நம்முடைய இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் ஏலக்காய் பயன்பட்டு வருகிறது.சமீபத்திய ஆய்வு ஒன்று வைரஸ்களுக்கு எதிராக நம்முடைய உடலைத் தயார் செய்யும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு என்று கூறுகிறது.ஜப்பான் நாட்டில் உள்ள ஷின்ஷு பல்கலை ஆய்வாளர்கள் வைரஸ் நோய் களுக்கு தாவரங்களில் உள்ள சேர்மங்கள் எப்படி தீர்வாக அமையும் என்பது குறித்து ஆராய்ந்து வந்தனர். அப்போது ஏலக்காயில் உள்ள 1, 8 சினியால் எனும் சேர்மம் வைரஸ்களுக்கு எதிராக உட லில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் போராடுவதற்கு உதவும் என்று கண்ட றிந்தனர். இதை நேரடியாக சோதிக்க வேண்டும் என்பதற்காக மனித நுரையீ ரலில் இருக்கும் A549 எனும் செல்களை தனியே பிரித்தனர். அதன் மீது 1, 8 சினி யாலைச் செலுத்தினர். பிறகு அதே செல் களுக்குள் வைரஸையும் செலுத்தினர்.இந்த சினியால் செல்களில் இருக்கிற நியூக்ளியர் அமிலங்களை தூண்டி விட்டது. இந்த அமிலங்கள் வைரஸின் டிஎன்ஏ, ஆர்ஏ மூலக்கூறுகளை புரிந்து கொண்டன. வெகு குறைந்த நேரத்தில் இந்த அமிலங்கள் சைட்டோகைன்ஸ் எனும் நோய் எதிர்ப்பு செல்களுக்கு சமிக்ஞை கொடுத்தன. இதனால் நம்முடைய உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்பட்டு வைரஸை சுலபமாக அழித்தன.எனவே வெளியில்இருந்து மருந்து கொடுக்காமல் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை துாண்டி வைரஸுக்கு எதிராக போராட வைக்கும் ஆற்றல் ஏலக்காயில் உள்ளது என்பது இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
புதினாMint(Puthina)Leaves புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலிய தொல்லைகளுக்கு வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம்.கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மண மூட்டுவதற்காகப் பயன் படுத்தப்படுகிறது.நல்ல வாசம் மட்டும் அல்ல,16 பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்தது. இதில், ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ் உள்ளது. மேலும் பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளது. வைட்டமின் சி, டி, இ, ஏ போன்ற நோய் எதிர்ப்பு காரணிகளும் உள்ளன. இது செரிமானம் மற்றும் வாய் துர்நாற்றம் போக்கும். குளிர்ச்சி தன்மையை கொண்டது. புதினா. இதை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.தினமும் உணவில் புதினாவை சேர்த்து கொள்வதால், கோடையில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
.வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன.வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கொண்ட வெந்தயக் கீரை, குளுக்கோஸை கட்டுப்படுத்தும், கிளைசெமிக் நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்ஷியம், எலும்பு பலவீனத்தை தடுக்கிறது.இதன் குளிர்ச்சி தன்மை, உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியை கொடுக்கும்.கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால், விரைவாக குணமாகும்.வெந்தயக் கீரையை வேக வைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தால் வரும் மயக்கம் சரியாகும்.வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்விதநோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால்,வெள்ளை பூசணி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.வெள்ளை பூசணியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால்,உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும்.தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது.சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில்6 நாள்10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையலவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியடையும், வயிற்றுப்புன்ணும் ஆறும்.ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்தஇலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும். தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும். தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.
1.முருங்கைக்கீரை. 2.சுண்டக்காய். 3. சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுவது. 4.சுண்ட வற்றல் குழம்பு (வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்). 5.எள் உருண்டை. 6.திராட்சை,மாதுளை. 7.கறி வேப்பிலை துவையல். 8.பீர்க்கங்காய். 9.உளுந்து களி. 10.உளுந்து இட்லி தோசை. 11.பொன்னாங்கன்னி கீரை. 12.வெள்ளாட்டு கறி எலும்பு சூப்,ஈரல். 13. நெல்லிக்காய்.
