மணத்தக்காளி கீரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு ஆற்றல்மிக்க மூலிகை கீரை ஆகும்.மணத்தக்காளி கீரை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது கல்லீரல் நோய்கள் மற்றும் பித்த புழுக்கம் போன்ற பிரச்சினைகளை குணமாக்குகிறது.மணத்தக்காளி கீரை நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், ஜீரண செயலியை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.குழந்தைகளுக்கு உணவில் சேர்த்தால், மணத்தக்காளி கீரை அவர்களின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது பசிக்கும் உணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சரும குறைபாடுகளை நீக்குவதற்கும் மற்றும் பசிப்புண்கள், தீப்புண்கள் போன்றவற்றை குணமாக்குவதற்கும் மணத்தக்காளி கீரை பயனுள்ளதாக இருக்கிறது.சளி மற்றும் இருமல் போன்ற சுவாச கோளாறுகளை குணமாக்கும் தன்மை மணத்தக்காளி கீரையில் உள்ளது. மணத்தக்காளி கீரை உடலின் வீக்கம் மற்றும் வாதத்தை குறைக்க உதவுகிறது. வாதவலி, மூட்டு வலி போன்றவற்றில் இதன் பயன்படுத்துதல் சிறந்த பலனை தரும். மிதமான முறையில் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்ப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இது மூலிகை சீனி நோயாளிகளுக்கு கூடுதல் ஆதரவாக இருக்கிறது. மணத்தக்காளி கீரை உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது. இது சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்தது என்பதால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுப் பித்தம், குடல் சுரப்பு பிரச்சினைகளை குணமாக்கும் தன்மை இதில் உள்ளது. இதனால் இதயம் மற்றும் பித்த புழுக்கம் போன்ற பிரச்சினைகளும் குணமாகும்.
தென் அமெரிக்காவைப் பூர்வீகமாக உடையது அன்னாசி. பராகுவே, பிரேசில் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. புரோமிலியேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. தமிழகத்தில், பறங்கித்தாழை, செந்தாழை, பூந்தாழம்பழம் எனவும் அழைக்கப்படுகிறது.இதை ஐரோப்பா கண்டத்தில், 15ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார் இந்தாலிய மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ். பின், ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவிற்கு பரவியது. ஆசிய நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் இதை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்கின்றன. நம் நாட்டில், கேரளா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநில பகுதிகளில் பயிரிடப்படுகிறது.வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப காலநிலையில் செழித்து வளரும். ஒரு அன்னாசி செடி முழுமையாக வளர்ந்து பலன் தர, மூன்று ஆண்டுகள் ஆகும். நூற்றுக்கணக்கான சிறு பழங்களின் கூட்டாக உள்ளது அன்னாசிப்பழம்.இதிலுள்ள புரோமிலைன் என்சைம், செரிமானத்திற்கு உதவுகிறது.சாறு. ஜாம், சாலட், இனிப்பு, பதப்படுத்தப்ட்ட உணவாகவும் அன்னாசி பயன்படுகிறது. வைட்டமின் சி, மாங்கனீசு, நார்ச்சத்து நிறைந்தது.அன்னாசி இலையில் நார் தயாரித்து, துணி, கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் அன்னாசியில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில், கயீன் என்ற ரகம் மிகவும் பிரபலமானது. இதன் இனிப்பு கலந்த புளிப்புச் சுவை, உலகளவில் விரும்பப்படுகிறது.
கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவு ம் உள்ள பேரிக்காய், ஆப்பிளை விடவும் சத்து நிறைந்தது. இதனை பெண்களுக்கான வரப்பிரசாதம்.பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறுக ளை ஒழுங்குப்படுத்தக்கூடியது. 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து அளவில், 24 சதவீதம் பூர்த்தி செய்கிறது.கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெறும். குழந்தை பெற்ற பெண்கள் காலை மாலை 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.ஹீமோகுளோபின் பிரச்சனை மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், இந்த பேரிக்காயை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் கெட்ட கொழுப்பை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது. சிறுநீரகத்தில் படிந்துள்ளகற்களை வெளியேற்ற உதவுகிறது.உணவு சாப்பிடுவதற்கு முன் இந்த பழத்தை சாப்பிட்டால், உணவிலுள்ள கொழுப்பு உடலில் தங்குவது தடு க்கப்படுகிறது. 100 கிராம் பேரிக்காயில் 56கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைப்பதில் உதவுகிறது.பேரிக்காய் கிட்டத்தட்ட 84 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்தது. இதனால், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலுக்கு ஆற்றலை தந்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இந்த பேரிக்காயில் நிறைந்துள்ளது. இரவு சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.பேரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் நீங்கும். வாய்ப்புண மற்றும் வயிற்றுப்புண்களை நீக்குகிறது.உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இந்த பேரிக்காய்க்கு உண்டு. பேரிக்காய் சாப்பிட்டால், எலும்புகள், பற்கள் உறுதியாகும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் டைப் 2 நீரழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.
மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனியாக இருக்கிறது. மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடுவதும் சிறந்தது. மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் செரிமானத்திற்கு உதவும்.மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்துக் கள், செரிமான அமைப்பை சீராக இயங்கச் செய்து, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. வயிறு உப்புசத்தையும் கட்டுப்படுத்தும். குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மக்காச்சோளத்தில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை தடுக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ஆரோக் கியமான ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.கண் ஆரோக்கியத்தை காக்கும்.மக்காச் சோளத்தில் லுடீன் மற்றும் ஜியா சாந்தின் போன்ற ஆன்டி ஆக் சிடென்டுகள் அதிகம் உள்ளன. இவை கண் புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சினைகளை தடுக்க வல்லவை.நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக வெளியிட வழிவகை செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.நச்சுக்களை வெளியேற்றும்.மக்காச்சோளத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள நச்சுக்களை வெளி யேற்ற ஊக்குவிக்கும்.
காலிஃப்ளவர் குளிர்ப் பிரதேசக் காய்கறி. குளிர்காலத்தில் இது அதிகமாகக் கிடைக்கிறது. இத்தாலியில் அதிகமாக விளைவிக்கப்பட்டது.காலிஃப்ளவர் முதன்முதலில்ஆசியாவில்தான்பயிரிடப்பட்டது.எண்ணற்றமருத்துவக்குணங்கள்அடங்கியதுகாலிஃப்ளவர்.இந்தப்பூக்களில்பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் ஏ, சி, மாவுச்சத்து, புரதம், சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. கண் பார்வைக்குத் தேவையான கேரோட்டின் சத்து, நார்ச்சத்து ஆகியவை இந்தப் பூவில் அதிகம்.இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது.இது உஷ்ணத்தைத் தணிக்கும். இதைச் சாப்பிட்டால் சளி குறையும். உடல் வறட்சியைப் போக்கும். இருமல் குறையும், வாய் துர்நாற்றம் நீங்கும். உடல் இளைப்பு நீங்கும். காலிஃப்ளவர் மேனியை மினுமினுப்பாக்கும். தண்ணீரில் இந்தப் பூவை வேகவைப்பதைவிட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். அப்படி செய்தால் வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். மேலும், காலிஃப்ளவர் கொழுப்புச் சத்து இல்லாத காய்கறி, குறைந்த கலோரி கொடுக்கும். அதனால், இதய நோய்க்கு இதமான பூ இது. புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.
இலை மற்றும் தழைகளை உணவாக உட்கொள்ளும் விலங்குகள்அவற்றில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நேரடியாக பெறுகின்றன. ஆனால், மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் பல முக்கிய சத்துக்கள் வீணாகி விடுகின்றன.இதை தவிர்க்க, பல நாடுகளில் செடிகளின் இளந்தளிர்களை'சாலட்' ஆக உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. சிறப்பாக தேர்ந்தெடுத்த காய்கறிகள் மற்றும் தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து, அவை முளை விடும் பருவத்தில் சேகரித்து உணவாக பயன்படுத்துகின்றனர். இதையே ‘மைக்ரோ கிரீன்’ என அழைக்கின்றனர். இந்த முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் எந்த ரசாயன பூச்சிமருந்துகளும் இல்லாமல், இயற்கையாகவே வளரும். இளம் தளிர்களில் செறிந்த சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உணவாக உட்கொள்ள மிகச் சிறந்த தேர்வாகும்.மைக்ரோ கிரீன்ஸ், உடல் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி, இதய நோய், வகை-2 நீரிழிவு, சில வகை புற்றுநோய் மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையான ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மைக்ரோ கிரீன்ஸ் சிறந்த மாற்றாக இருக்கலாம்.
செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சீரகத் தண்ணீரைக் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு, செரிமானம் எளிதில் நடைபெறும். அதுமட்டுமல்லாமல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவையும் எளிதில் குணமாகும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.அதிக இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள், சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால், அதிலுள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து, வெறும் வயிற்றில் இந்த நீரைக் குடித்து வர இரத்த அழுத்தம் சீராகும்.சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
வேப்பமரத்தின் இலை, வேர், காய், பழம், பூ மற்றும் வேர் என அனைத்து பாகங்களிலும் மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது. அதனால்தான் வீட்டுக்கு ஒரு வேப்பமரம் முன்னோர்கள் வளர்த்தனர்.வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டது என்றாலும் வேப்பம் பூ அதில் சிறப்பு மிக்கது.வேப்ப மரத்தின் பூக்களை மென்று சாப்பிட்டால் ஏப்பம் வருவது, பசியின்மை மற்றும் வாயுத்தொல்லை சரியாகும்.வேப்பம் பூவில் துவையல் அல்லது ரசம் வைத்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும்.வேப்பம் பூவை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வர பித்தம் தெளியும்.வேப்பம் பூவில் உள்ள கசப்புத்தன்மை குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலை சுத்தப்படுத்தும்.சூடான நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினைகள் சரியாகும்.வேப்பம் பூவை தேனீராக செய்து குடித்து வந்தால் வயிறு பிரச்சினைகள், மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது. துரித உணவுகளை போல அல்லாமல் முழுவதும் ஆரோக்கியமானது.கடலை மிட்டாயில் நார்ச்சத்து, ப்ரோட்டீன், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளதுகடலை மிட்டாயில் உள்ள தாமிரம், துத்தநாகம் உடலின் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.கடலையில் உள்ள விட்டமின் ஈ, ஜிங்க் ஆகியவை தோல்களில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குகிறது.கடலை மிட்டாயில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள், பற்களை உறுதிப்படுத்துகிறது.கடலை மிட்டாயில் உள்ள செறிவான வைட்டமின் சத்துகள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது.கடலை மிட்டாயில் அதிகமான புரதச்சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.கடலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.கடலை மிட்டாயில் உள்ள வைட்டமின் பி3 சத்தானது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
சீஸனின் முதல் மாம்பழத்தைக் கையிலேந்தும்போது கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது. அந்த வருடத்தின் சீஸன் முடியும்போது ஏற்படும் வருத்தமும் விவரிக்க முடியாதது வருடம் முழுவதும் கிடைத்தால் என்னவென்று ஏங்க வைக்கும் அருஞ்சுவை கொண்டது மாம்பழம்..பலருக்கும் நம் நாட்டின் தேசியப்பறவையில், தேசிய மலர் தாமரை என்பது போன்ற தகவல்கள் தெரிந்திருக்கும். மாம்பழம் நம்முடைய தேசியக்கனி என்பது எல்லோருக்கும் தெரியாது. அதேபோல் மாம்பழத்துக்காகவே ஜூலை 22ம் தேதி தேசியமாம்பழதினம் கொண்டாடப்படுகிறது என்பதும் தெரிந்திருக்கும் வாய்ப்புக் குறைவு.இந்தியாவில் நூற்றுக்கணக்கான வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. மல்கோவா, கிளி மூக்கு,நடுசாலை, பங்கனப்பள்ளி, அல்போன்சா, மும்பை அல்போன்சா மாம்பழங்களுக்கும், ஐதராபாத் பங்கனப்பள்ளி மாம்பழங்களுக்கும் பெயர் பெற்றது. தமிழ்நாடு இமாம்பசந்த், மல்கோவா மற்றும் செந்தூரா மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றது.மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜன் புரதத்தை உடலில் சுரக்கவும் உதவி புரிகிறது. ரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத்திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும். இளமை இன்னும் சிறிது காலம் நீடிக்கும்..மாம்பழம் வாங்கும்போது தோல் பளபளவென்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். பளபளவென மினுக்கும் மாம்பழம் செயற்கை முறையில் ரசாயனத்தால் கனிய வைக்கப்பட்டதாக இருக்கலாம். கருப்புப் புள்ளிகள் உள்ள பழங்கள் இயற்கையாகப் பழுத்தவை. சுவையும் அதிகமாக இருக்கும்.தேங்காயைத் தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாம்பழங்களைத் தட்டிப் பார்த்துவாங்கலாம். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது என்றோ அல்லது அதிகம் கனிந்தது என்றோகண்டுகொள்ளலாம்.மாம்பழத்தால் பாதிப்பு ஏதும் வருமோ என்ற அச்சம் இருந்தால் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகு பயன்படுத்தலாம். இதன்மூலம் பழத்தின் மேல் இருக்கும் ரசாயனம் மற்றும் பூச்சி மருந்து போன்றவை நீங்கிவிடும்.மாம்பழங்களைத் தோல் சீவி, வெட்டிச் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும். வயிற்றில் அசௌகரியம் உண்டாகாமலும் இருக்கும். வயிற்று வலியும் ஏற்படாது. மாம்பழத்தில் புழுக்கள் இருக்கிறதா என்றும் கண்டறியவும் இந்த முறை உதவும்.