25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Jun 15, 2024

சோயா 65

தேவையான பொருட்கள் சோயா 1 கப், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், சீரகப் பொடி அரை டீஸ்பூன், கரம் மசாலா 1 டீஸ்பூன், வத்தல் பொடி 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழம் சாறு அரை மூடி, தேவையாள அளவு உப்பு, தண்ணீர் 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 10 கறிவேப்பிலை 1 கொத்துசெய்முறை தண்ணீர் கொதிக்க வைத்து அத்துடன் உப்பு சேர்த்து சோயாவை போட்டு அடுப்பை அனைத்து 10 to 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நன்றாக வடித்து பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சோயா, எல்லா பொடிகளையும் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து விட்டு 10 நிமிடங்கள் வைக்க வேண்டும்.பின் எண்ணெயை காய வைத்து சோயாவை பொறித்து எடுக்கவும். சோயா மொறு மொறுவென்று பொரிந்ததும் எடுத்து வைக்கவும். எண்ணெயில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை லேசாக வறுத்து இத்துடன் சேர்த்து கிளறி வைக்கவும். சோயா 65 ரெடி.   

Jun 15, 2024

சோயா தயிர் கிரேவி

 தேவையான பொருட்கள் - தயிர் 1 கப், சோயா 1 கப், வெங்காயம் 1 பொடியாக வெட்டியது, மல்லித்தூள் 1 ஸ்பூன், மிளகாய் தூள் ஒன்றரை ஸ்பூன், கடலை மாவு 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் அரை சிட்டிகை, கரம் மசாலா தூள் அரை ஸ்பூன், பேஸ்ட் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு. பட்டை, கிராம்பு, ஏலக்காய் 1, சீரகம் சிறிதளவு, வெண்ணெய் 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், மல்லி தழை சிறிதளவு. செய்முறை  -ஒரு மிக்ஸிஜாரில் தயிர், வெங்காயம், மல்லித்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வழுவழுவென்று அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் தேங்காய் எண்ணெய், வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பெருஞ்சீரகம், சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கி, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து விட்டு இதை 5 முதல் 7 நிமிடம் மூடி வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், வெண்ணீரில் ஊற வைத்த சோயாவை பிழிந்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, மல்லி இலை சேர்த்து இறக்கி வைக்கவும். சோயா தயிர் கிரேவி தயார். 

Jun 15, 2024

சோயா உருண்டை குழம்பு

 தேவையான பொருட்கள் - சோயா 1 கப்,சோம்பு, சீரகம் தலா அரை ஸ்பூன், கரம் மசாலா கால் ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், கடலை மாவு கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் 10, பூண்டு 10 பல், தக்காளி 2, தேங்காய் சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, தாளிக்க / பட்டை, கிராம்பு ஏலக்காய், கறிவேப்பிலை.செய்முறை - சோயாவை அரை மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து, நன்றாகப் பிழிந்து எடுத்து, சோம்பு சீரகம், சேர்த்து மிக்ஸியில் கொர, கொரப்பாக அரைத்து அத்துடன் கரம் மசாலா, மல்லித்தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு எடுத்து நன்றாகக் கலந்து உருண்டை பிடித்து 1 உருண்டை அளவு எடுத்து வைத்து விட்டு மீதி உருண்டைகளை ஆலியில் வேக வைக்க வேண்டும்.பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஆவியில் வெந்த சோயா உருண்டைகளை லேசாக பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் ஆக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து தேவையான உப்பு கலந்து நன்றாக கொதிக்க விடவும். இத்துடன் எடுத்து வைத்த சோயா உருண்டையை தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசைன போனவுடன் பொரித்த சோயா உருண்டைகளைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

Jun 08, 2024

பத்திய ரசம்

தேவையான பொருட்கள் : புளி -நெல்லிக்காய் அளவு, மிளகு  ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. -செய்முறை: புளியை நேரடியாக அடுப்பு தணலில் காட்டி திருப்பி, திருப்பி சுட்டு அதை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பிழிந்து, புளிக்கரைசல் தயார் செய்யவும். மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும். கடாயில் புளிக்கரைசல் விட்டு, உப்பு,  பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மிளகு - சீரகப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்த ரசத்தை ஊற்றிக் கலந்து சாப்பிடலாம். இதை பிரசவித்த பெண்களுக்குத் தருவார்கள். இதற்கு தாளிக்கக் கூடாது.  

