மருத்துவ பலன்கள் நிறைந்த தொட்டாற் சுருங்கி.
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது.
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில்6 நாள்10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையலவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியடையும், வயிற்றுப்புன்ணும் ஆறும்.
ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்தஇலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.
தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.
ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.
தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.
0
Leave a Reply