியாணி

 தேவையான பொருட்கள் - காளான் கால் கிலோ, அரிசி அரை கிலோ, பெரிய வெங்காயம் 4, ஏலக்காய் 5, பட்டை 15 கிராம், இலவங்கம் (கிராம்பு)7, எண்ணெய் 4 தேக்கரண்டி, கசகசா 2 தேக்கரண்டி,செய்முறை -  கிராம்பு, பட்டை, கசகசா, இவற்றை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், காளானை துண்டு துண்டாக நறுக்கி, தண்ணீரில், உப்பு போட்டு வேக வைக்கும் போது அரைத்து வைத்துள்ள மசாலாவை இத்துடன் கலக்க வேண்டும்.பிறகு எண்ணெயைச் சுடவைத்து அதில் வெங்காயத்தைப் போட்டு வலுக்க வேண்டும். இதனுடன் காளானையும் போட்டு வறுக்க வேண்டும், இப்பொழுது அரிசியை வேக வைத்து அரிசி பாதி வெந்தவுடன் வறுத்த வெங்காயம், மசாலா கலந்த காளான், ஏலக்காய் முதலியவற்றைப் போட்டுக் கிளறி அரிசி ஒன்றாக வெந்தவுடன் இறக்கி விட வேண்டும். சுடச் சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Feb 17, 2024

பாசிப்பயறு பிரியாணி

 தேவையான பொருட்கள் -  முளைகட்டிய பாசிப்பயறு 100 கிராம், பச்சரிசி 100 கிராம், தேங்காய் அரை மூடி, மிளகாய் 5, பூண்டு 2, இஞ்சி சிறிதளவு, பட்டை 1 துண்டு, கிராம்பு 2, ஏலக்காய் 1, பெல்லாரி 1, தக்காளி 1, ரீஃபைண்ட் ஆயில் 2 ஸ்பூன், பெருஞ்சீரகம் கசகசா 1 டீஸ்பூன், முந்திரி பருப்பு 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.செய்முறை -  குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போடவும், பின் இஞ்சி பூண்டு, மிளகாய், பெருஞ்சீரகம், கசகசா, மல்லித்தழை முந்திரிப்பருப்பு எல்லாவற்றையும் நைஸாக அரைத்து பின் தேங்காய் பாலையும், குக்கரில் ஊற்றி வதக்கவும்,  தேங்காய்ப் பால் கொதித்ததும் தேவையான அளவு உப்பு போட்டு, அரிசி முளைப்பயிறு போட்டு குக்கரை மூடி வைக்கவும். வெந்ததும் இறக்கவும். சத்தான பிரியாணி.

Feb 17, 2024

கோதுமை பிரியாணி

 தேவையான பொருட்கள் -  உடைத்த கோதுமை 1 ஆழாக்கு, உருளைக்கிழங்கு 1, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஒவ்வொன்றும் 50 கிராம், வெங்காயம் 2, பச்சை மிளகாய் 4, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 1, கொத்தமல்லித்தழை 1 கட்டு, புதினா 1 கட்டு, பட்டை, கிராம்பு சோம்பு வாசனைக்கு ஏற்றபடி, கடலை எண்ணெய் 1 தேக்கரண்டி.செய்முறை -  முதலில் உடைத்த கோதுமையை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை நறுக்கி வைத்து கொண்டு, வெங்காயம், புதினா, மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி,பட்டை, சோம்பு கிராம்பு இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா, வெங்காயம், புதினா, மல்லி இலை போட்டுக் கிளறவும். பிறகு நறுக்கி வைத்த காய்கறிகளைப் போட்டு தண்ணீர் விட்டு  வெந்தவுடன் வேகவைத்த கோதுமையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கோதுமை பிரியாணி தயார்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News