Jun 08, 2024

மிளகு - மல்லி ரசம்

தேவையான பொருட்கள் : மிளகு - 2 டீஸ்பூன், மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், ரெடிமேட் ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தக்காளி - ஒன்று, புளி - சிறிதளவு, வெல்லம் அல்லது சர்க்கரை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 2, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: நெய்யில் மிளகு, தனியாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியில் 2 கப் நீர்விட்டு புளிக்கரைசல் தயார் செய்யவும். கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டுப் பல், நறுக் கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது மிளகு-தனியா பொடி, ரசப்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிவந்தவுடன் இறக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்த மல்லித்தழை தூவி, ரசப் பாத்திரத்தை மூடவும். ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய உடனேயே மூடிவிட்டால், ரசத்தின் மணம், சுவை அப்படியே கிடைக்கும்.

Jun 08, 2024

மோர் ரசம்

தேவையான பொருட்கள் : புளித்த தயிரை கடைந்த மோர் - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை -  சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: மோருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிவிட்டு நிறுத்தவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து மோரில் சேர்க்கவும். (விருப்பப்பட்டால் பெருங்காயத் தூளும் சேர்த்துக்கொள்ளலாம்). 

Jun 08, 2024

புதினா - இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள் : புதினா (ஆய்ந்தது) கால் கப், இஞ்சி ஓர் அங்குலத் துண்டு (10 கிராம்), மோர் - 3 கப், கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்பசெய்முறை: இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். பிறகு கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து, பாத்திரத்தில் உள்ள புதினா - மோர் கலவையில் சேர்க்கவும்.மோர் கலவையை அடுப்பில் வைக்க வேண்டாம்.  

Jun 08, 2024

வெங்காய ரசம்

தேவையான பொருட்கள் : நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித்தண்ணீர் - 2 கப், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப. -செய்முறை: தனியா, இஞ்சித் துருவல், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் எண்ணெயில் வதக்கி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். 

Jun 08, 2024

முடக்கத்தான் கீரை ரசம்

தேவையான பொருட்கள்:முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடியளவுமல்லிவிதைகள் – 2 ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்மிளகு – ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்பூண்டு – 3 பல்தக்காளி – 1புளி – நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவையான அளவுதாளிக்க தேவையான பொருட்கள்எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – கால் ஸ்பூன்உளுந்து – கால் ஸ்பூன்வரமிளகாய் – 1கறிவேப்பிலை – ஒரு கொத்துபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைசெய்முறை:கடாயில் எண்ணெய் சேர்த்து முடக்கத்தான் கீரையை வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவிடவேண்டும்.ஒரு மிக்ஸி அல்லது உரலில் வரமல்லி, சீரகம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.தக்காளியையும் கைகளால் கரைத்தோ அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்தோ வைத்துக்கொள்ள வேண்டும்.பூண்டையும் தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். இவையனைத்தையும் கொதிக்கும் இலைகளுடன் சேர்க்கவேண்டும். அடுத்து புளிக்கரைசல் சேர்த்து அடுப்பை குறைத்துவிடவேண்டும்.இந்த கலவை நன்றாக கொதித்தவுடன், மற்றொரு கடாய் அல்லது தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உடைத்த வரமிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.முடக்கத்தான் கீரை ரசம் தயார்

Jun 01, 2024

அவல் கஞ்சி

தேவையானவை: அவல் - ஒரு கப் , பொட்டுக்கடலை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பால் - 3 கப், துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். அடி கனமான கடாயில் பால் ஊற்றி நன்றாக காய்ச்சவும். பிறகு தீயைக் குறைத்து, பொடித்த அவல் - பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இறக்கும் சமயத்தில் துருவிய வெல்லம் சேர்த்துக் கலந்து இறக்கவும். வயதானவர் முதல் குழந்தைகள் வரை  யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் கஞ்சியைத் தரலாம்.குறிப்பு: சிவப்பு அவல் கூட பயன்படுத்தலாம். அவலில் மண் இருக்கும் என்பதால் நன்கு சுத்தம் செய்து உபயோகிக்கவும்.

1 2 ... 8 9 10 11 12 13 14 ... 21 22

AD's



More News