ஒரு மாதுளை இனிப்பைக் கொண்டுள்ளது. அதன் ரூபி விதைகள் தோலுக்குள் வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த விதைகள் உள்ளன. ஒவ்வொரு ஏரிலும் பாலிபினால்கள் மூடப்பட்டிருக்கும், அவை எந்தப் பழத்திலும் இல்லாத சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாகும். ஒரு நடுத்தர மாதுளை சுமார் 14 கிராம் இயற்கை சர்க்கரை, 3-4 கிராம் நார்ச்சத்து மற்றும் உங்கள் தினசரி வைட்டமின் சி தேவைகளில் கிட்டத்தட்ட 40% ஆகியவற்றை வழங்குகிறது.ரூபி விதைகள் பாலிபினால்களின் சிறிய சக்தி மையங்களாகும், அவை உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கும் மன அழுத்தம், மாசுபாடு மற்றும் நேரத்திலிருந்து உங்கள் செல்களைப் பாதுகாக்கின்றன. தினசரி ஒரு கைப்பிடி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இது வயதான சருமம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நாள்பட்ட நோய்களுக்குப் பின்னால் ஆக்ஸிஜனேற்றிகள் வயதானதை மெதுவாக்குகின்றன, சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கின்றன மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன.சிறந்த இதய ஆரோக்கியம், இரத்த ஓட்டம், நெகிழ்வான தமனிகள் மற்றும் மென்மையான இரத்த அழுத்தத்தைக் காட்டுகிறார்கள். காலையில் ஒரு கிளாஸ் சாறு உங்கள் உடலின் மிக முக்கியமான தசையின் கீல்களில் எண்ணெய் தடவுவது போன்றது, அதை வலுவாகவும் நிலையாகவும் வைத்திருக்க அமைதியான பராமரிப்பு. குடலை அமைதிப்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை தாளமாக வைத்திருக்கும் நார்ச்சத்தை சேர்க்கிறது. அரில்கள் வலுக்கட்டாயமாக இல்லாமல் சுத்தப்படுத்துகின்றன, அதிக உணவுக்குப் பிறகு கனத்தை குறைக்கின்றனமாதுளை, தொற்றுநோய்களுக்கு எதிராக உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. பருவகால மூக்கடைப்பு மற்றும் பெரிய அச்சுறுத்தல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் அதிக வெள்ளை இரத்த அணுக்களை உங்கள் உடல் உற்பத்தி செய்ய இது உதவுகிறது. நல்ல சருமம் குடலில் தொடங்குகிறது. மாதுளை நீரேற்றம் மற்றும் குணப்படுத்தும் சேர்மங்களைக் கொண்டுள்ளது, அவை மெல்லிய கோடுகளை மென்மையாக்குகின்றன ஜிம்மிற்குச் செல்பவர்களுக்கு அல்லது நீண்ட நாட்கள் கால்களில் அமர்ந்திருப்பவர்களுக்கு, மாதுளை சாறு கலவைகள் தசை வலியைக் குறைத்து விரைவாக குணமடைய உதவுகின்றன. விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் இதை உடற்பயிற்சிக்குப் பிறகு இயற்கையான பானமாகப் பயன்படுத்துகிறார்கள் நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்கிறதுநினைவாற்றலை வலுப்படுத்துகிறது, கவனத்தை மேம்படுத்துகிறது மற்றும் மூளையை முன்கூட்டிய வயதான மற்றும் மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.
சுண்டக்காய், அளவில் சிறியதாக இருந்தாலும், அதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சுண்ட வத்தல் என்பது காய்கறியை காயவைத்து செய்யப்படும் ஒரு வகை பதப்படுத்தப்பட்ட உணவாகும். இதுவும் சுண்டக்காயின் அதே நன்மைகளை வழங்குகிறது. சுண்டக்காய் நார்ச்சத்து நிறைந்தது, இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. சுண்டக்காயில் உள்ள சில சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் சுண்டக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல உணவாகும். சுண்டக்காய் வைட்டமின் சி நிறைந்தது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சுண்டக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. சுண்டக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. சுண்டக்காயில் உள்ள இரும்புச்சத்து மற்றும் புரதம் முடி வளர்ச்சிக்கு உதவும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப்பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகள் நலம் பெறும். சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களும், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும் மாவை உணவில் சேர்த்துவர, நல்ல பலன்கள் தெரியும்.நார்ச்சத்து நிறைந்த இந்த கிழங்கைசர்க்கரை நோயாளிகளும் ஓரளவு சாப்பிடலாம். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது என்பது மட்டுமல்ல பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியைஅதிகரிக்கவும் செய்கிறது.ரத்த சோகை உள்ளவர்களுக்கு பனங்கிழங்கு சாப்பிடுவது நல்லது ஏனெனில் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.உடல் பலவீனமாக உள்ளவர்கள் பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
* வேப்பங்கொழுந்து பொடியுடன், அதிமதுர பொடியை சேர்த்து, நீர் விட்டுக் கலந்து உலர வைக்கவும். உலர்ந்ததும் உருண்டைகளாக உருட்டி தினமும், மூன்று வேளை உட்கொள்ளவும். இப்படி செய்துவர, அம்மை நோய் விரைவில் உடலை விட்டு அகலும்*வேப்ப இலையை அரைத்து புண் மற்றும் கட்டி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால், புண் விரைவில் ஆறும்* வேப்பம் பூவை ரசம் வைத்து, உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்* வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால், முகப்பரு மறைந்து, முகம் பொலிவு பெறும்*வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து,உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், உடம்பில் உள்ள கொப்புளங்கள் பொரிந்து விடும்* வேப்ப இலையை அரைத்து சாறெடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பித்தம் தணியும்*தினமும் காலை, வெறும் வயிற்றில், சிறிது வேப்பங்கொழுந்துடன், ஐந்து மிளகு சேர்த்து சாப்பிட்டு வர, வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல தீர்வை கொடுக்கும்.வேப்பிலையை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பித்த மயக்கம் தெளியும்வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்ந்து அரைத்து, கால் வெடிப்பு, நகச்சுற்று போன்றவற்றிற்கு பற்றுப் போட்டால், நல்ல பலன் கிடைக்கும்வேப்ப இலையை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிட்டு வர, தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.சொரியாசிஸ், புழுவெட்டு நோய் மற்றும் சிரங்கு போன்ற நோய்களை போக்கும் வல்லமை வேப்பிலைக்கு உண்டுவேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்தால், சரும நோய்கள் அனைத்தும் தீரும்.* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்விவசாயத்தில் வேப்பிலை மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.